Friday, November 2, 2012

பதில்கள் பத்து
ஆசிரியருக்கு  நான் கொடுப்பதற்கு முடிவு பண்ணி வைத்திருக்கும் பதில்கள்

1 ) இந்த வருடத்தின் டாப் 3  இதழ்கள்  ?

      சர்ப்ரைஸ் ஸ்பெஷல், வைல்டு வெஸ்ட் ஸ்பெஷல், தங்க கல்லறை

2 ) இந்த ஆண்டின் மஹா சொதப்பல் இதழ்?

     இதை கேட்கவும் வேண்டுமா ? சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்

3 ) தற்சமய விலை பற்றிய உங்களது சிந்தனைகள் ?

      ரூ 100 எனக்கு வாங்க முடிகிறது என்பதுக்காக சரியென்றால் நான் சுயநலவாதி.
      ரூ 50 இலும் வர வேண்டும்  என்பது விருப்பம்.

4 ) 2013 இல் எதிர் பார்த்திடும் இதழ்கள்?

      நெவெர் பிபோர் ஸ்பெஷல், டெக்ஸ் வில்லர் ஸ்பெஷல், டைகர் கதைகள், லார்கோ, லக்கி லுக், கிராபிக்  நாவல்கள்

  5 ) எந்த ஹீரோவை அதிகம் பார்த்திட ஆசை ?

         டைகர், லார்கோ, டெக்ஸ், ஆஸ்டெரிக்ஸ் & ஒப்ளிக்ஸ் (?)

6 ) யாரை பரணிற்கு promotion கொடுத்து அனுப்பிட வேண்டும்?

     மும் மூர்த்திகளின் கதைகளில் முதல் 13 க்கு பிறகு சுவாரஸ்ய மில்லை என்று நீங்களே
     சொல்லி இருக்கிறீர்கள்.     அதற்க்கு பிறகு டிடெக்டிவ் ஜெரோம், இப்போது இருக்கும் பர பர
     வேகத்துக்கு ரொம்ப ஸ்லோவாக இருக்கிற மாதிரி இருக்கு.  சுவாரஸ்யமில்லா
  எந்த கதா நாயகனாக இருந்தாலும் சரி. துடைப்பம் அவர்கள் மீது பாய்ந்து பரணில்
        தள்ளட்டும்.  

7 ) வண்ண கதைகளோடு கருப்பு வெள்ளை கதைகளும் வருவதில் உங்களுக்கு 
     திருப்தி தானா?

    இல்லை.

8 ) 2012 இன் பெஸ்ட் அட்டை படம் ?

      வைல்டு வெஸ்ட் ஸ்பெஷல், தங்க கல்லறை

9 ) 2012 இல் சொதப்பல் அட்டை படம் ?

      சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்

10 ) 2013  க்கு உங்கள் சஜெசன்         

        அ) புதிய கதாநாயகர்களை அறிமுகப் படுத்துங்கள்.

       ஆ) தரமான தாளில் வண்ணத்தில் நிறைய புத்தகங்களை கொடுங்கள்.

        இ) காமிக்ஸ் கிளப் தொடங்கலாம். வாசகர்களின் ஆர்வம் கூடும். 

         ஈ ) இப்போதுள்ள கரெக்டான தேதிக்கு கதை களை  அனுப்புவது என்ற அடிப்படி தேவையை
               இந்த வருடம் போலவே அடுத்த வருடமும் நிறைவேற்ற முயலுங்கள்.

        உ) ரூ 50 க்கும் இதழ் கொண்டு வர முடியுமா என்று பாருங்கள். ஆனால் என்னால் ரூ 100  ௦
               என்றாலும் வாங்க முடியும்.  ரூ 50 மற்றவர்களுக்காக கேட்கிறேன். எவ்வளவுதூரம்
               முடியும் என்று பாருங்கள்.

       ஊ)   உங்கள் புத்தகங்களை வாங்குபவர்கள்  எல்லோருமே உங்கள் வாடிக்கையாளர்
               தானே.  இதில் சந்தா கொடுப்பவர்களுக்கு முதலிடம் , E -BAY  யில்  வாங்குபவர்கள்,
              ஏஜென்டிடம் வாங்குபவர்களுக்கு தாமதம் ஆனால் பரவாஇல்லை என்ற பாகுபாடு ஏன்?
             அவர்களுக்கும்  சந்தா தார்களுக்கு அனுப்பும் நாளன்றே அனுப்பலாமே.

Post Comment

11 comments :

 1. உங்கள் கருத்துக்களே என்னுடையதும்! 7 மற்றும் 9 ஐத் தவிர!

  7. கருப்பு வெள்ளையில் இருக்கும் பல நல்ல கதைகளை இழந்திட மனமில்லை. தவிர, கருப்பு வெள்ளையிலும் ஒரு கவர்ச்சி இருப்பதாகத் தோன்றுகிறது. பால்ய கால பழக்கமாயிற்றே!

  8. அட்டைப்படத்தில் double thrill, comeback spl சுமார் ரகமே. என் பெயர் லார்கோ கமர்ஷியலாக (குறிப்பாக, புத்தகக் கடைகளில்/புத்தகத் திருவிழாக்களில் தொங்கவிடப்படும் போது) அதிகம் கவனத்தை கவரவில்லை.

  ReplyDelete
  Replies
  1. மேலே 8 என தவறாக நம்பரிட்டுள்ளேன்.

   Delete
 2. உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேன் விஜய். 50 ரூபாய்க்கு புத்தகம் வேண்டும் என்ற ராஜ்ன் உன்னதமான மனதுக்கு கருப்பு வெள்ளை கதைகளே தீர்வு. மாதமாதம் சரியான நேரத்திற்கு புத்தகம்வரவேண்டும் என்பது ஒவ்வொரு காமிக்ஸ் ரசிகனின் எதிர்பார்ப்பு.

  ReplyDelete
 3. எனக்கு என்னவோ தங்ககல்லறையின் பழைய அட்டைப்படத்திற்கு பக்கத்தில் கூடபுதுசு வராது என்று தோன்றுகிறது. புளூபெர்ரி நீலத்தை விரும்புவார். என ப்ளூ கலரை அள்ளி தெளித்தது போல் தோன்றுகிறது. பழைய அட்டைப்படத்திற்கு திரு சௌந்தர் ப்ளாக்கைப் பார்க்கவும்

  ReplyDelete
 4. சூப்பர் வில்லன் லக்னர் எ கஸ்டாப் தூள் கிளப்பும் தங்கக்ல்லறை படித்து விட்டீர்களா

  ReplyDelete
 5. சாரி நண்பர்களே. வீக் எண்டில் தஞ்சாவூர் சென்று விட்டதால், பதிலிட முடியவில்லை.

  ReplyDelete
 6. @John Simon C: வருகைக்கு நன்றி !

  ReplyDelete
 7. @Erode Vijay : வருகைக்கு நன்றி !

  டபுள் த்ரில் , கம்பேக் ஸ்பெஷல் அவ்வளவு மோசம் என்று சொல்ல முடியாது. லார்கோ விசயத்தில் ஒத்து கொள்ளலாம்.

  ReplyDelete
 8. @ComicsPriyan :மாதா மாதம் சரியான தரத்தோடும் வர வேண்டும் என்பது என் எதிர் பார்ப்பு. டைகர் வெறியர்களால் எனக்கு பரிந்துரைக்க பட்ட புத்தகம் என்பதால் படிக்க ஆவலாய் உள்ளேன். மொழி பெயர்ப்பு முதல் பதிப்பு அளவுக்கு வரவில்லை என்று ஒரு குற்ற சாட்டு ஓடி கொண்டிருக்கிறது.

  எனக்கு இன்னும் புத்தகம் வரவில்லை. முதல் பதிப்பும் படிக்கவில்லை. அதனால் எது சரி என்று சொல்ல முடியாது. அதனால் மனதில் எதையும் ஏற்றி கொள்ளாமல், புத்தகத்தை படிக்க இருக்கிறேன். பார்ப்போம்எப்படி இருக்கிறது என்று.

  ReplyDelete
 9. நல்ல பதிவு நண்பரே!! எனக்கும் புத்தகம் கிடைத்து விட்டது படித்து விட்டு கருத்து சொல்வதுதான் முறை என்று நினைக்கிறேன்.

  ReplyDelete