Monday, November 19, 2012

ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல் (Not a Penny More Not a Penny Less - By Jeffrey Archer)என்  மன வானில் 

நான் சிங்கப்பூரில் இருக்கும் போது ஒரு விபரீத ஆசை வந்தது. சிங்கப்பூரில்
நான் H.D.B  என்று சொல்லப் படுகிற Housing Development Board இல் சாப்ட்வேர் என்ஜினியர் ஆக
வேலை பார்த்தேன். அது ஒரு அரசுத்துறை நிறுவனம் என்பதால் 8.30  முதல் 6 மணி வரை 
மட்டுமே வேலை. 6 மணிக்கு துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு போய் கொண்டே
இருக்கலாம். இருக்கும் நிறைய நேரத்தை முதலில் சுற்றி பார்ப்பதில் செலவளித்தேன்.
ஆனால்  ரெண்டு  வார இறுதியில் எல்லா இடத்தையும் சுற்றி முடித்து விடலாம்.   அதற்க்கு
பிறகு எனக்கு துணை, நூலகம் மட்டுமே. ஆங்கிலத்தை எதிர் நீச்சல் போட்டு கற்றுக் கொண்டு
சிங்கப்பூர் வரை வந்தாலும் ஆங்கில புத்தகங்கள் வாசிப்பது மட்டும் ஒரு கனவாக இருந்தது.
வாசிப்பவர்களை பார்த்தால்  அவர்களை ஐன்ஸ்டீன் அளவுக்கு நினைத்துக் கொண்டு
இருந்தேன். இப்போது புரிந்திருக்குமே என் விபரீத ஆசை என்ன என்று.

எனக்கு இருந்த பிரச்னை  எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதுதான். பக்கத்தில் டிக்ஸ்னரி வைத்துக்
கொண்டு வாசிப்பதால் அந்த கதையின் சுவாரஸ்யமே கெட்டு விடுவதாக நினைத்தேன். அதனால் என் நண்பர் பிரசன்னாவிடம் கேட்டபோது அவர்  சொன்ன புத்தகம்
ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய "Not a Penny More Not a Penny Less".  ரொம்ப சிம்பிள் ஆக இருக்கும்
என்றார். நூலகத்தில் இருந்து எடுத்து வாசிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க மனமில்லை
அலுவலகம் செல்லும்போது கூட  பேருந்தில் வாசிக்க ஆரம்பித்தேன். எனக்கும் ஒரு
ஐன்ஸ்டீன் களை வந்த மாதிரி ஒரு பீலிங். பக்கத்தில் இருக்கும் அழகான பெண்கள் எல்லாம்
என்னை மரியாதையுடன் (காதலுடன் என்று கூட வைத்துக் கொள்ளலாம் ஹி ஹி ) பார்ப்பது
மாதிரி பீலிங். இதுக்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று நினைதுக் கொண்டு வாசித்து
முடித்தேன்.  அதன் தமிழ் மொழி பெயர்ப்பு இது.

சர் ஜெப்ரி ஆர்ச்சர் (ஆமாம் சர் பட்டம் வாங்கியவர்) தன்னுடைய கதாபாத்திரங்களை
வர்ணிப்பதில் மன்னன். வர்ணித்து முடித்த பிறகு உங்கள் மனதில் ஒரு பிம்பத்தை
உருவாக்கி விடுவார். மிக எளிமையான டிக்ஸ்னரி தேவைப்படாத ஆங்கிலத்தில்
அவர் கதைகள் அமைந்திருக்கும்.  கதை எழுதப்பட்ட காலம், அல்லது ஆங்கில
கலாச்சாரத்தால்  சில விஷயங்கள் வேணுமானால் நமக்கு தெரியாமல் இருக்கலாம்.
படித்து முடித்த போது இந்த மாதிரி திரைக்கதையை நம் இந்திய சினிமாவில் இன்ஸ்பிரேசன்
என்ற பெயரில் இன்னும் சுடாமல் இருக்கிறார்களே  என்று ஆச்சர்ய பட்டேன்.

கதை நாயகர்கள்

நம் பணத்தை கொள்ளை அடிப்பவர்கள் கையில் கத்தியுடனும் முகமூடியுடனும்
வந்து கொள்ளை அடிப்பதில்லை. ஒயிட் காலர் கிரிமினல்கள் நிறைந்த இடம் இந்த பூமி.
அப்படிப்பட்ட ஒருத்தன்  ஹார்வே மெட்கால்ப்.


 ஹார்வே மெட்கால்ப் (Harvey Metcalfe)

அமெரிக்காவிற்கு அவன் அப்பா காலத்தில் குடி பெயர்ந்தனர்.  சிறு வயதில் அவன்
பெற்றோர் இறந்து விட தெருவோர சிறுவனானான். தெருவில் இருப்பவர்களுக்கே உரித்த
தான் வாழ என்ன பண்ணினாலும் பரவாயில்லை  என்ற கொள்கையை சிறு வயதிலேயே
 பழகிக்கொண்டான். அது அவனை அடிமை ஆக்கி கொண்டது. தன் அறையில் கூட இருக்கும்
உயிர் நண்பன் தான் சுகமாயில்லாததை தன்  மேலதிகாரியுடம்  சொல்லி விடுமுறை
சொல்லச் சொல்ல, ஹார்வே போய்  தன் நண்பனுக்கு  புற்று  நோய் வந்த அளவுக்கு
நோய் வாய்ப்பட்டிருக்கிறான் என்று புளுகி அந்த வேலையை  தனக்கு வாங்கி கொள்ளும்
 அளவுக்கு சமர்த்தன். இழந்தது நட்ப்பாயிருந்தாலும்  கிடைத்தது வேலை அல்லவா? அவன்
வேலைக்கு சேர்ந்த இடம் ஒரு பங்கு வணிக அலுவலகம். அதன் எல்லா
நுணுக்கங்களையும், ஓட்டைகளையும் தெரிந்து கொண்டு வெளியே வந்தான்.

இப்போது ஹார்வே ஒரு கோடீஸ்வரன் அவ்வளவும் பங்கு சந்தையில் பித்தலாட்டம் பண்ணி
சம்பாதித்தது. இவன் ஏமாற்றுவதில்  புலியாக இருந்தாலும், இந்த தடவை அவனிடம் மோதப்
 போவது அவன் எதிர் பாராத எதிரிகள் .அவர்கள் விளயாடப் போவது ஒரு கண்ணாம்பூச்சி
 ஆட்டம். மாட்டினால்  அவர்கள் எதிர் காலத்தையே ஹார்வே அழித்து விடுவான்.


இனி இவனுடன் விளையாடப் போகும் நான்கு பேரை பார்ப்போம்.

1) ஸ்டீபன் பிராட்லி (Stephan Bradley )ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக கணித பேராசிரியர்.
டாக்டர் பட்டத்துக்காக அல்ஜீப்ராவில் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவன் செய்து
கொண்டு  இருப்பவன். தனிக்கட்டை. எதையும் ஒழுங்காக செய்ய வேண்டும் என்பதில்
பிடிவாதம் உடையவன்.

2) ஜேம்ஸ் பிரிக்ஸ்லே  (James Brigsley) ஒரு ஆங்கிலேய பிரபு குடும்பத்தில் பிறந்தவன்.
நிறய ஏக்கர்கள் விளை  நிலம் இருந்தாலும், நாடகத்தில் நடிப்பதில்தான் அவன் விருப்பம்
எல்லாம். அவன் அப்பாவுக்கு அது சுத்தமாக பிடிக்காது. அதனால் அடக்கி வாசித்து கொண்டு
இருக்கிறான்.

3) ஜீன் பியரி லமான்ஸ்  (Jean-Pierre Lamanns) ஒரு பிரெஞ்சுக்காரன்.லண்டனில் ஒரு
ஓவியக்கூடம் நடத்துகிறான்.அழகானவன்,தனிக்கட்டை. மிதமிஞ்சி குடிப்பவன்.

4)  ராபின் ஓக்லே (Robin Oakley ) ஒரு டாக்டர். லண்டனில் டாக்டர்கள் அதிகம் தொழில்
பண்ணும் இடத்தில் கிளினிக் வைத்து நன்றாக சம்பாதிப்பவர். கல்யாணமாகி இரு
குழந்தைகள் இருக்கின்றன.

ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாத இந்த நால்வரும் ஒற்றுமையாக செய்த தவறு
 ஹார்வேயின் நிறுவன பங்குகளில் முதலீடு செய்ததுதான்.

 கதை

  ஹார்வே "ப்ரோஸ்பெக்டா ஆயில்"  என்று ஒரு ஆயில் கம்பெனியை லண்டனில்
 துவக்குகிறான்.பெட்ரோல் கண்டுபிடிக்க அரசு கொடுத்த ஒரு ஏரியாவில் அந்த கம்பெனி
பெட்ரோல் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். கிடைத்தால் அதை அவர்களே எடுத்து
சந்தை படுத்தலாம்

ஹர்வேக்கு ஆயில் கண்டுபிடிப்பதெல்லாம் தேவை இல்லை. இந்த  கம்பெனி மூலம் எவ்வளவு
சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பணம் சம்பாதித்து விட்டு கம்பெனி மூடி விட்டு
போய் விட வேண்டும்.

ஹார்வேயின் திட்டம்

ஸ்டீபனின் நண்பனை மார்க்கெட் பண்ணுவதற்காக நியமிக்கிறான் ஹார்வே. தாங்கள்
ஒரு எண்ணை கிணற்றை கண்டுபிடித்து  விட்டதாகவும் அந்த செய்தி வெகு சீக்கிரம்
 வெளிவிடப்படும் அப்பொழுது அந்த கம்பெனியின் பங்கு ஏறும் என்று சொல்கிறான்.  அந்த
 நண்பனுக்கு வேலை  பெரிய அளவில் முதலீடுகளை "ப்ரோஸ்பெக்டா ஆயில்" பக்கம்
இழுப்பது.   ஆனால் அவனுக்கு இந்த பிராடில் தொடர்பு இல்லை. அப்படி முதலீடு வரும்
 போது கொஞ்சம் கொஞ்சமாக அவன் ஷேரை எல்லாம் விற்று  விட்டு  ஓடி விடுவது
என்பதுதான் ஹார்வேயின் திட்டம்.

பலியாடுகள் பல

முதல் பலி ஸ்டீபன். நெடுநாள் கழித்து தன் நண்பனை பார்த்தவன் அவனிடம்  இருந்து
"ப்ரோஸ்பெக்டா ஆயில்" சீக்கிரமே ஒரு எண்ணை கிணறை கண்டுபித்த செய்தி 
வெளி வர இருப்பதை தெரிந்து கொண்டு  தன் மொத்த முதலீட்டையும் "ப்ரோஸ்பெக்டா
ஆயில்" ஷேர்களில் முதலீடு செய்கிறான். இதே போல் மற்ற மூவரையும்   சந்திக்கும்
ஸ்டீபனின் நண்பன் செய்தியை கசிய விட அவர்களும் தங்கள்  எல்லா முதலீட்டையும்
அந்த ஷேரில் முதலீடு பண்ணுகிறார்கள்.

எல்லா ஷேரையும் விற்று  விட்ட ஹார்வே, ஒரு சுப யோக சுப  தினத்தில் கம்பெனியை மூடி
விடுகிரான்.  அடுத்த நாள்  ஆபிஸ்  செல்லும் ஸ்டீபனின் நண்பன், ஆபிஸ்   மூடி இருப்பதை
பார்த்து  சக ஊழியர்களுக்கு போன்  பண்ண அவர்கள் விஷயத்தை சொல்கிறார்கள். தான்
ஏமாற்ற பட்டதை உணர்ந்த அவன்   ஊரை விட்டே ஓடி விடுகிறான்.

திசை திரும்பிய ஆட்டம்

ஸ்டீபன்  போலீசிடம் இருந்து  தன்னை ஏமாற்றியது யார் என்று தெரிந்து கொள்கிறான்.
அதே போல் யார் யார்  அதிக அதிக அளவில் ஏமாந்தது  என்பதையும் அறிந்து கொள்கிறான்.
ஒரு ஆக்ஸ்போர்ட் கணித பேராசிரியரான தன்னை அதிகம் படிக்காத ஒருவன் சுலபமாக 
ஏமாற்றியதை அவனால் ஏற்றுக்  கொள்ள முடியவில்லை. ஹார்வே யிடம் இருந்து தன்
 மொத்த பண த்தையும் திருப்பி வாங்க முடிவு செய்கிறான். ஹார்வேயே தானாக அதை  தர
 வேண்டும் என்பதுதான் சுவாரஸ்யம்.

ஏமாந்த மற்ற மூவரையும் சேர்த்துக் கொண்டு அவன் ஆடும் ஆட்டம் தான் இந்த கதை.
நால்வரும் ஆளுக்கு ஒவ்வொரு திட்டம் தீட்ட வேண்டும். அவர்கள் என்ன திட்டம் தீட்டி
தங்கள் பணத்தை ஹார்வேயிடம் இருந்து ஒரு  பைசா கூட குறையாமல் வசூல்
பண்ணினார்கள்  என்பதை புத்தகத்தை படித்து தெரிந்து கொள்க.

"A twist in the tale" கதைகள் மாதிரியே இந்த நாவலிலும் கடைசியில் ஒரு ட்விஸ்ட் உண்டு.படிக்க மறக்காதீர்கள்
__________________________________________________________________________________

* தமிழ் மொழி பெயர்ப்பை விட ஆங்கிலத்தில் நன்றாக இருந்த மாதிரி ஒரு பீலிங். 
தமிழிலோ ஆங்கிலத்திலோ கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்

உங்களுக்கு பிடித்த/படித்த புத்தகத்தை சொல்லுங்கள். நானும் படித்துப் பார்க்கிறேன்.
__________________________________________________________________________________

என்னுடைய மற்றைய புத்தக பதிவுகள்

1) முடிவில் ஒரு திருப்பம் (A Twist in the Tale) -By Jefrey Archer
2) கோல்  (The Goal) - By Goldratt M.Eliyahu
___________________________________________________________________________________

Post Comment

6 comments :

 1. ஜெஃப்ரி ஆர்ச்சர் நாவல்களை படித்ததில்லை! பொதுவாக நாவல்கள் படிக்க வேண்டும் என்றாலே அசதி தட்டுகிறது! :( நடுவில் இந்தப் பதிவு காணாமல் போய் விட்டதே?!

  ReplyDelete
 2. @Karthik Somalinga :நிச்சயமாக படித்துப் பாருங்கள். கதா பாத்திரங்களை வர்ணிப்பதற்கு மட்டுமே நேரம் எடுத்து நம் மனதில் பதிய வைப்பார். அப்புறம் எல்லாம் சர வெடிதான்.பர பர வென்று செல்லும் கதை உங்களை கட்டிபோடும். இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் படித்து பாருங்கள்.

  ReplyDelete
 3. அருமையான பதிவு நண்பரே. கலக்குறீங்க.

  //காதலுடன் என்று கூட வைத்துக் கொள்ளலாம் ஹி ஹி// கொஞ்சம் ஓவரா தெரியல (சும்மா ஹி ஹி) :D :-)

  ReplyDelete
  Replies
  1. நன்றி சௌந்தர் :-D

   Delete
 4. this is the very first novel i had read in my life.. it gave me the memories of my childhood days.. thanks.. :)

  ReplyDelete
 5. [[உங்களுக்கு பிடித்த/படித்த புத்தகத்தை சொல்லுங்கள். நானும் படித்துப் பார்க்கிறேன்.]]
  தமிழில் கட்டாயமாகப் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று ஒரு பதிவுத் தொகுப்புகள் ஒரு முறை வந்தன. கூகிளாரைக் கேட்டால் தெரியும்.

  என்னுடைய பதிவிலும் நான் படித்த,ரசித்த புத்தகங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

  ஜெஃப்ரி ஆர்ச்சரைத் தாண்டி வாசிப்பு பல கட்டங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது.:))

  ReplyDelete