Sunday, November 25, 2012

அருணாச்சலம் ஆஸ்டெரிக்ஸ் (Asterix and the Cauldron)



என் மன வானில்

இது நான் படித்த முதல் ஆஸ்டெரிக்ஸ் அண்ட் ஓப்ளிக்ஸ் கதை. இதில் முழு கதையையும்
சொல்ல முயற்சித்து இருக்கிறேன். அதனால் சற்றே நீளமான பதிவாகி விட்டது. இந்த
முயற்சி தேவையா இல்லையா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.  ஆஸ்டெரிக்ஸ்
காமிக்ஸ் பற்றி தெரியாதவர்கள் இவர்களுடைய அறிமுக பதிவை படித்து விட்டு வாருங்கள்.

கதை 

ஒரு நாள்   ஹுஸ்-மாரல்-ஆர்-லாஸ்ட்-டிக்ஸ் ஆஸ்டெரிக்ஸ்ஸின் கிராமத்துக்கு வருகிறார்.
 ஹுஸ்-மாரல்-ஆர்-லாஸ்ட்-டிக்ஸ் (Whosemoralsarelastix) பக்கத்து கால் கிராம தலைவர்.
அவர் ரோமர்களுடன் வியாபாரத்தில் இணக்கமாக ஈடுபடுபவர், அதுதான் அவர் பெயர்க் காரணம்
 (Whose-morals-are-last-ix).  ஹுஸ்-மாரல்-ஆர்-லாஸ்ட்-டிக்ஸ்  ரோமர்களுடன் வியாபாரம்
செய்வதால் ஆஸ்டெரிக்ஸ்ஸின் கிராம தலைவரான வைட்டல்ஸ்டாடிஸ்டிக்ஸ்க்கு 
 (Vital-statis-tix) அவர் மேல் நல்ல நல்ல அபிப்ராயம் கிடையாது, இருந்தாலும் வரவேற்கிறார். 


பண வாளி 


ஹுஸ்-மாரல்-ஆர்-லாஸ்ட்-டிக்ஸ் ரோமர்கள் தன்னை தாக்கி தன்  பண வாளியை திருடி
விடுவார்கள் அதனால் நீங்கள் அதை பாதுகாத்து தக்க நேரத்தில் என்னிடம் ஒப்படைக்க 
வேண்டும் என்கிறார்.  முதலில் மறுத்தாலும் பிறகு ஒப்புக் கொள்கிறார்
வைட்டல்ஸ்டாடிஸ்டிக்ஸ். அதற்க்கு காவலாக சிறந்த வீரனனான  ஆஸ்டெரிக்ஸ்ஸை
நியமிக்கிறார். 


பண வாளியில் இருந்து வெங்காய சூப் வாசம் வருவதை கேட்க்கும் போது அந்த வாளி வெங்காய
சூப் வைக்க முன்னால் உபயோகப்படுத்தியாக சொல்கிறார் ஹுஸ்-மாரல்-ஆர்-லாஸ்ட்-டிக்ஸ். 
அன்று இரவு ஹுஸ்-மாரல்-ஆர்-லாஸ்ட்-டிக்ஸ்ஸுக்கு வைட்டல்ஸ்டாடிஸ்டிக்ஸ் விருந்து 
கொடுக்கிறார். 

விருந்தில் எல்லோரும் ஒரு பன்றி 65 உடன் இருக்க ஓப்ளிக்ஸ்ஸுக்கு  மட்டும் கன்வேயர் பெல்டில் வைப்பது மாதிரி வைத்து வரிசையாக அனுப்புகிறார்கள் பாருங்கள் .ஹுஸ்-மாரல்-ஆர்-லாஸ்ட்-டிக்ஸ்  ஆஸ்டெரிக்ஸ்ஸுக்கு  மயக்க மருந்து கலந்த விருந்தை கொண்டு போய் கொடுக்கிறார்.


ஆஸ்டெரிக்ஸ் பண வாளியை  இரவு காவல் இருக்கிறான். அன்று இரவு பண வாளி இருக்க
பணம் மட்டும்  காணாமல் போகிறது. 



இரவு எல்லோரும் விருந்து முடிந்து போய் விட்ட பிறகும் ஓப்ளிக்ஸ் செம கட்டு கட்டிக் 
கொண்டு இருப்பதை பாருங்கள்.



எல்லோரும் இரவு உடையில் தேடுவதை பாருங்கள். அப்போது கூட ஓப்ளிக்ஸ் சாப்பிட்டு முடிக்கவில்லை.சேவல் தான் கூவுவதற்கு முன்பே அரக்க பரக்க  திரிபவர்களை வியப்புடன் பார்க்கிறது.


பக்கத்துக்கு கிராம தலைவர் முன் தன்னை மூக்கறுத்து விட்டானே ஆஸ்டெரிக்ஸ் என்று வைட்டல்ஸ்டாடிஸ்டிக்ஸ்க்கு பயங்கர கோபம். கால் கிராம விதிப்படி ஆஸ்டெரிக்ஸ் 
அந்த பண வாளி நிறைய பணத்தை நிரப்பி கொடுக்கும் வரை அந்த கிராமத்துக்குள் வரக் 
கூடாது. ஆஸ்டெரிக்ஸ்ஸுடன் அவர் உயிர் நண்பரான  ஓப்ளிக்ஸ்ஸும் தன் நாய் 
டாக்மாடிக்ஸ்ஸுடன்  கிளம்பி விடுகிறார். 



இவர்கள் இருவரும் பணம் சம்பாதிக்க  அடிக்கின்ற கூத்துக்கள் தான்  இந்தக் கதை.
அருணாசலத்தில் ரஜினி பணத்தை செலவழிக்க ரேசு,சினிமா என்று போவது மாதிரி
இவர்கள் பண்ணும் அதகளம் விழுந்து விழுந்து சிரிக்க வைப்பவை.

1) ரோமர் மீது சந்தேகம்

ஆஸ்டெரிக்ஸ்ஸுக்கு  பக்கத்து கோட்டையில் இருக்கும் ரோமர்கள் மீதுதான் முதலில்
சந்தேகம் வருகிறது. அதனால் அவர்கள் கோட்டைக்கு போகிறார்கள்.  கோட்டை காவலில் 
இருப்பவன் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று கேட்க்க, இவர்கள் பணத்துக்காக என்று
சொல்ல, காவல் வீரன் வரிக்கான பணத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தப்பாக
 நினைத்து விடுகிறான்.




வீரார்களுக்கு சம்பள பாக்கி என்பதால் ஆவலுடன் வரிப் பணத்துக்காக காத்துக்
கொண்டிருக்கும் போது இந்த செய்தி அவர்களுக்கு காதில் தேனை ஊற்றுகிறது. அதனால்
அவர்கள் சம்பளம் வாங்க லைனில் நிற்பதை பாருங்கள்.



வந்த கோபத்தில் எல்லா வீரர்களையும் ஒரு கை பார்த்து விட்டு வெளியேறுகிறார்கள்.

 2) கடற் கொள்ளையர்கள் மீது சந்தேகம்

ரோமர்கள் திருட வில்லை என்றால் யார் திருடி இருப்பார்கள் என்று யோசிக்கும் போது
ரோமர்களுக்கு அடுத்த படியாக திருடுபவர்கள் ( :-) ) கடற்க் கொள்ளையர்கள் மட்டுமே என்று
முடிவு பண்ணி போகிறார்கள். ஆனால் அவர்களோ தங்கள் கொள்ளை தொழிலை விட்டு விட்டு,
கப்பலையே உணவு விடுதியாக மாற்றி இருக்கிறார்கள்.


3) வியாபாரி ஆஸ்டெரிக்ஸ்

கடற்க் கொள்ளையர்களும் கொள்ளை அடிக்கவில்லை என்பதால் வியாபராம் செய்து பணம்
சம்பாதித்து அந்த பண வாளியை நிரப்ப முடிவு செய்கிறார்கள். அதனால் போகும் வழியில்
இருக்கும் காட்டு பன்றிகளை பிடித்துக் கொண்டு போய் சந்தையில் விற்கிறார்கள்.




முன்ன பின்ன அனுபவம் இல்லாததால், என்ன விலைக்கு விற்பதென்று  தெரியாமல் 
வாங்குபவனேயே விலை சொல்ல சொல்லி விற்கிறார்கள். கடைசியில் பத்துக்கும்மேற்ப்பட்ட
 பன்றிகளை மிக குறைந்த விலைக்கு விற்று விட்டு, அந்த காசை வைத்து தாங்கள் சாபிடுவதற்கு 
ஒருபன்றியே வாங்க முடிகிறது.


பக்கத்து கடைக்காரனுடன் போட்டி போட்டு கொண்டு ஆஸ்டெரிக்ஸ் கத்துவதை பாருங்கள். ஓப்ளிக்ஸ் நோகாமல் கத்துவதை பாருங்கள்.பக்கத்து கடைக்காரன் பெயரை பாருங்கள் "ஆன்டிபயோடிக்ஸ்" (Antobiotix).


4) சண்டை வீரன்

 வியாபாரமெல்லாம் நமக்கு சரி வராது, நமக்கு சண்டை தான் சரிவரும் என்று பணத்துக்கு
சண்டை நடக்கும் இடத்துக்கு சென்று களத்தில் குதிக்கின்றான்ஓப்ளிக்ஸ்.  இருக்கும்
எல்லா வீரர்களையும்  அடித்து துவைத்து விடுகிறான்.பரிசாக ஒன்றுக்கும் உதவாத கேடயங்கள்
மட்டுமே கிடைக்கிறது.



சண்டை நடத்துபவன் இருக்கும் எல்லா வீரர்களும் அடி வாங்கி விட்டதால்,
பார்வையாளர்களை ஆஸ்டெரிக்ஸ்ஸுக்கு எதிராக களமிறக்குகிறான். பார்வையாளர்கள்
ஆஸ்டெரிக்ஸ் ஸு டைய சிறிய உருவத்தை பார்த்து சண்டைக்கு வந்து அடி வாங்கிகிறார்கள்



நாளை சண்டைக்கு வீரர்களும் இல்லை  பார்வையாளர்களும் இல்லை என்று கொடுத்த
கேடயங்களையும் வாங்கி வைத்துக் கொள்கிறான்.

5) நாடக நடிகன் ஓப்ளிக்ஸ்

தங்கள் விதியை நொந்து ஒரு நாடக அரங்கத்தின் முன் நடந்து கொண்டிருக்கிறார்கள். 
ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டிய நடிகர்கள் இயக்குனரை முறைத்துக் கொண்டதால் 
நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பணம் கிடைக்கும் என்று இருவரும் ஒப்புக்
கொள்கிறார்கள். ஒரு வசனத்தை நீயே யோசித்து பேசு என்று ஓப்ளிக்ஸிடம் இயக்குனர்
சொல்ல ஓப்ளிக்சுக்கு அந்த மெசேஜ்ஜை யோசிக்க முடியாமல் "ஏதாவது ஏதாவதுன்னா 
என்னாடா பேசுறது" என்று கத்துவதை பாருங்கள். 


கடைசியில் எதுவும் யோசிக்க முடியாமல் "ரோமர்கள் எல்லாம் முட்டாள்கள்" என்று சொல்ல,
பார்வையாளர்கள் அடிக்க வந்து விடுகிறார்கள்.



6) சூதாட்டம்   

பணம் சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம் என்று நொந்து கொண்டே ஒரு இடத்தில்
உட்க்காரும்போது அவர்களை பிச்சைக் காரர்கள் என்று நினைத்து ஒருத்தர் "இன்று நடந்த
ரேசில் நான் பணம் கட்டிய குதிரை ஜெயித்தது. அதனால் நல்ல லாபம்." என்று ரெண்டு
பணத்தை கொடுத்து விட்டு போகிறார். உடனே அதை வைத்து குதிரை ரேசில்
இறங்குகிறார்கள். நீலக் குதிரையில் பணம் கட்ட வெள்ளை குதிரை வெற்றி பெறுகிறது.


7)  வங்கியை கொள்ளை அடித்தல்

கடைசியாக வங்கியில் தான் பணம் அதிகம் இருக்கும் அதை கொள்ளை அடிக்கலாம்
என்று முடிவு செய்கிறார்கள். காவலர்கள் தங்களை சந்தேகப் படாமல் இருக்க சாதாரணமாக
விசிலடித்துக் கொண்டு அவர்களை கடந்து போக வேண்டும் என்று ஆஸ்டெரிக்ஸ் சொல்ல
காவலர் முன் சென்று விசிலடித்துக் கொண்டே இருக்கிறான் ஓப்ளிக்ஸ்.

ஆனால் வங்கியில் ஒரு பணம் கூட இல்லை. ரோமர்களின் வரி வசூலால் காலியாக
இருப்பதாக தெரிந்து கொள்கின்றனர்


8) ஹுஸ்-மாரல்-ஆர்-லாஸ்ட்-டிக்ஸ்ஸிடம் திரும்பி செல்லுதல்

பணம் சம்பாதிக்கும் முயற்சி இவ்வாறு சகல வழிகளிலும் தோல்வி அடைந்ததால்,
ஹுஸ்-மாரல்-ஆர்-லாஸ்ட்-டிக்ஸ்ஸிடம் போய் இந்த தப்புக்கு தான் மட்டுமே பொறுப்பு
எனக்கு  தண்டனை கொடுங்கள் என்று கேட்டு விடலாம் என்று முடிவு பண்ணி அவர்
இருக்கும் மலை கிராமத்துக்கு போகிறார்கள்.

9) ரோம வரி வசூல் அதிகாரியை மடக்குதல்

அப்படி போகும் வழியில் எதிரில் ரோம வரி வசூல் அதிகாரி ஹுஸ்-மாரல்-ஆர்-லாஸ்ட்
-டிக்ஸ்ஸிடம் வசூல் பண்ணிய பணத்துடன் வருகிறார். அது போதாதா நம்ம ஹீரோக்களுக்கு, அடி பின்னி எடுத்து அந்த பணத்தை எடுத்துக் கொண்டு  ஹுஸ்-மாரல்-ஆர்-லாஸ்ட்-டிக்ஸ்
கிராமத்துக்கு செல்கிறார்கள்.


கொள்ளை அடித்தவனிடம் கூட ரெசிப்ட் கேட்க்கும் வரி வசூல் பண்ணுபவர். 
நல்லாவே நக்கல் அடித்திருக்கிறார்கள்.


 அவர்கள் கொள்ளை அடித்த பணத்தில் வெங்காய சூப் வாசம் வருகிறது. ஆஸ்டேரிக்சிடம்
இருந்து கொள்ளை போன பணத்தில் இருந்த அதே சூப் வாசனை. ஓப்ளிக்சிடம் மாட்டிக் 
கொள்ளாமல் ஒரு பன்றி நழுவுவதை பாருங்கள்.



ஹுஸ்-மாரல்-ஆர்-லாஸ்ட்-டிக்ஸ் தான் கொடுப்பது போல் கொடுத்து விட்டு கொள்ளையடித்து
இருக்கிறான் என்று ஆஸ்டெரிக்ஸ் புரிந்து கொண்டு விடுகிறான்.  ஹுஸ்-மாரல்-ஆர்-லாஸ்ட்
-டிக்ஸ்ஸின் வஞ்சனையை ஆஸ்டெரிக்ஸ் புரிந்து கொண்டு அவர் கிராமத்துக்கு போய் 
கேட்க்கிறான்.


வழக்கமான வில்லன் போல ஹுஸ்-மாரல்-ஆர்-லாஸ்ட்-டிக்ஸ் கத்தியை உருவ ஆஸ்டெரிக்ஸ்
தன மந்திர பானம் தீர்ந்த் நிலையில் சாதாரணமாக போராடுகிறார். ஓப்ளிசுக்கு என்ன நடக்கிறது
என்பது  புரியாமல் இந்த சண்டை முடிந்த பிறகாவது எதற்கு நாம் இவர்களை அடிக்கிறோம்
 என்று சொல்லுவாயா என்று வெள்ளந்தியாக கேட்பதை பாருங்கள்.


இவர்கள் சண்டையில் அந்த பணம் மலை மேல் இருந்து கீழே விழுந்து விடுகிறது.



கீழே விழுந்த பணம் மனம் திருந்திய கடற் கொள்ளையர்கள் போகின்ற கப்பலில் விழ அவர்கள் 
கடவுளை கூரை பிய்த்துக்கொண்டு குடுத்து விட்டதாக மகிழ்கின்றனர்.


10) வெற்றி வீரர்கள்  

ஹுஸ்-மாரல்-ஆர்-லாஸ்ட்-டிக்ஸ் கிராமத்தில் எல்லோரையும் அடித்து துவைத்து விட்டு
தங்கள் கிராமத்துக்கு வெற்றி வீரர்களாக திரும்புகிறார்கள். அவர்களுக்கு
  வைட்டல்ஸ்டாடிஸ்டிக்ஸ் திரும்பவும் விருந்து கொடுத்து மகிழ்கிறார்.விருந்தின் போ து பாடி விடாமல் இருப்பதற்காக காகோபோனிக்ஸ்ஸை  (Cacofonix ) வாயைக் கட்டி மரத்தில் 
தொங்க விட்டு இருப்பதை பாருங்கள். 


சுவாரஸ்யமான தகவல்கள்

1) முதலில் தங்கள் சாகசங்களை சொல்லி மக்களிடம் இருந்து பணம் திரட்டலாம் என்று
ஓப்ளிக்ஸ் சொல்லுவார். அதை ஆஸ்டெரிக்ஸ் அந்த யோசனை சரி வராது என்று மறுத்து
விடுவார். உண்மை என்ன என்றால் இந்த  காமிக்ஸ்ஸில் வந்த சாகசங்கள் தான் இந்த
காமிக்ஸை உருவாக்கிய ரேனே கோசின்னியையும் படம் வரைந்த ஆல்பர்ட்
உடேர்சோவையும்    கோடீஸ்வரர்களாக்கியது.

2) ரேனே கோசின்னி  René Goscinny  யும் படம் வரைந்த Albert Uderzo வும் இந்த கதையில்
 வருகிறார்கள்.

கோசின்னி  


உடேர்சோ




கீழே உள்ள படத்தில் நடுவில் உட்கார்ந்து இருப்பவருடன் பேசிக் கொண்டிருப்பவர் Uderzo . இடது
பக்கம் ஜோக் அடித்து கொண்டிருப்பவர் Goscinny.






3) இதில் கடைசியாக வரும் வரி வசூல் அதிகாரி அப்போது பிரான்சில் இருந்த நிதி அமைச்சரின்
முகம் மாதிரியே வரைந்து இருக்கிறார்கள். என்ன நக்கல் பாருங்க. அந்த நிதி அமைச்சர்
(Valéry Giscard d'Estaing ) பின்னர் பிரான்சின்  அதிபராகவும் ஆனார்.





4) இந்த ஒரு பாகத்தில் தான் கடற் கொள்ளையர்கள் பணம் கிடைக்கும் நல்ல முடிவை
 பார்த்திருக்கிறார்கள். மேலும் இந்த பாகத்தில் தான் அவர்கள் கப்பலும் முழுகவில்லை.

5) எப்போதும் வாளுடன் இருந்தாலும் மந்திர பானத்தின் உதவியுடன் வெறும் கையிலேயே
எதிரிகளை விரட்டிவிடுவார். இந்த பாகத்தில் அஸ்டேரிக்ஸ் வாளெடுத்து போராடுகிறார்.
 இந்த பாகத்தை தவிர "Asterix and the Cezar's Gift" என்ற பாகத்தில் மட்டுமே வாளெடுத்து
 போராடுகிறார்.
___________________________________________________________________________________
மேலதிக தகவல்களுக்கு

1) Asterix and the Cauldron - Wiki Pedia
___________________________________________________________________________________
என்னுடைய முந்தைய பதிவை படித்து விட்டீர்களா?

 ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல் (Not a Penny More Not a Penny Less - By Jeffrey Archer)

___________________________________________________________________________________
நீங்கள் இவற்றையும் விரும்பலாம்

1) ஆஸ்டரிக்ஸ் அண்ட் ஓப்ளிக்ஸ் - அறிமுக படலம்

2) மரண நகரம் மிசெளரி - பல்கோண பார்வை

3) தங்க கல்லறை - விமர்சனம்

4) எமனின் திசை மேற்கு – மனதை உலுக்கிய ஒற்றைக்கை வீரன் - ஓவிய பதிவு

___________________________________________________________________________________
Disclaimer

The scanned images are used for the promotion of the comics. They will be removed, if requested by the rightful authorities.

___________________________________________________________________________________

Post Comment

5 comments :

  1. செம காமேடியாக இருந்தது.பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
    உங்கள் விவரிப்பு மிகவும் நன்றாக இருந்தது.
    இதுபோல 400 கதைகள் எங்களால் வங்கி படிக்கமுடியாது.
    ஏதோ உங்கள் உபயத்தில் படித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. நன்றி கிருஷ்ணா. நிஜமாகவே ஒவ்வொரு பிரேமிலும் அதிகமாக நகைச்சுவையை பார்த்தது இந்த கதைகளில் தான். இம்சை அரசி 23 ம் கிளியோப்பட்ரா (Asterix and Cleopatra) அடுத்து பதிவிட முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  3. பக்கத்துக்கு பக்கம் காமெடி சூப்பரா இருக்கு நண்பரே. அது போலவே உங்கள் கதை சொல்லலும். கலக்குங்க :-)...

    ReplyDelete
  4. //இம்சை அரசி 23 ம் கிளியோப்பட்ரா (Asterix and Cleopatra) அடுத்து பதிவிட முயற்சிக்கிறேன். // I am waiting :)

    ReplyDelete
  5. //பக்கத்துக்கு பக்கம் காமெடி சூப்பரா இருக்கு நண்பரே. அது போலவே உங்கள் கதை சொல்லலும். கலக்குங்க :-)...

    //

    நன்றி சௌந்தர்

    ReplyDelete