Sunday, September 30, 2012

மரண நகரம் மிசெளரி - பல்கோண பார்வை


என் மன வானில் 

WWS இல் கேப்டன் டைகர் வரப் போகிறார் என்றதும் நிறைய பேருக்கு  மகிழ்ச்சி.
ஆனால் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. ஏனென்றால் என் நினைவடுக்குகளில்
அவருடைய கதையை படித்த நியாபகமே இல்லை. நான் Hibernation  -இல் இருந்த 
காலத்தில் (1990  - 2011)  வந்திருக்கலாம். ஆதலால் எந்த எதிர் பார்ப்பும் இல்லாமலே 
வாசிக்க தொடங்கினேன். பார்த்தவுடன் டெக்ஸ் அளவுக்கு பிடிக்கவில்லை. அந்த 
ஓவியத்தில் முகத்தில் முள் தாடியுடன் இருந்த டைகர் அசுவரஷ்யமாகதான் 
முதலில் இருந்தார். ஆனால் கடைசி வரை அப்படி இருந்தாரா ?

கதை


மிசெளரி மற்றும் கான்சாஸ் எல்லையில் இருக்கும் ஸ்காட் கோட்டைக்கு உதவிட
படைகளுன் வருகிறார் டைகர். வரும் வழியில்குவாண்ட்ரில் என்பவனது தலைமையில்
இயங்கும் எதிரி படை எதிர்பாராத தாக்குதல்நடத்துகிறது. உயிரிழப்பும் , சேதமும்
ஏற்படுகிறது. மிசெளரி கோட்டை தலைவர்  டாட்டன், குவான்றில்லை நீதான் பிடிக்க
வேண்டும் என்று டைகரிடம் சொல்லுகிறார். இதுவரை போட்ட திட்டங்கள் எல்லாம்
குவான்றிலால் முறியடிக்க பட்டிருப்பதால் தான் தனியே சென்று வேவு பார்த்து வருவதாக
சொல்லிவிட்டு கோட்டையை விட்டு இரவில் யாருக்கும் தெரியாமல் வெளியேறுகிறார்.
அதற்கு முன்பாக குவாண்ட்ரில் தாக்குதல் நடத்திய இடங்கள் வெளிப்பட்ட இடங்கள்
ஆகிய விவரங்களை ஆராய்ந்து அவன் அயன் சிடியில் இருக்கலாம் என்று முடிவுக்கு 
வருகிறார். அயன் சிட்டிக்கு முன்பாக உள்ள ஹோட்டலில் தங்குகிறார். 

அங்கு பென்னட்டன் என்ற முதியவரை சந்திக்கிறார். முதியவர் தன் தம்பி அயன் சிட்டிக்கு 
போனவன் திரும்பவே இல்லை, தன கூட வந்து அவனை கண்டுபிடிக்கும் பணியில் உதவ 
முடியுமா என்று கேட்டு,  டைகரை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார் பென்னட்டன். 
அடுத்த நாள் இரவு வேலையில் அயன் சிடியை யாரும் பார்க்காதவாறு நெருங்கும் அவர்கள் 
அயன் சிட்டியின் மதுபான கடையில் மட்டும் யாரோ இருப்பதை தொலை நோக்கியில்
பார்கின்றனர். இரவு செல்வது ஆபத்து, நாம் நாளை செல்வோம்என்று டைகர் சொல்கிறார்.  
ஆனால் பென்னட் இரவிலே சென்று அங்கு இருக்கும் எதிரிகளிடம் மாட்டிகொள்கிறார். காலையில் எழுந்து பார்க்கும் டைகர் பென்னட் தன் பேச்சை கேட்க்காமல் சென்று ஆபத்தில்
 மாட்டி கொண்டதை உணர்கிறார். டைகர் பென்னட்டை எப்படிகாப்பாற்றினார். 200 வீரர்களுடன்  வந்த  குவான்றில்லை எப்படி முறியடித்தார் என்பதை புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்க. இந்த புத்தகத்தின் தொடர்ச்சி முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷலில் "கான்சாஸ் கொடூரன்"  என்ற பெயரில் வெளி வருகிறது.
__________________________________________________________________________________
முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் ரூ 400 விலையில் 10 கதைகளுடன் ஜனவரி 2013 வர
 இருக்கிறது. ரிசெர்வ் பண்ணிவிட்டீர்களா?         

லயன் முத்து காமிக்ஸ் புத்தகங்களுக்கு சந்தா கட்டுவது எப்படி என்று  தெரிந்து கொள்ள இந்த லின்க்கை  பயன்படுத்தவும்.
 __________________________________________________________________________________

 டைகர் ஒரு MGR

டைகர் MGR ஸ்டைலை பின் பற்றுகிறார்

1 ) தாய் குலங்களை மதிக்கிறார். ஒரு பெண் அவரை எதிரியிடம் காட்டி கொடுத்திருந்தாலும் 
     அந்த  பெண்ணை தன் படைகள் சீரழிக்காத வண்ணம் காக்கிறார்.
    
2 ) முதியவர்களிடம்  மரியாதையாக நடந்து   அவர்களை காக்கிறார். 

3 ) எதிரிக்கும் அவன் போரிட ஒரு வாய்ப்பு கொடுக்க முயல்கிறார்.
__________________________________________________________________________________

புத்தகம் படித்து முடித்தவர்கள் ஒரு நிமிடம் டைகரும் பென்னேட்டும் எதனால் உயிர்  
பிழைத்தார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.

அவர் ஹீரோ என்பதலா? இல்லை முழுக்க முழுக்க டைகரின் எதிரிகளை திணற வைக்கும் கொரில்லா யுக்திகளால் தான்.

எனக்கு பிடித்த யுக்திகள்

1 ) கணவாயை   கடக்கும் யுக்தி

     எதிரிகள் மறைந்து இருந்து தாக்குவதற்கு கணவாய் ஏற்ற இடம் என்பதால்பென்னட்டையும் 
    கூட்டிக்கொண்டு கடக்காமல், தான் மட்டும் மெதுவாக போவது போல் போய் பாதி கணவாயை
    கடந்தவுடன் சிட்டாக பறந்து மறு முனைக்கு போவது. இருவரில்  ஒருவன்   மட்டும் வந்தவுடன்
   வந்தவன் ஆபத்தில்லை நீயும் வரலாம் என்று மற்றவனுக்கு சமிக்சை கொடுக்கும் வரை 
   டைகரை அவர்கள் சுட முடியாது. சுட்டால் பென்னெட் ஓடி விடுவான். அப்படி எதிரிகள் குழம்பிக்
   கொண்டு இருக்கும் போது சிட்டாக பறந்து மறுமுனையை அடைகிறார். எதிரிகள் சுதாரித்து 
   வெடிக்கும்  வெடியிலிருந்தும், விழும் பாறைகளிடம் இருந்தும் தப்பிக்கிறார்.

2) எதிரிகளை வெளியே கொண்டு வந்து பென்னேட்டை காப்பாற்றும் யுக்தி

     தனியாளாக ஒரு கும்பலுடன் மோத முடியாதென்பதை தெரிந்து கொண்ட டைகர், 
    அவர்களை  திசை திருப்பி பெரிய படை சுற்றி வளைத்து சுடுவது போன்ற பிரம்மையை
    உருவாக்குகிறார்.  அவர்கள் குழம்பி போய் வெளியே போய் தேடும்போது ஒற்றை 
    காவலாளியுடன் இருக்கும்   பென்னேட்டை எளிதாக காப்பாற்றி விடுகிறார்.

 3 ) எதிரியின் கோட்டையிலேயே மறைந்து இருக்கும் யுக்தி

       50 பேர் கொண்ட படை தேடினால் தாங்கள் வெகு சீக்கிரம் அகப் பட்டு கொள்வோம் 
      என்பதால், பென்னெட்டின் உடையை கிழித்து வாசலில் தொங்க விடுகிறார். பின்பு அதே 
      கட்டிடத்தில் மேல் அறையில் இருவரும் தங்குகிறார்கள். எதிரிகள் பென்னெட்டின் 
      உடையை பார்த்து அவன் வெளியே தப்பி சென்று விட்டான் என்று நினைத்து சுற்று புறம் 
     எங்கும் தேடி களைத்துப் போய், தப்பி விட்டதாக நினைத்து கொள்கின்றனர். எதிரிகள்
     இனி தேட மாட்டார்கள் என்று தெரிந்த பின்னர் இரவில் தப்பி செல்ல திட்டமிடுகிறார்.     

 4 ) எதிரியின் கவனத்தை வேறுபுறம் திருப்பி விட்டு தப்பி செல்வது

       இரவில் வெளியேறும் போது, இருந்த வீட்டிற்கு வெடி வைத்து விட்டு தப்பிக்கின்றார். 
       எதிரிகள் தீயை அணைப்பதிலும், அவர்கள் நண்பர்களை காப்பாற்றுவதிலும் இருக்கும்போது
       எதிரிகள் கண்ணில் படாமல் சுலபமாக தப்பி செல்கின்றனர்.    

5 ) யாரும்  யோசிக்காத வழியில் செல்வது    

     கணவாய் வழியாக தான் இவர்கள் தப்பி செல்ல முடியும் என்று எதிரி நினைத்து
     கொண்டிருக்க குத்து பாறையின் வழியாக இறங்கி கால் நடையாக தப்பி செல்லுவார்
     என்று எதிரி கனவிலும் எதிர் பார்த்திருக்க மாட்டான். இந்த வழியில் வராமல் வேறு வழியில்
     சென்றிருந்தால் பென்னெட் நிச்சயம் அகப்பட்டு கொண்டிருப்பார். குத்துப்பாறை பக்கம்      
     சென்று தப்ப முடியாது என்று எதிரி நினைத்தால் தான் அந்த பக்கம் தேடுவதற்கு
     ஆட்களை அனுப்பவில்லை. பென்னேட்டும் அகப்பட்டுக் கொள்ளவில்லை.

6 ) எதிர்பாராத விஷயத்தை செய்து எதிரியை குழப்புவது

      குதிரையை களவாட செல்லும் வேளையில், கதவு க்ரீச் என்று சத்தம் போடுவதால் 
      சுதாரித்துக் கொண்ட பெண்ணை சமாளிக்க, இருக்கும் ரெண்டு குதிரையில் முதல் 
     குதிரையில் வைக்கோல் அடைக்கப் பட்ட பொம்மையை வைத்து விரட்டி விடுகிறார்.
     அந்த இருளில் அது பொம்மை என்று தெரியாத அந்த பெண் தன் எல்லா 
     குண்டுகளையும் அந்த பொம்மை சுடுவதில் செலவழித்து விட்டவுடன்  ரெண்டாம் 
     குதிரையில் தப்பி செல்கிறார். 

இப்போது சொல்லுங்கள் டைகர் யுக்திகளின் மன்னனா இல்லையா ?
__________________________________________________________________________________

ஓவியப் பார்வை

"எமனின் திசை மேற்கு" கதை முழுக்க கடும் ப்ரௌனில் இருந்தது என்றால்
"மரண நகரம் மிசெளரி" முழுக்க முழுக்க நீல கலரில் இருக்கிறது. அதற்க்கு
அடுத்த இடத்தை பிடித்திருப்பது சிகப்பு.

1 ) கதாநாயகனின் மூல பெயர் ப்ளூ பெர்ரி என்பதாலோ என்னவோ கதை நெடுக
     நீலம் ஆதிக்கம் செலுத்துகிறது. பிரவுன் கலரை பயன் படுத்துவதற்கு நிறைய
     வாய்ப்பு இருந்தும் பயன் படுத்தாமல் ஓவியர் விட்டிருக்கிறார். முதல் பக்கத்திலேயே 
     மண், புல் மற்றும் புதர் கூட நீலமாக இருப்பதை கவனியுங்கள்.

      
2 ) இந்த கதையில் எனக்கு பிடித்த மாதிரி ஓவியங்கள் இடம் பெற்றிருப்பது இரவு
      நேரத்தில் தான். இந்த தாழ் கோண ஓவியத்தில்,  பெரிய சிம்னி விளக்கில் இருந்து
      வரும் ஒளி தங்க நிறத்தை முகத்தில் அடிக்கிறது. நிறைய திரைப்படங்களில் இதே 
      மாதிரி படமாக்க பட்டிருப்பதை பார்க்க முடியும்."ரிஸ்க் இல்லாம ரவுசு பண்ண முடியாது பாப்பா" - பென்னெட் ஒரு குசும்பு பிடித்த கிழவன் தான். :-D  

3 ) இந்த படத்தில் பென்னெட் எனக்கு ஒரு வால்ரஸ் மாதிரி தெரிகிறார். உங்களுக்கு?

  
4 ) பறவை  பார்வையில் அயன் சிட்டி.  :D

     
5 )  வெடித்து சிதறும் கட்டிடம் இரவில் கண் கொள்ள காட்சி. 

 
__________________________________________________________________________________
முரண் 

1 ) புத்தகத்தின் முன்னட்டையை இவர் பிடித்திருந்தாலும், ரெண்டாவது கதையில் தான்  வருகிறார். 

2 ) கேப்டன் டைகர் என்று சொல்லப் பட்டிருந்தாலும், கதை நெடுக லெப்டினென்ட் என்றே
    அழைக்கிறார்கள்.  ஆசிரியர் ஏதாவது ஒன்றை சரி செய்ய வேண்டும்.
  __________________________________________________________________________________

* என்னை பொறுத்த வரை இந்த டைகரின் சாகசம் டெக்ஸ்ன் சாகசத்துக்கு  துளியும் சளைத்தது இல்லை.       
__________________________________________________________________________________

முகநூலிலேயே கும்மி அடித்து விட்டு செல்லாமல், நிலைத்து இருக்க கூடிய பின்னூட்டம் இடுங்கள் நண்பர்களே.  

Post Comment

41 comments :

 1. வழக்கம் போல மாறுபட்ட கோணத்தில் நல்லதொரு விமர்சனம் :) ஒரு புத்தகத்திற்கு மூன்று விமர்சனங்களா?! இன்னொரு கதை வேறு பாக்கி இருக்கிறது! ;)

  //
  முகநூலிலேயே கும்மி அடித்து விட்டு செல்லாமல், நிலைத்து இருக்க கூடிய பின்னூட்டம் இடுங்கள். //
  :)

  ReplyDelete
  Replies
  1. மூணாவதுக்கு எழுத நான் ரெடி இல்லை. நீங்க வேணா ட்ரை பண்ணலாமே. கோர்த்து விடுவோம்ல. :D

   Delete
  2. // ஒரு புத்தகத்திற்கு மூன்று விமர்சனங்களா?!//

   பதிவிட ஆரம்பித்த புதிதில் இருக்கும் ஆர்வ கோளாறு நண்பா. போகப் போக ஒரு புத்தகத்துக்கு ஒரு பதிவுதான்னு ஆகிடும், அது "முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல்" ஆக இருந்தாலும் :D

   Delete
 2. Thanka kallarai padithu irukkireerkala?
  Tigar kathaikalil
  athu oru super hit...

  ReplyDelete
  Replies
  1. இல்லை இதுதான் நான் படித்த முதல் டைகர் புத்தகம். கூடிய சீக்கிரம் கிடைக்கப் போகிறதே :D

   Delete
 3. சூப்பர் விமர்சனம் தலை. அதிலும் ஓவிங்களை இத்தனை நீலமாக சீ சீ நீளமாக விமர்சித்து இருக்கின்றீர்களே ;)

  hollywood.mayuonline.com

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா உங்கள் பதிவையும் படித்து விட்டு வருகிறேன்.

   Delete
 4. மூன்றாவது பதிவிலேயே...பதிவை எப்படி நகர்த்த வேண்டும் அழகாக கற்றுக்கொண்டீர்கள் என்று கருதுகிறேன்! எத்தனையோ பேர் புத்தக விமர்சனங்கள் எழுதுகிறார்கள் அவற்றோடு ஒப்பிடுகையில்... இது தரமான விமர்சனம்!

  எனக்கு பொதுவாக காமிக்ஸ் வாசிக்கும் பழக்கம் அதிகம் இல்லை! எனது காமிக்ஸ் வாசிப்பு எல்லை 'ராணி'-யுடன் முடிந்துபோய்விட்டது என்றுதான் கூறவேண்டும்! ப்ளேட்பீடியாவை வாசிக்க துவங்கியதிலிருந்துதான் காமிக்ஸ் மீது மீண்டும் கொஞ்சம் ஆர்வம பிறந்திருக்கிறது! உங்களது மற்றும் இன்னும் சிலரது பதிவுகளை வாசிக்கும் போது ஆர்வம மேலும் அதிகரிப்பதை உணர்கிறேன்! தொடர்து எழுதுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா. லயன் காமிக்ஸ் வாங்கி ட்ரை பண்ணி பாருங்களேன். முக்கியமாக "லார்கோ".

   Bladepedia எனக்கும் மிகவும் பிடித்த தளம். என் தளம் துவங்குவதற்கு முக்கியமான காரணி.

   Delete
 5. நிஜமாகவே பல்கோணப் பார்வைதான்!
  கேப்டன் டைகர் கதைகளை ஆண்டாண்டு காலமாய் படித்துக் கொண்டிருப்பவர்கள்கூட இவ்வளவு கவனித்திருப்பார்களா தெரியவில்லை!
  'வித்தியாசமாய் பதிவிடுவது எப்படி' என்று ஒரு புத்தகம் போட நண்பர் ராஜ்குமாருக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. நன்றி விஜய். கொஞ்சம் வித்தியாசம் காட்டுனா தான கூட்டம் சேர்க்க முடியுது. :D

   Delete
 6. நான் பின்னூட்டமிட்ட நேரம் OCTOBER 1, 6 AM. ஆனால், SEPTEMBER 30, 6 PM என்று வருகிறதே!

  ReplyDelete
  Replies
  1. தெரியலையே நண்பா. உங்க கணினியில் நேரம் கரெக்டா இருக்கா ?

   Delete
  2. நான் என் மொபைலில் இருந்துதான் பின்னூட்டமிடுகிறேன். சரி, தொலையுது விடுங்க!

   Delete
  3. எந்த மொபைல், என் மொபைலில் தமிழ் எழுத்துக்கள் டப்பா டப்பாவாக வருகிறது. எப்படி தமிழில் டைப் பண்ண முடியும் என்று சொல்ல முடியுமா?

   Delete
  4. உங்களுடைய மொபைல் ஆன்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டதென்றால், Android marketல் 'தமிழ்விசை' applicationஐ தேடி, பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.மற்றவைகளைவிட சற்றே எளிமையானது இது, இலவசமும்கூட!
   கட்டம் கட்டமாக வராமலிருக்க தமிழ் fontகளை உங்கள் மொபைலில் install செய்திடுவது அவசியமாகலாம். tamil font களும் ஆன்ராய்டு மார்கெட்டிலேயே இலவசமாய் கிடைத்திடும்.

   Delete
 7. பதிவுலகில் ஒரு வித்தியாசமான விமர்சனம் வருகிறது என்றால் அது bladepedia வில் இருந்து தான் என்று இருந்தது.
  ஆனால் இப்பொழுது அவருக்கு போட்டியாக நீங்கள்.
  அட அட என்ன ஒரு விமர்சனம்.
  (ஏதோ நம்மனால முடிஞ்சது பத்தவசாச்சு புகையிதாணு பாப்போம் :P)

  ஜோக்ஸ் அபார்ட் உண்மையில் மிக அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்.
  அனைத்து அம்சங்களையும் அலசி உள்ளீர்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நாரதரே . சிண்டு முடியுற வேலைய நல்லாவே செய்யுறீங்களே. இந்த பதிவு உலகத்தில் எல்லோருக்கும் இடம் உண்டு. :D

   நன்றி நண்பரே. பவள சிலை மர்மத்தை சீக்கிரம் ஆரம்பியுங்கள். ஆவலாய் இருக்கிறோம்.


   Delete
 8. நண்பரே வழக்கம் போல் வித்தியாசமான (உங்கள்) பாணியில் விமர்சனம். நன்றாக இருக்கிறது.

  டைகரின் கதைகளில் உயிர்நாடியே யதார்த்தமும், உத்திகளும்தான். ஒவ்வொரு கதையிலும் மரணத்தின் விளிம்பை சந்தித்து திரும்பும் ஒரே ஹீரோ டைகர். புயல் தேடிய புதையலில் டைகரின் உடல் அளவை வெட்டியான் அளப்பது (சவப்பெட்டி செய்ய) வரை சென்று அந்த இக்கட்டிலிருந்து தப்பிப்பார். கிட்டத்தட்ட 15 வருட தீவிர டெக்ஸ் விசிறியாக இருந்த என்னை தங்கக் கல்லறை என்ற ஒரே கதையில் தன் பக்கம் ஈர்த்தவர் டைகர். மின்னும் மரணம் படித்த கணத்தில் இருந்து தன் உத்திகளின் மூலம் டெக்சை பின் தள்ளி விட்டார் டைகர். அந்த விதத்தில் டைகரின் உத்திகளின் மீது நீங்கள் கவனம் செலுத்தியிருப்பது பதிவின் தனி சிறப்பு.

  //என் நினைவடுக்குகளில்
  அவருடைய கதையை படித்த நியாபகமே இல்லை. நான் Hibernation -இல் இருந்த
  காலத்தில் (1990 - 2011) வந்திருக்கலாம்// மின்னும் மரணம் (இதில் காற்றில் கரைந்த கூட்டம் ஒன்று போதும்), இரத்தக் கோட்டை, தங்கக் கல்லறை மற்றும் இரும்புக்கை எத்தன் இந்த தொடர்களில் எதை நீங்கள் முழுமையாக படித்தாலும் டைகரின் பக்தராக மாறிவிடுவீர்கள்.

  என்னைப் பொறுத்தவரை "மரண நகரம் மிஸ்ஸெளரி" டைகரின் கதைகளில் ஒரு "சுமார் ரக" கதை (மேலே குறிப்பிட்ட மற்ற தொடர்களுடன் ஒப்பிடுகையில்) . டைகரின் சுமார் ரக கதையே மற்ற கதைகளுக்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை என்றால் அவரின் சிறந்த கதைகளைப் பற்றி சொல்ல வேண்டுமென்பதில்லை நண்பரே... டைகரைப் பற்றிப் பேசினால் போய்கொண்டேயிருக்கும்.

  வழமை போல் உங்களின் ஓவியங்கள் மீதான பார்வை மற்றவர்களிடமிருந்து உங்களை தனித்துக் காட்டுவதாக நான் நினைக்கிறேன்.

  வாழ்த்துக்கள். தொடருங்கள் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. டைகரின் "இளைய தளபதி" சௌந்தரின் கருத்துக்காக வெயிட் பண்ணி கிட்டு இருந்தேன். நீளமான பின்னுட்டம் இட்டு கருத்து சொல்லி விட்டார். டைகரின் டை ஹர்ட் fan இன் கருத்து எனக்கு தேவை பட்டது. வந்து விட்டது. யுக்திகளை பற்றி நான் எழுதியது எவ்வளவு தூரம் சென்றடைந்தது என்று தெரிய வில்லை. ஓரளவுக்கு சென்றடைந்தது என்பது புரிந்து விட்டது. நன்றி நண்பா.

   Delete
 9. நல்லதொரு பதிவு நன்றிகள் பல நண்பா!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பா!

   Delete
 10. ஒரு PhD செய்யும் அளவுக்கு படித்து எழுதியிருக்கிறீர்கள் (சுவாரசியமாகவும்). எனக்கும் டைகர் கதைகளில் பிடிப்பது யுக்திகளே.. எல்லா கதைகளிலும் புதுவிதமான ஆனால் எளிய யுக்திகள், போர்த்தந்திரங்கள் நிறைந்திருக்கும். இவரைப் படித்த உடன் டெக்ஸ் கதையைப் படித்தால் வித்தியாசத்தை அறிந்து கொள்ளலாம்.

  டைகர் ROCKS !!!!!

  ஆவலுடன் தங்கக்கல்லறைக்கு வெயிட்டிங்.

  ReplyDelete
  Replies
  1. யுக்திகளைப் பற்றி எழுதியதற்கு அவ்வளவு ரெஸ்பான்ஸ் இல்லை என்று நினைத்து கொண்டிருந்தேன். கடைசி ரெண்டு மூணு பின்னூட்டங்களில் அவற்றை குறிப்பிட்டு எழுதும் போது நாம கரெக்ட்டான ரூட்டுல தான் போறோம்ன்னு நினச்சு கிட்டேன். நானும் தனக கல்லறைக்கு வெயிட்டிங்

   வருகைக்கு நன்றி நண்பா

   Delete
 11. டைகர் ஒரு MGR
  டைகர் MGR ஸ்டைலை பின் பற்றுகிறார்.
  எனக்கு பிடித்த வரிகள் இவை. உங்கள் பாணி நிறைவாக உள்ளது.
  டெக்ஸ்வில்லர். = ரஜினி படங்களை போன்று ஹீரோயிசம் தூக்கலாக இருக்கும்.
  டைகர் கதைகள் கமல் படங்களை போல தந்திரங்கள், யுக்திகள் நிறைந்து இருக்கும்.
  இரும்புக்கை எத்தன் படித்துள்ளீர்களா? அடுத்த விமர்சனம் ?

  ReplyDelete
  Replies

  1. MGR always Rocks :D

   //டைகர் கதைகள் கமல் படங்களை போல தந்திரங்கள், யுக்திகள் நிறைந்து இருக்கும்.//
   :D

   //இரும்புக்கை எத்தன் படித்துள்ளீர்களா? அடுத்த விமர்சனம் ? //
   இல்லை படிக்கவில்லை. அடுத்த விமர்சனம். சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் எழுத முயற்சிக்கிறேன்.

   Delete
 12. வித்தியாச விமர்சன வித்தகர் ராஜ்முத்து குமார். ( சுருக்கமாக வி.வி.வி. குமார்) (ஹிஹிஹி.)அவர்களுக்கு ஒரு செட் இரும்புக்கை எத்தன் மற்றும் பரலோகப்பாதை (பார்ட் 2) பார்சல்.!!!!!

  பார்ட் 3 மற்றும் 4 எனக்கு.!!!!!
  சில வருடங்களாக காத்துக்கொண்டிருக்கிறேன்.
  (தம்பி டீ இன்னும் வரல?!!)
  திரு விஜயன் சாரின் கடைக்கண் பார்வைக்காக!!

  ReplyDelete
 13. @COMICSPRIYAN

  //வித்தியாச விமர்சன வித்தகர் ராஜ்முத்து குமார். ( சுருக்கமாக வி.வி.வி. குமார்) (ஹிஹிஹி.)//
  வி வி டி தேங்காய் எண்ணை ன்னு சொல்லாம இருந்தா சரிதான்.

  //ஒரு செட் இரும்புக்கை எத்தன் மற்றும் பரலோகப்பாதை (பார்ட் 2) பார்சல்.!!!!!//

  எப்போ வரும், நீங்க அனுப்பனும். பிரகாஷ் புப்ளிஷேரிடம் இருந்து வரும்னு டபாய்க்க கூடாது.
  பரலோக பத்தையும் கேப்டன் டைகருடயது தானா ?

  //பார்ட் 3 மற்றும் 4 எனக்கு.!!!!!
  சில வருடங்களாக காத்துக்கொண்டிருக்கிறேன்.
  (தம்பி டீ இன்னும் வரல?!!)
  திரு விஜயன் சாரின் கடைக்கண் பார்வைக்காக!!
  //
  அண்ணா டீ இன்னும் வரலேன்னு சொல்லுங்க. சீக்கிரம் வந்துரும்.

  ReplyDelete
 14. இரும்புக்கை எத்தன்(பார்ட்1) மற்றும் பரலோகப்பாதை (பார்ட் 2)
  வந்து விட்டது. சுமார் 10 ஆண்டுகள் முன்பு. இருக்கலாம்.
  //பார்ட் 3 மற்றும் 4 விரைவில் என்று விஜயன் சார் சொல்லியுள்ளார். வந்தவுடன் ஒட்டு மொத்த பாகங்களையும் அனுப்பி வைக்கிறேன். முழு கதையாக படித்தால் தானே சுவாரஸ்யமாக இருக்கும். ???!!! :-)

  ReplyDelete
 15. @COMICSPRIYAN : கடைசி ரெண்டு பாகங்களுக்கு 10 ௦ வருடமா ? முடியல சாமி. இனிமே சீக்கிரம் வரும் என்று நம்புவோம்

  ReplyDelete
 16. முரண்
  2 ) கேப்டன் டைகர் என்று சொல்லப் பட்டிருந்தாலும், கதை நெடுக லெப்டினென்ட் என்றே
  அழைக்கிறார்கள். ஆசிரியர் ஏதாவது ஒன்றை சரி செய்ய வேண்டும்.

  விடுங்க பாஸ்.
  மைக்,டோனவன்(இயற்பெயர்)
  ப்ளூபெர்ரி( புனைபெயர்) தனக்குத்தானே சூட்டிக்கொண்டது.
  பில்லி( சிறு வயது செல்லப் பெயர்)
  என பல பெயர்களை கொண்டவர்தானே நம் கேப்டன் டைகர்?!!!
  ஆரம்பத்திலிருந்தே வரும் குழப்பம் தான் சாமி புதிதாக ஒற்றும் இல்லை.. ஹிஹி.
  கொஞ்ச நாளில் உங்களுக்கும் பழகி விடும்.!!!!!!!!!!

  ReplyDelete
 17. //விடுங்க பாஸ்.
  மைக்,டோனவன்(இயற்பெயர்)
  ப்ளூபெர்ரி( புனைபெயர்) தனக்குத்தானே சூட்டிக்கொண்டது.
  பில்லி( சிறு வயது செல்லப் பெயர்)
  என பல பெயர்களை கொண்டவர்தானே நம் கேப்டன் டைகர்?!!!
  ஆரம்பத்திலிருந்தே வரும் குழப்பம் தான் சாமி புதிதாக ஒற்றும் இல்லை.. //

  இது எனக்கு தெரியாது நண்பா . இயற்பெயரே ப்ளுபெர்ரி என்று நினைத்தேன். இந்த பெயருக்கு காரணம் உண்டா?

  ReplyDelete
 18. லயன் காமிக்ஸ் 200 வது இதழாக வந்த கௌபாய் ஸ்பெஷலில்(2007) வந்த கதை கேப்டன் டைகரின் இளமையில் கொல்!
  இது கேப்டன் டைகரின் சிறு வயது சாகஸம்.
  தெற்குக்கும் வடக்குக்கும் உள்நாட்டுப்போர் முடிவே இல்லாமல் நடந்து கொண்டிருந்தது.
  கேப்டன் டைகரின் தலைக்கு 5000 டாலர்கள் வெகுமதி யாக அறிவிக்கப்பட்டிருந்தது.
  எனவே கேப்டன் டைகருக்கு புது பெயர் தேவைபபட்டது.
  அங்கிருந்த புதரில் தென்பட்ட நீலநிறப்புள்ளிகள் கேப்டன் டைகரின் கவனத்தை ஈர்த்தன. அதையே தனது பெயராக சூட்டிக்கொண்டார். இதுதான் ப்ளூபெர்ரி காரணப்பெயர்.
  கான்பெடரேஷன் பிரிவில் குழலூதும் வேலைகுக்கு சேர்ந்தார் நம் கேப்டன் டைகர். பிறகு கடுமையான போராட்டங்களுக்கு பிறகு அவர் வகித்த பதவி தான் லெப்டினெண்ட்.
  அதிலும் கேப்டன் டைகர் பெண் வேடமிட்டு செய்யும் சாகஸங்கள் டாப்பாக இருக்கும்

  ReplyDelete
 19. எந்த விதமான முந்தைய கதைத்தொடர்பும் இல்லாத சாகஸம் தான் கேப்டன் டைகரின் தங்க கல்லறை! இதுதான் நமது முத்து காமிக்ஸில் வெளியான கேப்டன் டைகரின் முதல் சாகஸம்!!
  எனவே எந்த விதமான குழப்பங்களும் இல்லாமல் கதையை ரசிக்கலாம்.;-)
  லக்னர் என்ற பெயருடன் திரியும் வில்லனுடன் நம் ஹூரோ மோதுவது அட்டகாசமாக இருக்கும். வண்ணத்தில் எப்போது ரசிக்கலாம் என ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 20. @COMICSPRIYAN: வாவ் மற்றுமொரு டை ஹார்டு டைகர் பேன். என்னுடைய ஆவலை தூண்டி விட்டு விட்டீர்கள்

  ReplyDelete
 21. @COMICSPRIYAN
  // புதரில் தென்பட்ட நீலநிறப்புள்ளிகள் //

  நீங்கள் ப்ளுபெர்ரி பழங்களை சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 22. புதரில் தென்பட்ட நீலநிறப்புள்ளிகள் //

  நீங்கள் ப்ளுபெர்ரி பழங்களை சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
  YES.YES.

  ReplyDelete
 23. என்னுடைய புதிய பதிவில் உங்களின் இந்த விமர்சனத்திற்கு லிங்க் தந்திருக்கிறேன். ஆட்சேபனை இருக்காது என்ற நம்பிக்கையில்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பின்னோக்கி அவர்களே . ஒரு ஆட்சேபணையும் இல்லை. :D

   Delete