Sunday, October 7, 2012

பு(து)த்தகம் :கோல்


அறிமுகமே அட்டகாசமாக இருக்கிறது இந்த புத்தகத்தில்.

அலெக்ஸ்  ரெகோஒரு பிளான்ட்டின் மேனேஜெர். ஒரு நாள் 
அதி காலை பிளான்ட்க்கு வரும் அவர்,அவருடைய பாஸ் ஏற்கனவே அவருடைய அறையில் இருப்பதை கேள்விப்பட்டு பதட்டத்துடன் அவர் அறைக்கு செல்கிறார். 

பாஸின் கெடு
==============

பில் பீச் தான் ரெகோவுடைய  பாஸ். கறாரான பேர்வழி. வேலை ஆகவேண்டும் இல்லை என்றால் வெட்டி விடவேண்டும் என்ற பாலிசி உள்ள ஆள். அவர் காலங்கார்த்தால தன் அறையில் இருக்கிறார் என்றால் ஏதோ ப்ராப்ளம். அந்த ப்ராப்ளம் ரெகோவுக்கு தெரிந்தே இருக்கிறது. அவனுடைய பிளான்ட் நஷ்டத்தில் இருக்கிறது. அது மொத்த கம்பெனிக்கும்    பெரிய ப்ராபளமாகிக் கொண்டிருக்கிறது என்று ரெகோவுக்கும் தெரியும்.

பில் பீச், ரெகோ உட்காரும்  சேரில் அட்டகாசமாக உட்கர்ந்து கொண்டு இருந்தது ரெகோவின் கோபத்தை மண்டைக்கு ஏற்றியது. 

ரெகோ: (கோபத்துடன்) அது என் சேர்

பில் : உன் பிளான்ட்டே மூழ்கிக் கொண்டிருக்கிறது உன் சேரை பற்றி கவலை படுகிறாய். இன்றிலிருந்து மூணு மாதத்தில் இந்த பிளான்ட்டை லாபத்தில் நடத்தா விட்டால் இந்த பிளான்ட்டை மூட நான் CEO விடம் பரிந்துரை செய்து விடுவேன். 

ரெகோ: மூணு மாத அவகாசம் ரொம்ப குறைவு.

பில் : ஆனால் உன் பிளான்ட்டை விட நம் கம்பெனி முக்கியம். மூணு மாதம். மூணே மாதம்.

என்று சொல்லியவாரே  பில் போயே போய் விட்டான்.  

ரெகோவுக்கு இடி விழுந்தால் போல இருந்தது. இதை எப்படி சமாளிக்க போகிறேன் என்று நினைத்தவாரே ஜன்னலின் வழியே பார்த்தான். தொழிலாளர்கள் சுறுசுறுப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தது
தெரிந்தது. தான் இந்த பிளான்ட்டை லாபத்தில் நடத்தாவிட்டால்  தன் வேலை மட்டுமல்ல தன் கீழே வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளிகளுக்கும் வேலை போய் விடும்.  அவர்களது குடும்பங்களும் நடுத்தெருவில் நிற்கும்.  கடவுளே என்று கடவுளை கூப்பிடுவதை தவிர வேறெதுவும் தெரியவில்லை.

__________________________________________________________________________________

இப்படி ஒரு சம்பவம் நம் வாழ்க்கையில் நடந்தால் நாம் என்ன செய்வோம். உடனே  ஜாப் சைட்டில்வேலை தேட ஆரம்பித்து விடுவோம் அல்லது நம் பிரண்ட்சுக்கு போன் பண்ணி "மச்சான் உன் கம்பெனியில் எனக்கு ஒரு வேலை பார்த்து கொடுடா"  என்று ஆரம்பித்து விடுவோம். ஆனால்  ரெகோ  அப்படி செய்யவில்லை. அவர் தன் பிளான்ட்டை நேசித்தார். என்ன ஆனாலும் இந்த பிளான்ட்டை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று  முடிவு செய்தார். தன் பிளான்ட்டை எப்படி  தன்  காலேஜ் ப்ரொபசர் ஜோனா  உதவியுடன் எப்படி காப்பாற்றினார் என்பதே கதை.

இது ஒரு நாவல் + மேலாண்மை சம்பந்தமான  புத்தகம் . மேலாண்மை சம்பந்தமான புத்தகம் என்றால் அட்வைசாக அள்ளி தெளித்து விட்டிருப்பார்கள். ஆனால்  இந்த புத்தகம் ஒரு நாவலும் கூட என்பதால் மிக எளிதாக விளங்குகிறது. எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவு எழுத்து நடை. விகடனில் தொடர் கதையாக வந்த போதே இதை படித்தேன். புத்தக கண்காட்சியில் வாங்கினேன். ஷ்யாமின் வண்ண ஓவியங்களுடன் மிக நன்றாக இருக்கிறது. 

ஏன் படிக்கவேண்டும் : எந்த ஒரு பெரியவேலையுமே சின்ன சின்ன வேலைகளால் ஆனது. இந்த சின்ன சின்ன வேலைகள் எப்படி பெரிய வேலை முடிவடைவதை கட்டுபடுத்து கிறது என்பதே எந்த புத்தகத்தின் அடி நாதம். நாம் நம் வேலை ஏன் சொன்ன நேரத்தில் முடிவடைய வில்லை என்பதை தோண்டி துருவும்போது இந்த புத்தகத்தை எடுத்து படித்தால் விடை கிடைக்கும். Theory of constraints பற்றியும் Bottle Neck Centers  பற்றியும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.  

உதாரணத்துக்கு ஒரு கார் கம்பெனியில் ஒரு காரை உருவாக்க ஆயிரக்கணக்கான  உதிரி பாகங்கள் தேவை.  இதில் ஒரு உதிரி பாகம் இல்லை என்றால் கூட  கார்முழுமை அடையாது . ஒரு உதிரி பாகத்துக்காக ஒரு காரை விற்பனை செய்யகூடிய வாய்ப்பு போய்விடுகிறது. ஒரு இல்லாத உதிரி பாகம் கார் விற்பனை ஆவதையே தடுத்து விடுகிறது. 

இப்போது அந்த கார் கம்பெனியில் எல்லோரும் ஓவர் டைம் போட்டு அந்த ஒரு பாகத்தை தவிர மற்ற பாகங்களை உருவாக்கினால், அந்த கம்பெனி நல்ல  நிலைமையில் போய்க் கொண்டிருப்பதாக அர்த்தமா? அதாவது அந்த கம்பனியின்  கோல்  என்ன  என்று தெரியாமல் அவரவர் வேலையை செய்தால் அந்த
கம்பெனி   உருப்பட முடியாது . அந்த கம்பெனியின் கோல் காரை விற்பது. இது எல்லாருக்கும் புரிந்தால் இல்லாத பாகத்தின் முக்கியத்துவம்  எல்லாருக்கும்  தெரியும். 


நம் எல்லோருடைய வாழ்கையிலும் இந்த புத்தகத்தில் சொல்லி இருப்பதை செயல் படுத்த முடியும் என்பது இந்த புத்தகத்தின் சிறப்பு. 


இவர் ஒரு இஸ்ரேல் நாட்டு மேலாண்மை குரு. மேலாண்மையில் இவர் எழுதிய புத்தகங்கள் சக்கை போடு போடுகின்றன. பல நிறுவனங்களை இவர் தன் மேற்பார்வையில் முன்னேற்றி இருக்கிறார். 2011 ம் ஆண்டு காலமானார்.  


தமிழில் : அஞ்சனா தேவ்

பிரசுரம் : விகடன்

விலை : ரூ 110   
__________________________________________________________________________________

இது என்னுடைய இன்னுமொரு தளமான anandhabavanam.blogspot.com என்ற தளத்தில் இருந்து எடுக்க பட்டது.   
__________________________________________________________________________________

Post Comment

11 comments :

 1. புத்தக விமர்சனம் சுருக்கமாக நன்றாக இருந்தது.
  இன்னும் ஒரு வலை பூ வேறு நடத்துகிறீர்களா?
  பார்த்துவிடுகிறேன்.
  மற்றும் வலைப்பூவின் Template நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி. அந்த வலை பூ வில் அதிகம் எழுத வில்லை. அதில் எழுதாமல் விட்டதை இதில் எழுதலாம் என்று பார்க்கிறேன்.

   Template ரொம்ப சிம்பிள் ஆகா இருக்கிறது என்று தோணுகிறது. பார்க்கலாம்.

   Delete
 2. அடுத்த புத்தகக் கண்காட்சியில் வாங்குவதற்கு ஒரு நல்ல புத்தகம் கிடைத்திருக்கிறது. நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக வாங்க வேண்டிய புத்தகம் ஸ்டாலின். மிகவும் சுவாரஸ்யமாக போகும். கீழே வைக்க மனம் வராது.

   Delete
  2. ஸ்டாலினா?!!
   இது வேறா? :-))

   Delete
  3. ஸ்டாலினா?!!
   இது வேறா? :-))

   Delete
  4. விஜய் , மன்னிச்சு , மன்னிச்சு . இன்னைக்கு monday ப்ளுஸ் - ல இருக்கேன். சாரி :-)

   Delete
 3. Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே.

   Delete
 4. நீங்கள் தமிழ் புத்தகங்களை அதுவும் செலக்ஷன் செய்து விமர்சனம் செய்துள்ளது அருமை. எனக்கும் பிடித்த புக் இது.
  மகனை அவனுடைய நண்பர்களோடு டூருக்கு கூட்டிக்கொண்டு போவதும் அங்கே ஒரு குண்டுப்பையனால் ஆகும் காலதாமதத்தை தவிர்க்க வழி கண்டுபிடிப்பதும் அருமையாக இருக்கும்.
  எனக்குத்தெரிந்து கம்பெனி நிர்வாகத்தைப்பற்றி இவ்வளவு எளிமையாக அதுவும் நாவல் வடிவில் தமிழில் வந்துள்ளது இந்த ஒரு புத்தகம் மட்டும் தான் என்று நினைக்கிறேன்.
  உங்களின் அடுத்த புத்தகவிமர்சனத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.
  இஸ்ரேல் உளவுத்துறை மொஸாட் படித்துள்ளீர்களா?

  ReplyDelete
 5. வருகைக்கு நன்றி காமிக்ஸ் பிரியன். ஆமாம் , மிக எளிமையாக இருக்கும். வாழ்வில் நடக்கின்ற விசயங்களை வைத்து பாடம் எடுத்திருப்பார். மொஸாட் படித்ததில்லை. Bladepedia வில் பார்த்தது. முடிந்தால் படித்து பார்க்கிறேன்.

  ReplyDelete