Tuesday, November 13, 2012

தங்க கல்லறை - விமர்சனம்


என் மன வானில்

தங்க கல்லறை நான் மிக எதிர் பார்த்த ஒரு புத்தகம். டைகர் ரசிகர்களால் சிலாகிக்கப் பட்ட
ஒரு புத்தகம்.மொழி பெயர்ப்பு சரியில்லை, எழுத்து பிழைகள் என்று வாசகர்கள் சிலர்
குமுறியதற்கு காரணம் டைகர் மேல் வைத்திருக்கும் அபிமானமே ஒரு நல்ல கதை சில
குறைகளால் சிதைந்து போக கூடாது என்ற எண்ணமே காரணம்.


நான் எந்த பதிப்பையும் வாசிக்கவில்லை. அதனால் எந்த விமர்சனத்தையும் மனதில் ஏற்றாமல் வாசிக்க ஆரம்பித்தேன். டைகரை யுக்திகளின் மன்னன் என்று என் “மரண நகரம் மிசௌரியில்” சொல்லி இருந்தேன்.அந்த கதையில் டைகர் மட்டும் தான் யுக்திகளின் மன்னன் , ஆனால் இங்கோ வில்லன் கஸ்ட்டாப், டெபுடி ஜிம்மி, டைகர் மற்றும் வாலி என்று அனைவரும் யுக்திகளின் மன்னனாக இருக்கிறார்கள்.

ஓவியப் பார்வை

1) பறவை பார்வையில் ஒரு மேற்கத்திய நகரம்


2) பின்னால் தெரியும் நிலவை பாருங்கள்.3) நீல பின்னணியில் குதிரை வீரன்4) இரவு நிலவில் வீடு


5) இரவு தீயில் ஒளியின் நடனம்6) மலையில் இறங்கும் அப்பாசே வீரர்கள்7) டைனமைட் வெடிக்கும் அழகு
8) தலை குப்புற விழும் குதிரைகள்


9) இரவு நட்சத்திரம், தகிக்கும் வெயில்

10) பின்னால் சூரியனுடன் நிற்கும் சூரியன்


11) பறவை பார்வையில் கணவாய்


12) நீல இரவு நிலவு
13) வெளிச்சத்தில் கொடூரமான கஸ்ட்டாபின் முகத்தை பாருங்கள். பாதி நிழல் பாதி வெளிச்சத்தில் பயங்கரமாக காட்சி அளிக்கிறது.14) மறையும் சூரியனின் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக மலையின்  மேலே ஏறுவதை பாருங்கள் 
15) இந்தியானா ஜோன்ஸ் படத்தில் வருவது மாதிரியான ஒரு மலை முகப்பு16) தரையில் இருந்து வைத்த ஷாட் மாதிரி இருப்பதை பாருங்கள். அந்த குண்டத்தின் முழு பரிமாணமும் தெரிகிறது


 

17) இரவு நெருப்பின் நடனம். ஓவியரின் ஒளி விளையாட்டு


18) தண்ணீர் குடிக்காமல் வறண்டு வெளுத்து போன கஸ்ட் டாபின் உதடுகளை பாருங்கள்.19) தூண் போன்ற செம் மலை 
டைகர் ஒரு சட்ட காவலன்

1) சட்டத்தை தன் உயிர் மூச்சாக நினைப்பவர் டைகர். அதனால் தான் ஜிம்மியையும், கஸ்ட்டாப்பாயும் காப்பாற்ற ஒருத்தனுடைய குதிரையை பிடுங்கி கொண்டு வருபவர், தன்னை காப்பற்றிக் கொள்ள வாலியையோ கோலயோ மிரட்டாமல் தன் உயிரையே பாலைவனத்தை கடப்பதில் பணயம் வைக்கிறார். அந்த கடமைக்கு ஆண்டவன் கொடுக்கும் பரிசுதான் அந்த வழியே அபூர்வமாக ஒரு கூட்டத்தை வர வைத்து காப்பாற்றுகிறார்.

2) ஜிம்மியை காப்பாற்ற வரும்போது ஜிம்மியை அவிழ்க்க சொல்லுவார். கோல் உடனே “இப்போது என்னை சுட்டால் திட்ட மிட்ட கொலையாகும்” என்று சொல்ல அதன் பின் துப்பாக்கியாலேயே சுட்டு கயிற்றை அவிழ்த்து விடுவார்.


3) ஜிம்மி பேராசையால் வந்தாலும் அவருடைய நல்ல குணங்களை இழக்கவில்லை. சவ வண்டி ஓட்டுபவரை சுட்டுக் கொல்லாமல் காப்பாற்றுகிறார்.

4) லக்னர் சுரங்கத்தை வெடி வைத்து டைகரை கொல்லாமல் காப்பாற்றுகிறார்.

5) இறந்தவர்களின் பிணங்களை புதைத்து விட்டு செல்கிறார். அதனால் தான் அவரும் காப்பாற்ற படுகிறார்.


டைகரின் யுக்திகள்

1) வெளியில் கஸ்ட்டாப் இருந்தால் பக்னரால் ஆபத்து என்று தெரிந்து கொண்டு அவனை ஜெயிலில் அடைப்பதோடு டைகரின் யுக்தி தொடங்குகிறது.

2) ஜெயிலில் அடைத்தவுடன், இரவில் வேறு ஒரு கலவரம் என்றவுடன், அது கஸ்ட்டாப்பை கொல்வதற்கான முயற்சியாக இருக்கலாம் என்று தெரிந்து கொண்டு , ஜிம்மியிடம் விளக்கை அணைத்து விட்டு, ஏதாவது ஆபத்து என்றால் மும் முறை சுட்டு சமிக்ஜை கொடுக்க சொல்வது.

3) ஜிம்மி கடத்த பட்டானா , தானே போனானா என்பதை அவன் சேமிப்பை பதுக்கும் இடத்தைப் பார்த்து முடிவு செய்வது.

4) சுரங்கம் விழப்போவது தெரிந்ததும் ஒரு இரும்பு வேகனுக்குள் பதுங்குதல்

5) பாறை மேலிருந்து விழுந்ததும் கிளம்பிய தூசியை சாதகமாக பயன் படுத்தி செத்து விட்டது போல் நடித்து மேலிருந்து தள்ளி விட்ட கஸ்ட்டாப்பை கீழே வரவழைத்து பிடிப்பது.

6) போர்வையை குதிரையின் காலில் கட்டி சத்தம் எழாதவாறு செல்லுதல்

7) ஜிம்மியை வாலி மற்றும் கோலிடம் இருந்து காப்பாற்றும் போது சூரியன் தனக்கு பின் வருமாறு சற்றே உயரமான பாறையின் மீது நிற்றல். உயரத்தில் இருப்பவனுக்கு வாய்ப்பு அதிகம். சூரியன் பின்னே இருப்பதால், எதிரிகள் திரும்பினால் அவர்கள் கண்ணில் சூரிய ஒளி தாக்கும் ஒழுங்காக குறி வைக்க முடியாது. (இதை ஒரு டெக்ஸ் கதையிலும் படித்ருக்கிறேன் , பெயர் தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே.)
ஜிம்மியின் யுக்திகள்

1) எதிரிகள் புகை மூட்டம் போடுவதை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டு தான் வெளியே வருவதாக சொல்லி விட்டு தன் உடையில் கஸ்ட்டாப்பை வெளியே அனுப்புதல். புகை மூட்டத்தாலும், ஜிம்மியின் பேச்சாலும், ஜிம்மியின் உடையாலும் எதிரிகள் கஸ்ட்டாப்பை ஜிம்மி என்று நினைத்து விட்டு விடுகிறார்கள்.  

2) தான் கஸ்ட்டாப் மாதிரி உடை அணிந்து கொண்டு ஜெயில் உள்ளே படுத்துக் கொண்டு டைகர் வரும் வரை எதிரிகளை தாமத படுத்துதல்.

3) தன் துப்பாக்கியை கஸ்ட்டாப்புக்கு கொடுத்தாலும் காலியாக கொடுத்தல்.

4) தவறாக திசை காட்ட ஒருவனை எல்லையில் உட்க்கார வைத்து விட்டு அவனுக்கே தெரியாமல் சவ வண்டியில் போதல் ஏனென்றால் அடித்து கேட்டால் அவன் சொல்லிவிடுவான் என்பதால்.

5) ரெண்டு குதிரையை திருடி இருப்பதாலும்., குதிரையில் போனால்தான் விரைந்து போக முடியும் என்று எல்லோரும் நினைத்து கொண்டிருக்க ஜிம்மி சவ வண்டியில் போதல். யாரும் சந்தேக பட மாட்டார்கள்

6) தன்னை பின் தொடர்ந்து வருபர்களை விட வேகமாக போக குறுக்கு வழியாக சுரங்க பாதையை தேர்ந்தெடுத்தல்

7) தான் கூட வைத்திருப்பது விரியன் பாம்பு, தன்னை என் நேரத்திலும் கடிக்காமல் விடாது என்பதை சுரங்கத்தை வெடிக்க வைத்ததில் இருந்தும், சவ வண்டிக்காரனை கொல்ல முயன்றதில் இருந்தும் அறிந்த ஜிம்மி கஸ்ட்டாப்புடைய துப்பாக்கியை பிடுங்கி வைத்துக் கொள்ளுதல்

8) அப்பாச்சே செவ்விந்தியர்களால் தாக்கப் படும்போது குறுகலான இடத்தில் தான் நிறைய பேர் நெருக்கி அடித்துக் கொண்டு வருவார்கள் என்று தெரிந்து கொண்டு அந்த இடத்தில டைனமைட்டை பற்ற வைத்து நிறைய நாசம் விளைவித்தல்.

9) முட்டுப் பாதை என்று தெரிந்ததும் நம்பிக்கை இழக்காமல் சரிவு பாதையில் தப்பித்தல்

10) மொச்சு மொச்சு என்று கஸ்ட்டாப் சாப்பிடுவதை பார்த்து விட்டே அவன் உயர் குடும்பத்தில் பிறந்தவன் இல்லை என்று தெரிந்து கொள்ளுதல்

11) தூங்கும்போது துப்பாக்கியை தன் கையோடு கட்டி கொள்ளுதல்

கஸ்ட்டாப்பின் யுக்திகள்

கஸ்ட்டாப் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன் என்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கிறான். மற்றவர்களின் பேராசையில் குளிர் காய்வது அவனுக்கு ஒரு பொழுது போக்கு.

1) ஜிம்மிக்கு தங்க ஆசை காட்டுதல், அவன் சற்று யோசிக்கும் போது ஜிம்மியின் பலவீனமான வித விதமாக குடிக்கலாம் என்று ஆசை காட்டி அவனை தன் வழிக்கு இழுத்தல்.

2) ஜிம்மி தன் துப்பாக்கியை பிடுங்கி கொண்டாலும் தன் மூக்கு கண்ணாடியை வைத்தே டைனமைட்டை பற்ற வைத்தல்

3) குறுகிய வழியில் தவழ்ந்து வெளி வரும் போது வெளியே உள்ளவர்கள் மிக சுலபமாக தன்னை கொன்று விட முடியும் என்பதால் ஒரு குச்சியில் வைத்து தன் தொப்பியை காண்பித்தல். இதனால் ஆள்தான் வெளியே வருகிரான் என்று வெளியே இருப்பவன் தாக்க முயல்வான். அதை வைத்து வெளியே எதிரி இருக்கிறானா என்று அறிந்து கொள்ளலாம்.
4) காலில் துணியை கட்டி கொண்டு ஓடுதல்

5) வாலியிடம் என்னை கொன்று விட்டால் உன்னால் தங்கத்தை கண்டு பிடிக்க முடியாது என்று சொல்லியே உயிர் தப்பித்தல்

6) புதை மணலில் வாலியை ஏற சொல்லுதல் பின்பு அங்கு கிடைக்கும் விரியன் பாம்பை ஒரு ஆயுதமாக்கி கொள்ளுதல்.

7) உச்சகட்டமாக வாலியின் காலணியை வாங்கி அதில் தான் பிடித்த விரியன் பாம்பை பிடித்து போட்டு வைத்தல்

8) நிலவறைக்குள் விழுந்த போது கூட குருட்டால் போக்கில் மேல் தளத்தை சுட்டு அதில் பட்டு வரும் தொட்டவின் மூலம் சுட்டு லக்கனரை காயப் படுத்துதல்.

9) துணியில் ரைபிளை கட்டி நிலவறையில் இருந்து வெளியேறுதல்.

வாலியின் யுக்திகள்

1) செவ்விந்தியர்களிடம் இருந்து தப்பித்து வரும்போது தனக்கு தேவை இல்லாத டைரையும் ஜிம்மியையும் செவ்விந்தியர்களிடம் மாட்ட வைக்க அவர்களின் குதிரைகளை சுடுவது. அவர்களை கொல்ல செவ்விந்தியர்கள் சிறிது நேரம் எடுத்து கொள்வார்கள் அந்த நேரத்தில் தான் தப்பிவிடலாம் என்று யோசனை பண்ணி செய்வான்.

2) கஸ்ட்டாப் மட்டும் தான் தங்கம் இருக்கும் இடம் அறிவான். அவன் வேணுமென்றே தன்னை தேவை இல்லாமல் சுற்றிக் காட்டி அசந்திருக்கும் நேரத்தில் கொன்று விடாமல் இருக்கவும், சீக்கிரம் சுரங்கத்தை அடையவும் கஸ்ட்டாப்புக்கு சுரங்கத்தை பார்க்கும் வரையில் தண்ணீர் கொடுக்க மறுப்பது. அதனால் கஸ்ட்டாப் வேறு வழி இல்லாமல் சீக்கிரம் சுரங்கத்தை கண்டுபிடித்தாக வேண்டும்.

3) தூங்கும் போது வாலி, கஸ்ட்டாப்புக்கு கைக்கும், காலுக்கும் விலங்கு போட்டு வைத்தல். கைக்கு போட்டால் அந்த விலங்கை வைத்தே மிக வேகத்துடன் வாலியின் கழுத்தை  அழுத்தி கொன்று விட முடியும்.

4) நிஜ லக்னரை பிடிக்க அதனிடமான மலைகளில் இருக்காமல் வெட்ட வெளியில் கஸ்ட்டாப்பை இரையாக வைத்தல்

முரண் 

உயிருக்கு பயந்து மின்னல் வேகத்தில் குதிரை ஓட்டும்போது அடிக்கும் காற்றில் எப்படி சுருட்டு பற்ற வைப்பது ?


டைகருடைய மரண நகரம் மிசெளரி - பல்கோண பார்வை   படித்து விட்டீர்களா ?

_______________________________________________________________________________

நான் குறைகளை எழுதியதால் கோபப்பட்ட நண்பர்களுக்கு இந்த விமர்சனம் சமர்ப்பணம். இதை படித்தால் நான் எவ்வளவு அனுபவித்து இந்த கதையை படித்திருக்கிறேன் என்று தெரியும். 

_______________________________________________________________________________

Post Comment

15 comments :

 1. இது; இது; இதைத்தான் எதிர்பார்த்தேன். இந்தப் பதிவை முதலிலும், குறைகளாகத் தோன்றியதைப் பின்பும் பதிவிட்டிருந்தால் இன்னும் சிறப்பானதொரு விமர்சன வழிமுறையாக இருந்திருக்கும்.
  கொஞ்...சம் லேட் என்றாலும் உங்களது வழக்கமான பாணியில் மறுபடியும் நல்லதொரு பதிவை காணவைத்திருக்கிறீர்கள். நன்றி!

  பின் குறிப்பு:
  1. சூரிய ஒளி கண்களை கூசச் செய்து எதிரியை சுட்டு வீழ்த்தும் டெக்ஸ் கதை 'பழிக்குப் பழி'.

  2. முரண் என்ற நீங்கள் கூறியிறுப்பது குறித்து:
  நியாயமான கேள்விதான் என்றாலும், உங்களின் இச்சந்தேகம் என் சிறுவயதில் அடிக்கடி நான் பார்த்த ஒரு நிகழ்வை ஞாபகப்படுத்துகிறது. என் நெருங்கிய உறவினர் ஒருவர் சைக்கிளில் வேகமாகச் சென்றபடியே, இரு கைகளையும் விட்டுவிட்டு, ஓரிரு முயற்சிகளிலேயே வாயில் இருக்கும் பீடியை பற்றவைத்துவிடுவதை பல முறை அந்தச் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து சென்றபடியே கவனித்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. முதலில் குறை சொல்ல வேண்டும் என்று அந்த பதிவை முதலில் போடவில்லை. ஒரே பதிவாக எழுதலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் மிக நீண்ட பதிவாக போய்க்கொண்டிருந்தது. போட்டோ வேறு எடுக்கவில்லை அதனால் தன போட்டோ தேவைப் படாத அந்த பதிவு முதலில் வந்தது.

   பழிக்கு பழிக்கு நன்றி :D

   நிறைய பயிற்சி இருந்தால் சாத்தியம் தான் என்று தோன்றுகிறது. ஜப்பானில் ஓடும் குதிரையில் இருந்து சரியாக அம்பு விடுவதை பார்த்திருக்கிறேன்

   Delete
 2. ஹாப்பி தீபாவளி!!!
  அனைவருக்கும்!!!!!

  ReplyDelete
 3. என்னமா ரசிச்சு படிக்கிறீங்க...

  முதல் மொழிபெயர்ப்பு
  பயன் படுத்தப்பட்டிருந்தால்

  இந்த தங்க கல்லறைய
  மிஞ்ச இன்னொரு கதை உண்டா...

  ஹும் பெருமூச்சுதான் விட முடியுது...

  ReplyDelete
  Replies
  1. ஹதம் ஹதம். முடிந்தது முடிந்தது .விடுங்கள். புள்ளைகளப் போய் படிக்க வைப்போம் வாருங்கள் :D

   Delete
 4. நிறைவான விமர்சனம்.

  ReplyDelete
 5. நல்ல விமர்சன பதிவு நண்பரே :-) வழக்கம் போல் ஓவியம் முதல் யுக்திகள் வரை சூப்பர் :)

  ReplyDelete
 6. Alagiya vimersanam.intha padivai paditha pinner meendum padika thondrugiradu.

  ReplyDelete
 7. உங்களுடைய தனித்தன்மையுடன் விமர்சித்து உள்ளீர்கள். நிறைவாக உள்ளது.
  எந்த காரணத்தைக்கொண்டும் இந்த பாணியை மாற்றி விடாதீர்கள். வாழ்த்துக்கள் ராஜ்.
  இரும்புக்கை எத்தன், பரலோகப்பாதை மற்றும் இரத்தத்தடம் ஆகியவற்றுக்கான உங்கள் விமர்சனங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 8. @Soundar SS :நன்றி சௌந்தர்

  ReplyDelete
 9. @COMICSPRIYAN: நன்றி COMICSPRIYAN . நானும் இரும்புக்கை எத்தன், பரலோகப்பாதை மற்றும் இரத்தத்தடம் வர காத்துக் கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 10. @Paranitharan K :நன்றி. உங்களுடைய சில பின்னுட்டங்கள் ஸ்பாமில் சிக்கி கொண்டிருந்தது இன்றுதான் பார்த்தேன்.

  மீண்டும் நீங்கள் புத்தகத்தை வாசிப்பதுதான் இந்த பதிவின் முழு வெற்றி. நன்றி அதற்காக.

  ReplyDelete