Monday, October 29, 2012

பு(து)த்தகம் : முடிவில் ஒரு திருப்பம் (A Twist in the Tale )


* முதலில் இந்த கதையை வாசித்து விட்டு விமர்சனத்துக்கு போகலாம்

குற்றமற்ற கொலை

கோர்ட் பரபரப்பாக இருந்தது. இன்று வாதங்கள் எல்லாம் முடிந்து தீர்ப்பு சொல்லும் நாள். 
குற்றவாளி  கூண்டில் ராம்  மோகன்  நின்று  கொண்டிருந்தார். கொண்டிருந்தார்  ? அவருக்கு  
வயது  50   க்கு மேலே. கிட்ட  தட்ட  என்  வயது. வரண்டாவில்  நடந்து  வரும்போது   இன்று 
குற்றவாளிக்கு  தண்டனை கொடுத்து  விடுவாங்க  இல்லே? என்று  ஒருத்தர் தன்  நண்பரிடம்  
கேட்டு  கொண்டு  இருந்தார். குற்றவாளிக்கு  இல்லை  ராம்  மோகனுக்கு  என்று  மனதுக்குள் 
 சொல்லி கொண்டேன். ஏனென்றால் நான்  தான்  அந்த  குற்றவாளி. இது என்னை தவிர யாருக்கும் 
தெரியாது. இப்போது உங்களுக்கும் தெரிந்து விட்டது. 

வீட்டில்  மனைவி  இருந்தாலும்  25௦ வயதான  வந்தனாவை  சின்ன  வீடாக  வைத்திருந்தேன். 
கிளப்பில் வந்தனா மாதிரி சில அரபு குதிரைகள் வருவது உண்டு.சில  சமயம் சில மாதங்கள் ,
சில சமயம் சில வருடங்கள் என்று குத்தகைக்கு எடுத்து கொள்வது உண்டு. ஆனால் 
வந்தனாவை மட்டும் தான் சின்ன வீடாக வாழ்க்கை முழுதும் வைத்து கொள்ள வேண்டும்
என்று தோன்றியது. அந்த எண்ணம் தான் அவளை கொலை செய்யவும் வைத்தது. இருங்கள், இருங்கள் ஒரேயடியாக என்னை வில்லன் என்று நினைத்து விடாதீர்கள். சபல புத்தி
அவ்வளவுதான், திட்டம் போட்டு கொலை செய்கிற அளவுக்கு நான் வொர்த் இல்லை.

அன்று  மட்டும்  என்  முடிவை  மாற்றிக்கொள்ளாமல்  இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் 
என்று  நினைத்துக்  கொண்டேன். ஒவ்வொரு வெள்ளி கிழமையும் நான் அவளுக்கு எடுத்து
கொடுத்திருக்கும் பிளாட்டுக்கு போய் ஜாலியாக  இருப்பது வழக்கம். அந்த கருப்பு வெள்ளியன்று 
அவளே போன் பண்ணினாள். வேலை நேரத்தில் ஏன்  போன் பண்ணுகிறாள்  என்று குழப்பத்துடன்   
  கேட்டால், தன் அக்கா வந்திருப்பதாகவும், கட்டாயம் பார்க்கவேண்டும் இன்று இரவு அமெரிக்கா
போகிறார்கள் என்றும் சொன்னாள். தட்டி கழிக்க முடியவில்லை என்றும் சொன்னாள். 
மொத்தத்தில் இன்னைக்கு சந்தோஷம் கட்டு அதானே என்று கத்தினேன். மறு முனையில் அழும் 
சத்தம் கேட்டது. போனை   கடாசி விட்டு வேளையில் முழுகினேன். வேலை முடிந்தவுடன் தான் நான் செய்தது தவறு என்று சுய நினைவுக்கு வந்தேன்.

சரி அவள் கிளம்பும் முன் சமாதான படுத்தி அனுப்பி வைப்போம் என்று அவளிருக்கும் 
வீட்டிற்க்கு காரை விட்டேன்.  பிளாட் நெருங்குவதற்கு  முன்பே வந்தனாவும், ராம் மோகனும் வெளியே வந்தனர். ராம் மோகன் போகும் முன் வந்தனாவுக்கு கொடுத்த முத்தத்தில்
 அனல் பறந்தது.

மவளே இரு உன்னை இன்னைக்கு ரெண்டில் ஒன்று பார்த்து விடுகிறேன் என்று நினைத்து அவள் 
சென்றவுடன் வீட்டிற்க்கு சென்று  கதவை தட்டினேன். என்னை எதிர் பாராதவள் திடுக்கிட்டு பின்பு 
சுதாரித்து கொண்டு    சிரித்தாள். "யார் அவன் வந்துட்டு போனது?" என்று ஆரம்பித்து 
பெண்மையை கேவலப்டுத்தும் எல்லா வார்த்தைகளையும் துப்பினேன். அவளும் உன் கூடவே 
கடைசி வரைக்கும் இருப்பேன் என்று நினைத்தாயா?" என்று ஆரம்பித்து திட்ட ஆரம்பித்தவுடன்  கோபத்துடன் அவள் முகத்தில் நன்றாக முஷ்டியை உயர்த்தி குத்தினேன். தடுமாறி கீழே 
விழுந்தவள் எழுந்திரிக்க வில்லை. அவ்வளவு  தான்ஆள் அவுட் சினிமாவில் வருவது 
மாதிரியே. எல்லா கை ரேகையையும் அழித்து விட்டேன்.

எனக்கு தெம்பளிக்கும் விஷயங்கள் ரெண்டு

1 ) நான் வருவதை யாரும் பார்க்க வில்லை.

2 )  வந்தனா எப்பொழுதும் தெரு முனையில் இருக்கும் டெலிபோன் பூத்தில் இருந்து தான்  
    பேசுவாள். அப்படி தான் பேச சொல்லி இருக்கிறேன்.அதுவும் என்  அலுவலக போனுக்கு. 
   என்னை கண்டு   பிடிக்க வழியே இல்லை.

ஆனால்   ராம் மோகனுக்கு  அதிர்ஷ்டம் இல்லை. கடைசியாக வந்து பார்க்க வந்தவர்
 என்று போலிஸ் மோப்பம் பிடித்து போக, எனக்கு அப்படி ஒருத்தி இந்த உலகத்தில் இருப்பதே 
தெரியாது என்று உளறி கொட்டி சுருக்கு கையிற்றை தானே இறுக்கி கொண்டான்.

ராம் மோகனின் வழக்கறிஞர் எவ்வளவுதான் வாதிட்டாலும் அரசு வக்கீல் ஒவ்வொரு 
வாதத்தையும் உடைத்து கொண்டு   இருப்பது  எனக்கு பிடித்திருக்கிறது. இதோ நான் எதிர் பார்த்த நேரம் வந்து விட்டது. தீர்ப்பு சொல்லும் நேரம், தீர்ப்பு அந்த கோர்ட் ரூமில் 
எதிரொலித்து  

" குற்ற வாளி மீது  குற்றம் நிருபிக்க பட்டுள்ளதால் இ பி கோ 302  படி குற்றவாளிக்கு ஆயுள்
 தண்டனை  கொடுத்து  தீர்ப்பளிக்கிறேன்  " என்று தீர்ப்பு எழுதினேன்  நான்.
_____________________________________________________________________________________
 

என் மன வானில்

சிவா G சொன்ன முடிவு மிகச் சரியானதுஇது என்னுடைய சிறுகதையல்லஒரு பிரபல 
நாவலாசிரியர் எழுதிய சிறுகதையை இந்திய சூழலுக்கு ஏற்ப என் எழுத்துக்களில் 
தந்திருந்தேன்வாசித்தவர்களுக்கும் முயற்சித்தவர்களுக்கும் நன்றிகள் பல.

இந்த கதை Jeffrey  Archer எழுதிய "A Twist in the Tale" என்ற சிறு கதை தொகுப்பின் 
தமிழாக்கமான "முடிவில் ஒரு திருப்பம்" என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்ட 
முதல் கதை. இந்த கதையின்  பெயர் "குற்றமற்ற கொலை".


இந்த தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு கதைகள் உள்ளனஇந்த கதைகளில் முதல் பத்து
கதைகள் உண்மை கதைகள்மீதி ரெண்டு மட்டுமே புனைவுஇந்த பத்து கதைகளை 
Archer ஜப்பானில் உள்ள டோக்கியோவில் இருந்து ற்றம்பிங்டன் (Trumpington ) 
என்ற இடத்துக்கு வரும் வழியில் அவர் சந்தித்த மனிதர்களிடம் இருந்து அறிந்த உண்மைகள்.

இதில் எனக்கு பிடித்த கதைகள்

1 ) குற்றமற்ற கொலை
2 ) கண்ணியமான கள்வர்கள் 
3 ) திருட்டும் சுருட்டும் 
4 ) கர்னல் தவளை    
5 ) நண்பர்கள்  

இதில் நண்பர்கள் கதையில் வரும் திருப்பமும் நன்றாக இருக்கும். கண்ணியமான கள்வர்கள், திருட்டும் சுருட்டும்  மற்றும் கர்னல் தவளை கதைகள் மனிதம் பேசுபவை.  படித்து பாருங்களேன்.

இந்த புத்தகத்தை வாங்க

 நீங்கள் இந்த புத்தக விமர்சனத்தையும் விரும்பலாம். கோல்
__________________________________________________________________________________
* முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் ரூ 400 விலையில் 10 கதைகளுடன்
 ஜனவரி 2013 வர இருக்கிறதுரிசெர்வ் பண்ணிவிட்டீர்களா?         

லயன் முத்து காமிக்ஸ் புத்தகங்களுக்கு சந்தா கட்டுவது எப்படி என்று  தெரிந்து கொள்ள இந்த லின்க்கை  பயன்படுத்தவும்.
 __________________________________________________________________________________
 

Post Comment

16 comments :

 1. //25௦ வயதான வந்தனாவை //
  250 வயதா? யப்பா!!!

  ReplyDelete
  Replies
  1. //250 வயதா?//

   நான் அப்படி சொல்லவே இல்லையே. 25 வயது என்று தான் சொல்லி இருக்கிறேன். :D

   Delete
  2. நீங்களே பாருங்கள்! (Firefox browser on PC)

   Delete
  3. ஒரு வேளை ஜன்க் கரக்டராக இருக்குமோ? என்னிடம் பையர் பாக்ஸ் தற்பொழுது இல்லை. அதனால் சப்போர்ட் கொடுக்க முடியாது. :D

   Delete
 2. கதை நன்றாகவே உள்ளது.

  //கடா விட்டு// எழுத்துப் பிழையா இல்லை ... :-)

  //அளித்து விட்டேன்.// இதையும் கொஞ்சம் கவனியுங்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. திருத்த பட்டு விட்டது நண்பரே !

   Delete
  2. நன்றி நண்பரே. அப்படியே அந்த புதன்கிழமை என்பதை மறுபரிசிலனை செய்யுங்கள் நண்பரே (இப்போதே சொல்லிவிடலாமே) :D

   Delete
  3. பொறுமை பொறுமை கொஞ்சம் யோசிச்சு முயற்சி பண்ணி பாருங்க நண்பரே :D

   இன்னும் ஒருத்தர் கூட முயற்சிக்க வில்லை. அதற்க்கு முன் விடையை சொல்ல சொல்கிறீர்களே ?

   Delete
 3. என்ற தீர்ப்பை வசித்து விட்டு எழுந்தேன் நீதிபதியான நான் ...

  இது ஓகே வா?

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கள் சிவா G

   Delete
 4. அருமை.. சிவா என்பவர் அளித்த டிவிஸ்ட் சரியானது என்பது என் அனுமானம்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அனுமானம் மிக சரி நண்பரே !

   Delete
 5. ஆஹா! கதையின் மொத்த twistம் கடைசியில் வரும் ஒற்றை வார்த்தையான 'நான்'.
  இப்படியும் கதை சொல்ல முடியுமா?! பலே!!

  ReplyDelete
 6. உங்களின் கதையில் வாசகரை கவர்ந்திழுக்க முடிவைக் கேட்ட விதம் அருமை. என்னால்தான் கலந்து கொள்ள முடியவில்லை.

  வாழ்த்துக்கள் சிவா.

  லிங்குகள் லேபல்ஸ் என்று உங்கள் ப்ளாக் களை கட்டியுள்ளது. சூப்பரப்.!!!

  தலைப்பில் காமிக்ஸ் சினிமா அலசல் என்றுள்ளதை
  தமிழில் காமிக்ஸ் சினிமா புத்தக அலசல் என்றிருந்தால் எப்படியிருக்கும். அல்லது இன்னும் பெட்டராக ........
  (விடுபட்ட இடத்தை நிரப்பவும்).

  ReplyDelete
 7. @Vijay Erode :உண்மைதான் அந்த "நான்" இல் இருக்கும் பஞ்ச் அலாதி. தமிழில் சுஜாதா இந்த அளவுக்கு பஞ்ச் கொடுக்க கூடியவர். வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 8. @COMICSPRIYAN :
  //உங்களின் கதையில் வாசகரை கவர்ந்திழுக்க முடிவைக் கேட்ட விதம் அருமை. என்னால்தான் கலந்து கொள்ள முடியவில்லை.//
  சின்ன யுக்தி. நிறைய பேர் முயற்சி செய்வார்கள் என்று நினைத்தேன். சிவா G பதிலை பார்த்த பிறகு யாருக்கும் அதை விட பெட்டர் கொடுக்க முடியாது என்று தோணியதோ என்னவோ.

  //தலைப்பில் காமிக்ஸ் சினிமா அலசல் என்றுள்ளதை
  தமிழில் காமிக்ஸ் சினிமா புத்தக அலசல் என்றிருந்தால் எப்படியிருக்கும். அல்லது இன்னும் பெட்டராக ........
  (விடுபட்ட இடத்தை நிரப்பவும்). //

  நிச்சயமாக மாற்றுகிறேன். எனக்கு என்னவோ சினிமாவை விட புத்தகங்கள் தான் என் பரிந்துரையில் அதிகம் வரும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete