Wednesday, October 17, 2012

காலம் மாறினால் காமிக்ஸ் ரசனை மாறுமோ ?


என் மன வானில்

ஆசிரியர் சனிக்கிழமை அன்று 80 % தான் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் அனுப்ப  முடிந்திருக்கிறது என்று தன் ப்ளோகில் சொல்லி இருந்தார். மீதம் இருந்த 20 % அடியேனும் 
ஒருவன் என்று  நினைக்கிறேன். ஒரு வழியாக வியாழக் கிழமை தான் வந்து சேர்ந்தது,
சோர்ந்தது என்று கூட சொல்லலாம்.

இந்த புத்தகம் பழைய சூப்பர் ஸ்டார்களான மாயாவி,ஸ்பைடர் மற்றும் ஆர்ச்சியை
விரும்புவர்களுக்கு ஒரு அமில சோதனை என்பதாலும் , ஆசிரியரே உங்கள் கருத்துக்களை 
பதிவு பண்ணுகள் என்று கேட்டிருந்தனாலும் ஆசிரியரின் தளத்தில்  வரும் பின்னுட்டங்களை  கூர்ந்து கவனித்து வந்தேன். 

ஒரு மிக்ஸ்டு ரியாக்சன்  ஆக தான் இருந்தது. மாயாவி கதை நீளம், ஸ்பைடர் ஆர்டினி
கிட்ட அடி வாங்குவதை பார்க்க முடியலை, ஆர்சியை முன்ன மாதிரி ரசிக்க முடியவில்லை 
என்று ஒரு சாராரும், சிகப்பு ட்ரெஸ்ஸும், பச்சை ஷுவும் ஸ்பைடருக்கு எவ்வளவு பொருந்தி 
இருக்கு, கடையில் இருப்பதிலேயே நம்ம புத்தகம் தான் பளிச்சுன்னு தெரியுது, மாயாவியை 
பிரியவே முடியவில்லை என்று மற்றொரு சாரரும் சொல்லி கொண்டிருந்தனர்.         

அதில் துரை பிரசன்னா எழுதி இருந்த பின்னுட்டம்  என்னை கவர்ந்தது.  


//மிகவும் பொறாமையாக இருக்கிறது ! நிறைய வாசகர்கள் தற்போதும் ரசிக்கும் (சிறு வயதில் நானும் ரசித்த) சூப்பர் ஹீரோ ரக கதைகளை என்னால் இப்போது மட்டும் ரசிக்க முடியவில்லையே !!!

வயது தான் காரணமா? பிறகு ஏன் லக்கி லுக் , சிக் பில் போன்ற மினி லயன் கதைகள் அப்போதும்/இப்போதும்/எப்போதும் ரசிக்க முடிகிறது? என்ன ரசனை சார் இது!//

இது நம் எல்லார் மனதில் இருக்கும்/இருந்த  கேள்வி என்றாலும் நாம் ஏதாவது ஒரு பக்கம்
சாய்ந்து பழைய கதைகள் வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ ஒரு முடிவு எடுத்து விடுகிறோம். ஆனால் அவர் சுய தேடலில் நின்று விட்டார்.  காமிக்ஸ் சின்ன பிள்ள சமாசாரம்
என்பவர்கள்  பலரும் எங்களால் இதை படிக்க முடியாது என்று சொல்வது  சூப்பர் ஹீரோ
கதைகளைத்தான். நானும் என்ன காரணமாக இருக்கலாம் என்று சிறிது ஆராய்ந்த போது

குழந்தை பருவத்தில் பிடித்த சூப்பர் ஹீரோஸ் இப்போது ஏன் பிடிக்கவில்லை?

நாம் சூப்பர் ஹீரோக்களை மிக விரும்பிய  சமயம் நம் குழந்தை பருவம். குழந்தை பருவத்தில் 
நமக்கு/ நம் கற்பனைக்கு எல்லை இல்லை. வளர வளர நாம் இது ஒரு மனிதனால் இது செய்ய 
முடியும் இது செய்ய முடியாது என்று ஒரு எல்லையை வரைந்து  கொள்கிறோம். அதை மீறி
ஒரு செயலை நாம் படிக்கும் போது அது போங்கு ஆட்டம் என்று முடிவு பண்ணி அதன் மேல்  உள்ள ஈர்ப்பு குறைந்து விடுகிறது.  ஆனால் குழந்தைகளுக்கு அப்படி ஒரு எல்லை இல்லாததால்
ஈர்ப்புடன் அந்த செயலை தானே  செய்வதாக ஈர்ப்புடன் நினைத்து படிக்க ஆரம்பித்து விடுகிறது.
இப்போதும் நாம் வரைந்து/வகுத்து வைத்திருக்கும்  எல்லைகளை மறந்து விட்டு சிறு
குழந்தைகளைப் போல் "Everthing is possible" என்ற எண்ணத்தோடு படிக்க ஆரம்பித்தால் நமக்கு 
பிடிக்க ஆரம்பிக்கும்.

ஆனால்  சூப்பர் ஹீரோ மூவீஸ் வெற்றி அடைகிறதே ?

சூப்பர் ஹீரோ மூவீஸ் வெற்றி அடைவதற்கு காரணம் அதில் உள்ள டெக்னாலஜி/கிராபிக்ஸ்.
அதன் மூலம் ஓரளவிற்கு நம் வாழ்விற்கு அந்த படத்தை ரிலேட் பண்ண முடிகிறது அல்லது
புது விசயங்களை பார்த்து வியப்படைந்து அதை ரிலேட் பண்ண முடியாவிட்டாலும் ஒத்து
 கொள்கிறோம்   . ஆனால் காமிக்ஸ் புத்தகத்தில் அது சாத்தியம் இல்லை. அதனால்தான்
சூப்பர் ஹீரோ காமிக்ஸ் ஒரு வயதுக்கு மேல் ரசிக்க படுவதில்லை.


ஏன் சிக் பில், லக்கி லுக், டெக்ஸ், டைகர் கதைகள் இப்போதும் பிடிக்கிறது  

அவை காமெடி மற்றும் உண்மைக் கதைகள் அவற்றை நம் வாழ்வுடன் ரிலேட் பண்ணுவதற்கு 
எந்த தடையும் இல்லை. அதனால் எந்த வயதிலும் நமக்கு வித்தியாசம் தெரிவதில்லை.

இவை எல்லாம் என் சிந்தனைகள் மட்டுமே. நீங்கள் உங்கள் கருத்துக்களை பின்னுடமிடுங்கள்.

________________________________________________________________________________

இன்று ஒரு கேள்வி

சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் படித்த பின்னர் மும்மூர்த்திகளின் (மாயாவி, ஸ்பைடர், ஆர்ச்சி)கதைகள் மறு பதிப்பாக வேண்டும் என்ற எண்ணம் மாறியிருக்கிறதா ?

உங்கள் எண்ணங்களை தெரிவியுங்கள்.

________________________________________________________________________________

Post Comment

21 comments :

 1. //உங்கள் எண்ணங்களை தெரிவியுங்கள்//
  ஹி ஹி ஹி ;)

  ReplyDelete
  Replies
  1. அடடா கார்த்திக் அப்படியே என் எண்ணத்தைப் பிரதிபலிச்சிட்டீங்க :P he he :P

   ச்சும்மா... காலாய்க சொன்னேன் ;)

   Delete
  2. சும்மா இப்பிடி சிரிச்சிட்டு போனா மும்மூர்த்தி டைஜெஸ்டுன்னு ஒன்னு போட்டுடுவாங்க. அப்புறம் உங்களால டைஜெஸ்ட் பண்ண
   முடியாது பார்த்துக்கோங்க :D

   Delete
 2. மறுபதிப்புகள் வேண்டும் ஆனால் மும்மூர்த்திகள் உடையது வேண்டுமா என்றால் சற்று யோசிக்க வேண்டியது தான்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி. நம்ம என்னதான் யோசித்தாலும் வர்றது தான் வரும் வேணும்னா வாங்குவோம், இல்லேன்னா விடுவோம்.:D

   Delete
  2. வாங்கறது வேற படிக்கறது வேற.
   வாங்கறது வாங்கிருவோம்.அப்புறம் பாத்துக்கலாம்.

   Delete
  3. வாங்கறது வேற படிக்கறது வேற.
   வாங்கறது வாங்கிருவோம்.அப்புறம் பாத்துக்கலாம்.
   சூப்பர் ஹீரோக்களின் பிளாப் படங்களை பார்த்து வெறுத்து போனாலும் அவர்களின் அடுத்த படமாவது தேறுமா என்று அடுத்த படம் வந்தவுடன் பார்ப்பதில்லையா?
   பெட்டர் லக் நெக்ஸ்டைம்.

   Delete
  4. @கிருஷ்ணா வ வே : உங்க அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்கு :D

   Delete
  5. @COMICSPRIYAN : உண்மைதான். ஆனால் சில காமிக்ஸ் நம்மை படுத்தி எது விடும். தூங்கி போன டைம் பாம் என்று ஒரு காமிக்ஸ் படித்தேன். ஒரே முறையில் படிக்க முடியாமல் ரெண்டு மூணு நாள் விட்டு விட்டு வாங்கினா படிச்சுரனும்கிற தார்மீக கடமையை நிறைவேற்ற படித்து முடித்தேன். முடியல சாமி :-(

   Delete
 3. எனது முதல் வருகை!

  மாயாவி கதைகள், ரிவால்வர் ரீட்டா போன்ற கதைகள் சிறுவயதில் படித்ததுண்டு. இப்பொழுது அந்த புத்தகங்கள் கிடைக்கின்றனவா?

  நன்றி!

  ReplyDelete
 4. வாங்க நண்பா. இப்போ சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் ன்னு ஒரு புத்தகம் வந்துருக்குது. ரூ 100 திகட்ட திகட்ட மாயாவியை படிக்கலாம். :D

  இந்த முகவரிக்கு சென்று எப்படி வாங்குவது என்று பாருங்கள்.
  http://www.bladepedia.com/2012/07/lion-and-muthu-comics-subscription-info.html

  நீங்கள் சென்னையில் இருந்தால் "டிஸ்கவரி புக் பாலஸில்" வாங்கலாம்.

  லயன் ஆசிரியருடைய ப்ளாக் http://lion-muthucomics.blogspot.com சென்று படித்து பாருங்கள்.

  ரிவால்வர் ரீட்டாவா உலகம் தாங்காது சாமி. அதுக்கு ஒரு டைஜெஸ்ட் வந்தா, நினைக்கவே பீதியா இருக்கு

  ReplyDelete
 5. என் மனதுக்குள் கொஞ்சம் மங்கலாக இருந்த கேள்விகளுக்கும், அதற்கான பதில்களுக்கும் மனோதத்துவரீதியாக விளக்கமளித்து அசத்திவிட்டீர்கள் நண்பரே!

  இந்த சமயத்தில் மிக தேவையானதொரு பதிவு இது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

  என்னுடைய எண்ணவோட்டம்...
  உண்மையில் காமிக்ஸ் கிளாசிக்சில் நான் எதிர்பார்த்து வேறு, இப்போது அறிவிக்கப்பட்டிருப்பது வேறு. நான் எடிட்டரிடம் கேட்டுக்கொண்டதெல்லாம், காமிக்ஸ் கிளாசிக்ஸ் டைஜெஸ்ட்டுகள் கூட இன்றைய தலைமுறை வாசகர்களையும் ஈர்ப்பதான கதைகளைக் கொண்டிருந்தால் (பழைய வாசகர்கள்தான் எதைக்கொடுத்தாலும் படிப்பார்களே!) எதிர்கால காமிக்ஸ் வளர்ச்சிக்கு உதவியாய் அமைந்திடும் என்று வலியுறுத்தினேன். ஆனால் நடந்ததோ வேறு.
  அறிவிக்கப்பட்டிருக்கும் CCகளை வாங்கிவிடுவேன் என்பது உறுதி. ஆனால் எல்லாக் கதைகளையும் படித்திடுவேனா என்பது தெரியாது!

  ReplyDelete
  Replies
  1. //என் மனதுக்குள் கொஞ்சம் மங்கலாக இருந்த கேள்விகளுக்கும், அதற்கான பதில்களுக்கும் மனோதத்துவரீதியாக விளக்கமளித்து அசத்திவிட்டீர்கள் நண்பரே!
   //

   நன்றி நண்பரே. சரியான பாயிண்ட்டை பிடித்து விட்டீர்கள். நான் என்ன நினைத்து எழுதினேனோ அது உங்களுக்கு
   சென்று சேந்து விட்டது. மனோ தத்துவ ரீதியாக யோசித்து தான் எழுதினேன்.மிக்க மகிழ்ச்சி.

   //எதிர்கால காமிக்ஸ் வளர்ச்சிக்கு உதவியாய் அமைந்திடும் என்று வலியுறுத்தினேன். ஆனால் நடந்ததோ வேறு. //

   கொஞ்சம் கொஞ்சமாய் எடிட்டரிடம் கேட்டு மாற்றுவோம். என்னும் எவ்வளவோ தூரம் இருக்கிறது.

   Delete
 6. //ஒரு வழியாக வியாழக் கிழமை தான் வந்து சேர்ந்தது, சோர்ந்தது என்று கூட சொல்லலாம்.

  அழகான வார்த்தை விளையாட்டுக்கள்.

  எனக்கு மும்மூர்த்திகளின் கதைகளைப் படிப்பதில் பிரச்சினையில்லை. ஆனால் நான் படித்த, இன்றும் படித்தால் ரசிக்கும் சில ஸ்பைடர் கதையைப் போல இந்தக் கதையில்லை.

  லயன்/முத்துவில் வராமல் கிளாசிக் காமிக்ஸ்சாக வருவதை வரவேற்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராம்ஜி. எனக்கும் ஸ்பைடர் மிகவும் பிடிக்கும். ஆங்கிலத்தில் சதுரங்க வெறியன் வாங்கி படித்தேன். ஆனால் அவ்வளவு ரசிக்க வில்லை. சூ ஹி சூ ஸ்பெஷல் ஐ படித்து விட்டு தான் தமிழில் பிடிக்கிறதா என்று பார்க்க வேண்டும்

   Delete
 7. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு குழந்தையும் வளர்ந்தவனும் இருக்கிறான்.
  குழந்தையின் ஆசைகளை சில சமயம் வளர்ந்தவனும் ரசிக்கிறான்.
  மற்ற ஆசைகளை இது ஒர்த் இல்ல என சுட்டிக்காட்டவும் செய்கிறான்.
  இதுவே குழந்தையும் வளர்ந்தவனும் முன்னேற வழி. ( அப்போ என்னதான் சொல்ல வர்றீங்க?) ( ஹிஹிஹி. ஓஷோ புக் படித்துக் கொண்டிருந்தேனா அந்த எஃபக்ட்)

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் சில சமயம் குழந்தையாகவும் சில சமயம் வளர்ந்தவராகவும் இருக்க வேண்டும்

   Delete
 8. நண்பரே, நீங்கள் ஏன் நம் எடிட்டரின் Blogல் அதிகம் கண்ணில் படுவதில்லை? நல்ல பதிவர்களில் சிலர் பின்னூட்டமிடுவதில்லை. என்ன நடக்கிறது இங்கே?

  ReplyDelete
  Replies
  1. நல்ல பதிவர் என்றதற்கு நன்றி ! என்னைய ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாம்மா :D

   உண்மைதான் கடந்த சில போஸ்டுகளில் நான் பின்னுட்டமிடவில்லை. ஆனால் அதற்க்கு எந்த காரணமோ அரசியலோ இல்லை. நான் படிப்பதற்குள் 60 அல்லது 70 பின்னுட்டம் இருக்கும் அதிலேயே
   நான் கேட்க வேண்டிய கேள்வி எல்லாம் கேட்டிருப்பார்கள். தனியே நாம் வேறு எதற்கு என்று சோம்பேறிதனம் தான் காரணம்.


   இதை அரசியலாக சிலர் பார்க்க கூடும் என்பது உங்கள் கேள்வி மூலம் தெரிகிறது. நிச்சயம் பின்னுட்டம் இடுகிறேன்.

   Delete
 9. //குழந்தை பருவத்தில் பிடித்த சூப்பர் ஹீரோஸ் இப்போது ஏன் பிடிக்கவில்லை?
  //

  முதல் மரியாதை , கிழக்குச் சீமையிலே இன்றும் பிடிக்கிறது. அன்னக் கொடி பிடிக்கவில்லை. முதல் மரியாதைக்கும் கிழக்குச் சீமையிலேக்கும் நடுவில் வந்த என்னுயிர் தோழனும்கூட பிடிக்க வில்லை. இதற்கான காரணம் தான். சூப்பர் ஹீரோஸுக்கும்,. படைப்பாளிக்களின் கற்பனைத் திறன் வற்றிவிட்டது அவ்வளவுதான்.

  ReplyDelete