Friday, October 12, 2012

ஆஸ்டரிக்ஸ் அண்ட் ஓப்ளிக்ஸ் - அறிமுக படலம்
மக்களே இது "ஆஸ்டரிக்ஸ் அண்ட் ஓப்ளிக்ஸ்" காமிக்ஸின் கதா நாயகர்கள் பற்றிய அறிமுகம் மட்டுமே. ஏற்கனவே இவர்களைப் பற்றி தெரிந்திருந்தால் & முக்கியமான வேலை இருந்தால்,
நீங்கள் அப்புறம் வந்து வாசித்து கொள்ளலாம். இல்லையென்றால் என்னுடன் வாருங்கள்
இவர்களைப் பற்றி பார்ப்போம்.

_____________________________________________________________________________________

என் மன வானில்

"ஆஸ்டரிக்ஸ் அண்ட் ஓப்ளிக்ஸ்" காமிக்ஸ் தமிழில் எந்த காமிக்ஸிலும் இதுவரை
வெளிவரவில்லை என்றே நினைக்கிறேன். இருந்தால் பின்னுட்டமிடவும்.
இந்த ஹீரோக்களை பற்றி நான் முதன் முதலில் ஒரு திரைப்படம் மூலமாகவே அறிந்து 
கொண்டேன்.   "இம்சை அரசி கிளியோப்பாட்ரா" என்று ஒரு படம், அந்த படத்தில் இவர்கள்
அடித்த கூத்துக்களை பார்த்து இவர்களைப் பற்றி தேடும் போதுதான், இவர்கள் காமிக்ஸில்
இருந்து திரைப்படம் போனவர்கள் என்று அறிந்தேன்.


1960 களில் இருந்த வந்த ஒரு காமிக்ஸ் நமக்கு தெரியாமல் இருந்திருக்கறது. என்ன
காரணத்திலாலோ லயனும் , ராணியும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள். நான் இருந்த
சிற்றூரில் லயன் காமிக்சே அதிகம்.இதில் ஆங்கிலத்தில் உள்ள காமிக்ஸ் கொடுத்திருந்தாலும்
படித்திருக்க முடியாது. நாங்கல்லாம் நாலாப்புல தான் ABCD கத்துக்க ஆரம்பிச்சொம்னா
பாத்துக்கோங்களேன்.   நாங்கல்லாம் அப்பயே  அப்புடி இப்ப சொல்லவா வேணும். அதனால்
நிறைய பேருக்கு (பெரு நகரங்களில் இருக்கும் ஆங்கிலம் படிக்க தெரிந்தவர்களை தவிர) 
இந்த கதாநாயகர்களை பற்றி தெரியாமல் இருக்க நிறைய வாய்ப்பிருப்பதால் இந்த அறிமுகம்.

இதை எழுதியவர் ரேனே கோச்சின்னி  René Goscinny  படம் வரைந்தவர் Albert Uderzo .
ரெனேயின் மறைவுக்கு பிறகு ஆல்பர்ட் தானே எழுதவும் வரையவும் ஆரம்பித்து விட்டார்.
இந்த காமிக்ஸை  மையமாக கொண்டு  8  கார்டூன் படமும், 3  சினிமாக்களும் வந்துள்ளன. இந்த
 ஆண்டு (2012 ) இன்னுமொரு முப்பரிமாண திரைப்படம் (3D ) வர இருக்கிறது
 Asterix & Obelix: On Her Majesty's Service  பார்க்க தவறாதீர்கள்.

_____________________________________________________________________________________

களம்

ரோம சாம்ராஜ்யம் தன் இறக்கைகளை உலகின் நாலா புறமும் விரித்துக் கொண்டிருந்த நேரம்.
சீசரின் கட்டளைக்கு அனைத்து மன்னர்களும் சேவை  செய்ய காத்துக் கொண்டிருந்த நேரம்.
ஒரே ஒரு சிறு கிராமத்தினர் மட்டும் வரட்டும் சீசர், அடிப்போம் அவனை சிக்ஸர் என்று நக்கலாக
சிரித்து கொண்டிருந்தனர்.  அந்த கால்(GAUL)  பழங்குடி கிராமத்தினர் இதுவரை  சீசருக்கு
அடிபணியாமல்  இருந்தது மட்டுமில்லாமல், ரோம வீரர்கள் நடுஇரவில் பயங்கர கனவில்
திடுக்கிட்டு எழும் அளவுக்கு அவர்களை பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். ச்சே ரொம்பவே
போரடிக்கிறது, இந்த ரோம வீரர்கள் இந்த பக்கமே வர மாட்டேன்கிறாங்களே என்று நக்கல்
விடும் அளவுக்கு இந்த கிராமம் இருக்கிறது.


இந்த கிராமத்தின் அசகாய வீர சூரர்கள் இருவர் ஆஸ்டரிக்ஸ் அண்ட் ஓப்ளிக்ஸ்.

ஆஸ்டரிக்ஸ்(Asterix)

மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரியதுன்கிற மாதிரி, ஆள் சின்னதாக இருந்தாலும் வீரத்திலும்
மதி யுகத்திலும் சிறந்தவன். எந்த காரியத்திலும் முன் நிற்பவன். மந்திர பானத்தை குடிப்பதன்
மூலம் இணை இல்லா சக்தி பெற்று  எதிரிகளை துவம்சம் செய்பவன்.

ஓப்ளிக்ஸ்(Obelix)

இவர் தான் இந்த கிராமத்தின் வடிவேலு. ரொம்ப அப்பாவி. வெள்ளந்தியாக இவர் கேட்க்கும்
கேள்விகள், செய்யும் செயல்கள் சிரிப்புக்கு உறுதி. லக்கி லூக்கின் அவாரல் டால்டன் மாதிரி
ஒரு அப்பாவி.    இவர் சிறு வயதில் மந்திர பானம் கலக்கும் அண்டாவில் தவறி விழுந்து விட்டார்.
அதனால் அந்த மந்திர பானத்தின் சக்தி இவருக்கு எப்போதும் கிடைத்து விட்டது.  தனியாக
ஆஸ்டரிக்ஸ்    மாதிரி குடிக்க வேண்டியதில்லை.  விழுந்த அண்டாவை கழற்றமுடியாமல் அதன் மேலாக போட்டிருப்பது  போன்ற கீழுடையும், அதை ஷகீலா மாதிரி மார்புக்கு மேலாக கட்டி
கொண்டு இருப்பதும் , தலையில் இருக்கும் ரெட்டை சடையும் கொண்ட காமடி தோற்றம்
கொண்டவர்.ஆஸ்டரிக்ஸ் இன் உயிர் நண்பர். அவர் கூடவே இருப்பவர். சரியான சாப்பாட்டு ராமன். அதுவும் காட்டு பன்றி என்றால் எண்ணிக்கோ என்று 13 , 14 என்று வெளுத்து வாங்குவார்.
 சாப்பிடும் போது இவரை யாரும் தொந்தரவு செய்ய  கூடாது. செய்தால் அவ்வளவுதான் பின்னி 
பெடல் எடுத்துவிடுவார்.  இரவு ஆரம்பித்த சாப்பாட்டை அடுத்த நாள் காலை வரை சாப்பிட்டு
கொண்டிருக்க கூடிய வல்லமை (?) படைத்தவர்.

டாக்மாடிக்ஸ் (Dogmatix)
இது ஓபிலிக்ஸின் வளர்ப்பு நாய். ஓபிலிக்ஸ்ஸின் உருவம் மலை போல் என்றால் இதன் உருவம் 
கடுகு போல். ஓபிலிக்ஸ் இதை கொஞ்சுவது கவிதையாக இருக்கும். இது ஒரு கடும் 
கோபக்கார நாய். முக்கியமாக மரங்களுக்கு ஒரு ஆபத்து என்றால் கடும் கோபம் கொள்ளும். 
அதற்கு காரணம்  அதற்க்கு சுச்சா போக வசதியாக இருக்கும். :D  மோப்பம் பிடிக்கும் விசயத்தில் 
ரின் டின் கேன் மாதிரி ரொம்பவே மோசம்.        

வைட்டல்ஸ்டாடிஸ்டிக்ஸ்(Vitalstatistix)முதல் படத்தில் ஆஸ்டரிக்ஸ் மற்றும் ஓப்ளிக்ஸ்க்கு நடுவில் இருப்பவர். இவர் இந்த
 கிராமத்தின்  தலைவர். கிராமத்துக்கே தலைவர் என்றாலும் வீட்டில் அவர்  மனைவி 
வைத்ததே சட்டம் ( ஹி ஹி நம்ம மாதிரி). பயங்கர கொவக்கரர் (வெளியில மட்டும்).
இவரை எப்பொதும் ஒரு கேடயத்தின் ஏற்றி  நாலு  பேர் தூக்கிக்கொண்டு  வருவார்கள்.
 தலைவருக்கு தரப்படுகிற மரியாதை அது.ஆஸ்டரிக்ஸ் அண்ட் ஓப்ளிக்ஸ்
இருவரும் இவருடைய இரு கைகள்.

சன் பிச்சர்ஸ் டப்  பண்ணி வெளியிட்ட "Outlander " என்ற படத்திலும் கேடயத்தின் மீது
நடக்கிற போட்டி இருக்கும்.

கெட்டபிக்ஸ் (GetaFix )
இவர்தான் மந்திர பானம் தயாரிக்கும் நிபுணர். இவர் அதி பயங்கர சக்தி தரும் பானத்தை மட்டும்  தயாரிப்பதில்லை. அது தவிர நிறைய பானங்களையும் தயாரிப்பார். நான் பார்த்த ஒரு படத்தில்
 நிறைய ரோம வீரர்களை பார்த்தவுடன், இவர் கொடுக்கும் மந்திர பானத்தை குடித்தவர்கள்  பலுகி பெருகுவார்கள்  (க்ளோன் எடுத்த மாதிரி). இந்த மாதிரி ஏகப்பட்ட விசயங்களை
 வைத்திருப்பவர்.

காகோபோனிக்ஸ் (Cacofonix )
முதல் படத்தில் இடது பக்கம் நிற்கும் மஞ்சள் முடிக்காரர். இவர் இந்த கிராமத்தின் ஆஸ்தான கவிஞர். சைக்கிள் கேப்ல கவிதை பாட ஆரம்பித்து  விடுவார். ஆனால் குரல் கர்ண கொடுரம்
(இந்த வார்த்தைக்கு அர்த்தம் யாருக்காவது தெரியுமா?).

ஜெரியாற்றிக்ஸ்(Geriatrix )      
இவர் கிராமத்தின் மூத்த குடிமகன் (நிஜமாகவே). வயது 93 . கொஞ்சம் ஊத்திக்கிட்டா 10  வயசு குறைந்து விடும் என்று நம்புவர். கிராமத்தலைவர் நெருக்கடியான சமயங்களில் இவரிடம்
உதவி கேட்ப்பார்.  இந்த பெருசு பண்ற ரவுசு தாங்க முடியாது.

இது தவிர நாற்றமடிக்கும் மீன் விற்கும் அன்ஹைஜினிக்ஸ்(Unhygenix ) அவருடைய மனைவி
பாக்டீரியா (Bacteria )மற்றும் ஆயுதங்கள் செய்யும் புல்லிஆடோமடிக்ஸ்  (Fullyautomatix )
<<இவருடைய அப்பா பெயர் செமி ஆடோமடிக்ஸ் :D >> & அவரது மனைவி
 மற்றும் ஜூலியஸ் சீசர் (Julius Caesar). சீசரைத் தவிர அனைவரும் அந்த கிராமத்தில் இருந்து வருகிறார்கள்.

எல்லா பெயர்களும் "ix " இல் முடிவதை கவனியுங்கள். அவர்கள் பெயருக்கும் தொழிலுக்கும் சம்பந்தம் இருப்பதை  பாருங்கள்.  

 எல்லா கதாபாத்திரங்களின் அணிவகுப்பு_____________________________________________________________________________________

சொடுக்குங்கள்   

எல்லா கதா  பாத்திரங்கள் பற்றி அறிய  

ஆஸ்டரிக்ஸ் - விக்கிபீடியா

_____________________________________________________________________________________

நீங்கள் காமிக்ஸ்டாவை விரும்பினால்

1 ) "Join this Site" என்ற பட்டனை அழுத்தி  காமிக்ஸ்டாவை follow பண்ணலாம் .

2) உங்கள் தளத்தில் நீங்கள் விரும்பும் ப்ளாக் லிஸ்ட் போட்டிருந்தால் காமிக்ஸ்டாவையும்
    இணைக்கலாம்.
_____________________________________________________________________________________
இன்றைய கேள்வி

நீங்கள் ஆஸ்டரிக்ஸ் அண்ட் ஓப்ளிக்ஸ் படித்திருக்கிறீர்களா ? ஆஸ்டரிக்ஸ் அண்ட் ஓப்ளிக்ஸ்
 படம் ஏதாவது பார்த்திருக்கிறீர்களா ?   பின்னூட்டமிடவும் .

_____________________________________________________________________________________

Post Comment

23 comments :

 1. நல்லதொரு அறிமுகம் நண்பரே.
  நானும் சில திரைப்படங்கள் மற்றும் காமிக்ஸ் படித்துள்ளேன்.
  ஆனால் காமிக்ஸின் விலை 400 மேல்.
  ஆகையால் ஒன்றோ இரண்டோ தான் படித்துள்ளேன்.
  பார்க்கலாம் நமது லயனில் வந்தால்.

  ReplyDelete
  Replies
  1. ஒரு சிறு வருத்தம் முக்கியமான அந்த நாய் குட்டியின் அறிமுகம் கொடுக்காமல் விட்டு விட்டீர்கள். :D

   Delete
  2. நீங்கள் சொன்ன குறை களையப்பட்டது, நண்பரே. டாக்மாடிக்ஸையும் இணைத்து விட்டேன்.

   Delete
 2. Lion comicsil padika kathirukiren nanbaray...

  ReplyDelete
  Replies
  1. நானும்தான். ஆனால் எவ்வளவு சீக்கிரம் என்று தெரிய வில்லை. பாட்மேன் போல இதுவும் ஒரு ஹை ப்ரோபைல் கதை என்று நினைக்கிறேன்.

   Delete
 3. அறிமுகங்கள் நன்றாக உள்ளன!

  ஃபுல்லி ஆட்டோமேடிக்ஸ் - பய புள்ளைக எப்படி எல்லாம் பெயர் வைக்கறாங்க! :) இந்த ஸ்டைல்ல உங்களுக்கு பெயர் வைக்கணும்னா காமிக்ஸ்டாடிக்ஸ் ;)

  எனக்கு ப்ளேடுபீடியாடிக்ஸ் ;) ச்சே, ஏதோ வியாதி பேர் மாதிரி இல்ல இருக்கு?!! :D

  ReplyDelete
  Replies
  1. :D உண்மைதான். பெயரை கேட்டவுடன் சிரிப்பு வந்து விட வேண்டும் என்று வைத்திருப்பார் போல இருக்கிறது.

   Delete
 4. ஆல்பம் முழுவதும் வாசித்து முடிக்கவில்லை. சுமார் 5 கதையளவில் வாசித்திருக்கின்றேன் அதுவும் என்னுடைய அக்கா பையன் தயவில். அவனிடம் கடன் வாங்கிப் படித்ததுதான்.

  இதெல்லாம் லயனில போட்டுத் தேறுமா தெரியாது சாமி.

  ReplyDelete
  Replies
  1. விலை அதிகம் தான். இப்போது இருக்கும் ரசனைக்கு ஒத்து வருமா தெரிய வில்லை. மினி லயனில் (வந்தால்) வெளியிடலாம்.

   Delete
 5. காமிக்ஸ் அறிமுகம் அருமை. நான் இதுவரை எந்தக் கதையையும் படித்ததில்லை. உங்கள் பதிவு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே . லயனில் வந்தால் படிக்கலாம்.

   Delete
 6. நல்ல பதிவு, நல்ல படங்கள்!

  ஆஸ்ட்ரிக்ஸை தமிழில் காண வெகுநாட்களாக மனசு ஏங்கிக்கிடக்கறது.

  அந்த ஏங்கத்தை இன்னும் அதிகரித்த ராஜ் முத்து குமாருக்கு நன்றிகள் பல!

  இப்படிக்கு,
  விஜய்டிரிக்ஸ்

  ReplyDelete
  Replies
  1. நன்றி விஜய். எனக்கும் தமிழில் ஓபிலிக்ஸ் அடிக்கும் கூத்துக்களை படிக்க ஆசை.

   Delete
 7. நல்ல பதிவு, நல்ல படங்கள்!

  ஆஸ்ட்ரிக்ஸை தமிழில் காண வெகுநாட்களாக மனசு ஏங்கிக்கிடக்கறது.

  அந்த ஏங்கத்தை இன்னும் அதிகரித்த ராஜ் முத்து குமாருக்கு நன்றிகள் பல!

  இப்படிக்கு,
  விஜய்டிரிக்ஸ்

  ReplyDelete
 8. நல்ல இருக்கு நண்பா, ஆமாம் இங்கே இலங்கையில் இவரது பெயர் - astrix சுரபப்பா, oblix ஜிம்பப்பா, getafix வெதபப்பா...... அதாவது வீரன், கொழுத்தவன்,வைத்தியர், என்று பொருள் படலாம்.


  இவர்ஹல் சிங்களத்தில் பேசும்போது மிஹவும் நக்கலாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே

   //இவர்ஹல் சிங்களத்தில் பேசும்போது மிஹவும் நக்கலாக இருக்கும்.//

   மொழி பெயர்ப்பு செய்பவர்களின் கைவண்ணம் அது :-)

   Delete
 9. படித்திருக்கிறேன், அதுவும் மூல பிரெஞ்சு மொழியில்! ஆஸ்டெரிக்ஸ் மற்றும் ஓபெலிக்ஸ் தவிர எல்லா பெயர்களும் மாறியிருக்கும்.

  La guerre des chefs (War of the chieftains) காமிக்ஸில் ஒரு விசேஷம். அதில் ஒருவர் ரோமின் அடிவருடி. அவருடைய ஆசனத்துக்கு பின்னால் ஒரு பேனர் இருக்கும், "Rome sweet Rome" என்று. அதாவது பிரெஞ்சு மூல வெர்ஷனில் ஒரு ஆங்கில வாக்கியம்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
  Replies
  1. //படித்திருக்கிறேன், அதுவும் மூல பிரெஞ்சு மொழியில்! //

   சார் சூப்பர். நீங்கள் பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளர் என்று உங்கள் ப்ரோபிளில் பார்த்தேன். சென்னையில் பிரெஞ்சு ஆனா ஆவன்ன வில் இருந்து படிக்க எங்கு எகநோமிகலாகவும் நன்றாகவும் இருக்கும். எனக்கு வேற்று மொழி படிக்க ஆசை.

   //La guerre des chefs (War of the chieftains) காமிக்ஸில் ஒரு விசேஷம். அதில் ஒருவர் ரோமின் அடிவருடி. அவருடைய ஆசனத்துக்கு பின்னால் ஒரு பேனர் இருக்கும், "Rome sweet Rome" என்று. அதாவது பிரெஞ்சு மூல வெர்ஷனில் ஒரு ஆங்கில வாக்கியம்//

   தெரியாத செய்தி. பிரெஞ்சில் படித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

   Delete
 10. "இம்சை அரசி கிளியோப்பாட்ரா" படம் பார்த்திருக்கிறேன். அதற்கு முன் ஏதோ கார்டூன் சேனலில் கார்டூனாக பார்த்த ஞாபகம், ஆனால் எந்த சேனலில் என்று நினைவில்லை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி பாசித். உங்கள் ப்ளோக்கர் நண்பன் தான் ஆபத்திற்கு கை கொடுக்கின்றான்.

   Delete
 11. கர்ணம் என்றால் காது! காதுகளில் குண்டலங்களுடன் பிறந்ததால் கர்ணன்! காதுகளால் கேட்க சகிக்காத வார்த்தை or சப்தம் 'கர்ணகொடூரம்'!

  ReplyDelete
  Replies
  1. ராஜேஷ் கண்ணா கலக்குறீங்க போங்க. பதிவை தாமதமாக படித்தாலும் பின்னுட்டம் இட்டு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி.

   Delete