Saturday, September 22, 2012

எமனின் திசை மேற்கு – மனதை உலுக்கிய ஒற்றைக்கை வீரன் - ஓவிய பதிவு

எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் சில புத்தகங்களை படிப்போம். படித்து முடித்து விட்டு நிமிர்ந்தால் அது நம் மனதை உலுக்கி இருக்கும். ச்சே இவ்வளவு நாள் இதை படிக்காமல் விட்டு விட்டோமே என்று தோணும். அப்படி தோண வைத்த  புத்தகம் தான் “எமனின் திசை மேற்கு”.

முதல் தடவை படிக்கும்போது கௌ பாய் என்றாலே “டெக்ஸ் வில்லர்” மாதிரி தான் என்று நினைத்து படித்தேன். நான் வேகமாக படிக்கும் இயல்புடையவன். முதல் தடவை படித்து முடிந்ததும் எனக்கு ஏமாற்றம் தான். என்னடா இந்த ஹீரோ என்றே தோன்றியது. ஒரு கௌ பாய் ஹீரோ கடைசியில் தோற்றுபோவதா என்று டெக்ஸ் , கேப்டன் டைகர் , சிஸ்கோ கிட் எல்லாம் என் மனதில் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். எத்தனை தடை வந்தாலும் தன் மதி யூகத்தினால் முறியடிக்கும் டெக்ஸ் உடன் ஒப்பிட்டு பார்த்ததனால் வந்த பிரச்னை அது.

ரெண்டாவது தடவை படிக்கும் பொது மிக கவனமாக எல்லா கௌ பாய் வீரர்களையும் மறந்து விட்டு படிக்க ஆரம்பித்தேன். ஆசிரியரின்  காட்டு கத்தலிலும், டியூஷன் மாஸ்டரின் தவளை கத்தலிலும் புரியாத பாடம், செமஸ்டர் லீவில் இன்னும் ரெண்டு நாள்ல எக்ஸாம் இருக்கும் போது டக் என்று புரிய ஆரம்பிப்பது மாதிரி புரிய ஆரம்பித்தது.

நம்மை மாதிரி சாதாரண மனிதனின் கதை.கதை நமக்கு ஏற்கனவே தெரிந்த கதை தான். கதை ரஜினியின் “அடுத்த வாரிசு“ கதை தான் (விரிவான கதைக்கு நண்பர்கள் BladePedia வுக்கு செல்லலாம்), சில நகாசுகள் மற்றும் திருப்பங்களுடன் வந்திருக்கிறது. ஆனால் சொன்ன விதம் மற்றும் ஓவியங்கள் நம்மை கொள்ளை கொள்கின்றன.

அதிலும் ஓவியங்கள் வாவ். ஓவியங்களுக்காகவே இரண்டு தடவை வெறும் ஓவியங்களை மட்டுமே பார்த்தேன். பழைய காலத்தில் நடந்த கதை என்பதை குறிக்க ஓவியர் கடும் ப்ரௌன் கலரை உபயோக கதை நெடுக உபயோக படுத்தி இருப்பார். கௌ பாய்களின் வாழ்க்கையில் ஒன்றான மண் புழுதியின் நிறத்திலேயே இந்த கதையை சொல்லியிருப்பது அழகு. ஆங்காங்கே இந்த நிறத்தில் இருந்து வேறு நிறம் மாறியிருந்தாலும் உடனே ப்ரௌன் நிறத்துக்கே திரும்பி விடுகிறார். இதை எத்தனை பேர் கவனித்து இருப்பீர்கள் என்று எனக்கு தெரிய வில்லை. அதனால்  ஓவியங்களுக்காகவே  இந்த பதிவு.

1) முதல் பக்கத்தின் முதல் படமே சூப்பர். ஒரு பாலைவன ரயில் நிலையத்தையும் பின்புறமுள்ள மலை தொடர்களையும் கண் முன்னால் கொண்டு வருகிறது.


2) பகல் நேரத்து மழை வெள்ளியாக (வெள்ளையாக) இறங்கினால் (பக்கம்  22 படம்  மற்றும்  3),


இரவு நேரத்து மழை கருந்துளிகளாக இறங்குகிறது (பக்கம்  23 படம் 4). இரவு நேரத்தில் மழையை கருந்துளிகளாக எப்படி காட்ட ஒரு மனிதனால் யோசிக்க முடியும்


3) வசந்த காலம் என்னும் போது ஆரஞ்சு கலரையும் மஞ்சள் கலரையும் (பக்கம்  23 படம்  3)  குழைத்திருக்கிறார் பாருங்கள்.

4) தன் அப்பா இறந்தவுடன் தானும் கொல்ல பட்டு விடுவோமோ என்ற உயிர் பயத்தில்  அந்த சிறுமியின் முகம் சாம்பல் கலராக மாறியிருப்பதை பாருங்கள்  (பக்கம்  37 படம் முதல் வரிசையில்  3வது). ஆனால் பக்கம்  19 தில் சாம்பல் கலரை உபயோகிக்க வில்லை.ஒரு  வேளை ஒப்பீட்டுக்காக இரு படங்களையும்   அருகருகில் வரையும் போது அவருக்கு இந்த ஐடியா தோன்றி இருக்கலாம் 


5) சுடுகாடு என்பதால்  (39 பக்கம் கடைசி படம், 40 பக்கம் முழுவதும்சாம்பல் நிறமாக இருக்கும்.
6) 46 பக்க முதல் வரிசை முதல் படத்தின் லைட்டிங்கை பாருங்கள். தூரத்தில் வெயிலும் அருகில் நிழலும் தெரிகிறதா?அதே பக்கத்தில், இரண்டாவது வரிசை இரண்டாவது படமும் பாருங்கள் இளம் பச்சை புல்லும் இளவெயில் மழை வானமும் தெரிகிறதா?7) பறவை பார்வையும்  இரவு நிலவும்  (பக்கம்  63 கடைசி படம்இல்லாத கவ்பாய் புத்தகமா? (அதே பக்கம் கடைசி படத்துக்கு முந்திய படம்). பறவை பார்வை ஓவியத்தை ரசிக்க விடாமல் அது ஹீரோ வின் கடைசி நேரம் என்பது மனதை பிசைகிறது.


8) இதில் மிகவும் கடினமானதும் மிகவும் நன்றாக வந்திருப்பது  (64 பக்கம் கடைசி வரிசையில்  2வது படம்). முழுவதும் கருப்பு பின்னணியில் கொஞ்சூண்டு வெள்ளை மட்டும் எடுத்து இந்த படத்தை வரைந்துள்ளார். தான் காதலித்தவன் தன் அண்ணன் அல்ல என்று  தெரிந்தும்  காப்பாற்ற முடியாமல் போன கொடுமையை எண்ணி அழும் அந்த பெண்ணின்  கண்ணில் கண்ணீர் தளும்பி இருப்பது உங்களுக்கு தெரியுதா? வழியும் கண்ணீர் வெண் முத்துக்களாக வழிவது அருமை.அந்த பெண்ணின் பின்னால் தெரியும் நட்சத்திரங்களை பார்த்தீர்களா?

தாழ் கோணத்தில் இருந்து காட்டப்படும் ஓவியம் என்பதால் கதா நாயகனின் நிலையில் இருந்து நாம் பார்ப்பது போல் உள்ளது. உயிர் பிரியும் நிலையில் தான் விரும்பிய அன்பு கேத்தியிடம் இருந்து கிடைத்தது கண்டு அவன் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும். 

இந்த பெண் அழுது கொண்டிருக்கும் போது இவனால் எப்படி இப்படி இந்த ஓவியத்தை வர்ணித்துக் கொண்டிருக்க முடிகிறது என்று உங்களுக்கு ஒரு நிமிடம் தோன்றினால்  அதுதான் ஓவியர்  ரோசின்ஸ்கியின்   வெற்றி. (நன்றி கார்த்திக், ஓவியர் வான் ஹாம் என்று எழுதி இருந்தேன், உங்கள் போஸ்டை பார்த்து விட்டு மாற்றினேன்)


இது என் அனுபவம் உங்கள் அனுபவம் எப்படி.?

____________________________________________________________________________________________________
நண்பர்களே ! காமிக்ஸ் பொறுத்தவரை  இது என் கன்னி முயற்சி. இந்த முயற்சியை என் நண்பன் P.Z ஷாகுல் ஹமீதுக்கு காணிக்கை ஆக்குகிறேன். ராணி காமிக்ஸும், அம்புலிமாமாவும் தான் என் வீட்டில் வாங்குவார்கள். அப்போது லயன் காமிக்ஸை எனக்கு அறிமுக படுத்தியவன். லயனில் நான் படித்த முக்கால் வாசி புத்தகங்கள் இவனிடம் இருந்து இரவல் வாங்கியதுதான். பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் எங்கோ ஓடிப்போய் பின்பு எங்கள் ஊருக்கு திரும்பி  வந்து வாழ வேண்டும் என்று நினைக்கும் போது பஸ் ஆக்சிடெண்டில் இறந்து விட்டான். இந்த ஒற்றை கை வீரனுடைய கதையும் அவன் கதையும் ஏறத்தாழ ஒன்றுதான். அவன் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
____________________________________________________________________________________________________
வழக்கம் போல ஏதாவது எனது  எழுத்தில் சொற்  குற்றம்  , பொருள் குற்றம் இருந்தால் நக்கீரர்கள் கீர் கீர் என்று கீறலாம்.


இந்த முயற்சிக்கு தங்கள் தளத்தை ஒரு உதாரணமாக கொடுத்து உத்வேகத்தை அதிகப் படுத்திய நண்பர்கள்  ரபிக்கார்த்திக் மற்றும் சௌந்தர் அவர்களுக்கு நன்றிகள் பல.

தொழில் நுட்ப ரீதியாக உதவிய  கார்த்திக், சௌந்தர் மற்றும் "ப்ளொக்கர் நண்பன்"அப்துல் பாசித் அவர்களுக்கும் என் நன்றிகள் பல.

வாழ்க வளமுடன் .


Post Comment

36 comments :

 1. சிறப்பான ஓவிய அலசல் - வாழ்த்துக்கள் ராஜ்குமார்! முதல் பதிவே அசத்தலாக இருக்கிறது - தொடருங்கள்! :) ஆனாலும், அடுத்த வாரிசு படத்தின் கதையோடு ஒப்பிட்டதுதான் கொஞ்சம் ஓவர்! ;) டைகரின் கதையையும் விமர்சிக்கலாமே?!

  ReplyDelete
  Replies
  1. இன்று ஒரே நாளில் இரண்டு பேர் காமிக்ஸ் ப்ளாக் துவக்கியுள்ளீர்கள் - அற்புதம்! :)

   Word Verification-ஐ நீக்கி விடலாமே! :)

   Delete
  2. நன்றி கார்த்திக். நிஜமாகவே அடுத்த வாரிசு கதைக்கும் இதுக்கும் நெருங்கிய தொர்பு இருக்கு. டைகரை பதிவிட முயற்சிக்கிறேன்.

   இன்னொரு நண்பர் பரணி என்று நினைக்கிறன். பெங்களூரில் பரணி என்று ஒரு நண்பர் உண்டு.. அவர் தானா இவர் என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் இன்று நண்பர்கள் நாளாக இருக்கும்.

   இன்னமும் ப்ளாக் செட்டிங்கில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. தட்டு தடுமாறி செய்து கொண்டிருக்கிறேன். வெகு சீக்கிரம் நீக்கி விடுகிறேன்.

   Delete
  3. நண்பர் ராஜ்குமார், ஓவியங்களுகக்க காக ஒரு அழகான பதிவு. அழகான எழுத்து நடைகள்.உண்மை .உங்கள் அனுபவமே எனது அனுபவமும் .முதல் தடவை எனக்கு கதை பிடிக்கவில்லை.மீண்டும் படிக்க வண்டும்.

   Delete
 2. முதல் பதிவிலேயே முழுமதிப்பெண்களைப் பெற்றுள்ள நண்பர் ராஜ்குமாருக்கு வாழ்த்துக்கள்!

  மனதை கனமாக்கிவிடும் இக்கதைக்கு இதன் சித்திரத் தரம் உயிரோட்டமாய் அமைந்து நம் அனைவரின் நெஞ்சிலும் நீங்காத இடத்தைப் பெற்றுதந்துவிட்டது.

  சித்திரங்களை நீங்கள் ரசித்து விளக்கியிருக்கும் விதம் எனக்குள் கொஞ்சம் பொறாமையை எட்டிப்பார்க்க வைக்கிறது.

  கதையின் சித்திரங்களை சுகமாக விளக்கிவிட்டு, கூடவே கொஞ்சம் சொந்த வாழ்வின் சோகத்தையும் இணைத்திருப்பது உங்களின் இப்பதிவிற்கு ஒரு special touch கொடுக்கிறது.

  தொடரட்டும் உங்கள் ரசணை!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே. நோ பொறாமை. கொஞ்சம் நிதானமாக படித்தால் நிறய விஷயங்கள் புரியும். ரெண்டு மூணு ரிவிசன் விடுங்க. கண்டு பிடிக்கலாம். :D

   ஒவ்வொரு லயன் இதழ் படிக்கும் போதும் ஷாகுல் ஹமீது நினைவில் வருவதை மறக்க முடியவில்லை.:-(

   Delete
 3. வாழ்த்துக்கள்

  வித்தியாசமான பார்வையில் உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது. தொடர்ந்து கலக்குங்கள் ராஜ்குமார்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே.

   Delete
 4. நண்பா உங்கள் முதல் பதிவிற்கு வாழ்த்துக்கள். உங்கள் "ஸ்டைல்" நன்றாக உள்ளது.

  கதையை மிகவும் ரசித்து படித்து ஆழ்மனதில் தோன்றிய எண்ணங்களை அப்படியே கொட்டியுள்ளீர்கள். அருமை.

  தொடருங்கள் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் எனக்கு படிக்கும் நேரத்தில் என்ன தோன்றியது என்பதைத்தான் எழுதி இருக்கிறேன்.

   வாழ்த்துக்கு நன்றி நண்பரே.தொடருவோம்.

   Delete
 5. Replies
  1. நன்றி நண்பரே.தொடருவோம்

   Delete
 6. முதல் பதிவிற்கு வாழ்த்துக்கள்!!!

  உங்கள் பார்வையில் காமிக்ஸ் பற்றிய மேலுமொரு பரிணாமம் கூடட்டும். உற்சாகத்துடன் தொடருங்கள்!!!

  ReplyDelete
 7. சித்திரங்களின் மிக நுண்ணிய பார்வையுடன் அழகாக எழுதியிருக்கிறீர்கள்..WWS அனைவருக்கும் பிடித்த புத்தகமாக இருப்பது நன்று.

  ReplyDelete
 8. @Muthu Fan : நன்றி நண்பரே உங்கள் பாராட்டுகளே என் உற்சாகம்

  @Arun Proasad : நன்றி நண்பரே

  @pinnoki : நன்றி நண்பரே. WWS நிச்சயமாக எல்லோருக்கும் பிடித்த புத்தகம்

  ReplyDelete
 9. அழகான பதிவு. சித்திரத்தை மையபடுத்தி உங்களுடைய பதிவு arumai. முதல் பதிவிலே உங்கள் திறமை வெளிப்பட்டுவிட்டது. நன்றி..

  ReplyDelete
 10. @Ramesh : நன்றி ரமேஷ்

  ReplyDelete
 11. யப்பா ................ராஜ் குமார் ,கலக்கீட்டீங்க போங்க...................உங்கள் பார்வையில் மழைத்துளி எப்படி கருப்பாக இரவில்,சுடு காட்டு சாம்பல் நிறம் அற்புதமான ரசிகரின் பார்வையில் இன்று மீண்டும் ஒரு முறை படிக்கவிருக்கிறேன்.....................தொடர்ந்து கலக்க எனது வாழ்த்துக்களும்..................நன்றி மீண்டும் விரைந்து வருக ......

  ReplyDelete
 12. கன்னி பதிவிற்கு எனது வாழ்த்துக்கள் நண்பரே.
  காமிக்ஸ் பற்றிய உங்களது பார்வையும் வித்தியாசமாக உள்ளது.
  தொடருங்கள் உங்கள் பதிவுகளை.

  ReplyDelete
 13. @ கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா:
  @ கிருஷ்ணா வ வெ:

  என்னடா இரும்புக்கையாரையும் , இரவுக் கழுகாரையும் காணோம் என்று நினைத்தேன். வந்து விட்டீர்கள். நன்றி நண்பர்களே உங்கள் வாழ்த்துக்களுக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஒரு சிறு அவசர பயணம் அதனால் இந்த தாமதம் நண்பரே.

   Delete
  2. எவ்வளவு தாமதமாக வந்தாலும் உங்கள் கருத்து முக்கியம். :-D

   Delete
 14. நண்பா ராஜி!! நிறைய கதைகளை போட்டு பிரிச்சி மேயுங்க! நல்வரவு! வாழ்க தமிழ் காமிக்ஸ் உலகம்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜானி ! நிறைய தளங்களை வாசித்த காரணமாக இருக்கலாம்.

   Delete
 15. நண்பரே...இது தங்களின் முதல் பதிவா.. நபம்பவே முடியவில்லை! செமையாய் எழுதுகிறீர்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. நண்பர் ராஜ்குமார், உங்கள் ப்ளாக் இரண்டு நாள்களாக ஓபன் ஆகவில்லை.இன்று www என்பதை நீக்கிவிட்டு உங்கள் முகவரி கொடுத்த வுடன் தான் பார்க்க முடிந்துது.தாமத திற்கு மன்னிக்கவும் .

  ReplyDelete
 17. @Parnitharan K
  நன்றி பரணி ! எனக்கும் WWW கொடுத்தால் ஏன் வரவில்லை என்பது தெரியவில்லை.

  ReplyDelete
 18. அருமையான பதிவு. மேலும் பல காமிக்ஸ்களை இதே போன்று அலசி பதிவிட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. ஒரு படைப்பாளிக்கு கிடைக்கக்கூடிய மிக பெரிய விருது அங்கீகாரம் இது போன்ற விமர்சனங்களே. நம்மால் இவை போன்ற காவியங்களை படைக்கமுடியாவிட்டாலும் இதை போன்ற சிறு விமர்சனம் செய்து அவர்களை பாராட்டுவதே அவர்களின் படைப்புக்களால் நாம் பெற்ற இன்பத்துக்கு நாம் அளிக்கும் ஒரு சிறு நன்றிக்கடன்!! KEEP IT UP RAJKUMAR!

  ReplyDelete
 20. @Srini : நன்றி நண்பரே. மரண நகரம் மிசெளரி விமர்சனம் விரைவில் எதிர்பாருங்கள்.

  @விஸ்கி - சுஸ்கி :அவர்களை பாராட்டுவதே அவர்களின் படைப்புக்களால் நாம் பெற்ற இன்பத்துக்கு நாம் அளிக்கும் ஒரு சிறு நன்றிக்கடன்!! ரொம்ப சரியாக சொல்லி விட்டீர்கள். bladepedia -வில் நீங்கள் கொடுத்த லிங்க் பார்த்தேன். சூப்பர். காமிக்ஸ் காதலன் என்பது யார்? நீங்கள் தானா ? அந்த தளம் யாருடையது. மிக அரிய தகவல்கள் இருக்கிறது.

  ReplyDelete
 21. Hello Muthu, (Rajmuthukumar)

  Good to see your blog! Keep up the good work.

  தன் அப்பா இறந்தவுடன் தானும் கொல்ல பட்டு விடுவோமோ என்ற உயிர் பயத்தில் அந்த சிறுமியின் முகம் சாம்பல் கலராக மாறியிருப்பதை பாருங்கள் (பக்கம் 37 படம் முதல் வரிசையில் 3வது).

  The reason for the picture is same fear when appears when her father was killed in front of her. The expression and everything remains same when she was young.

  All the very best and keep writing.

  I have not started any Blog :-)

  -Bala/Parani Bangalore

  ReplyDelete
 22. மிக மிக அருமையான பதிவு.
  ஒரு விமர்சனம் என்பது மற்றவர்களையும் காமிக்ஸ் வாங்கி படிக்க தூண்டுவதாக மட்டுமே இருக்க வேண்டும். கதை என்ன
  கதையின் முடிவு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாக இருக்க வேண்டும். காமிக்ஸ் என்றால் என்ன தெரியாதவர்களும்
  காமிக்ஸ் வாங்க வைப்பதாக இருக்க வேண்டும்.
  ஒரே வார்தையில் சொல்வதானால் விமர்சனம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும்.
  கதையை தொடாத இதே பாணியில் தொடருங்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. @Parani :
  //The reason for the picture is same fear when appears when her father was killed in front of her. The expression and everything remains same when she was young. //

  உண்மைதான்.

  அந்த ப்ளாக் உன்னுடையது தானோ என்று நினைத்தேன். அப்புறம் உன்னுடையது இல்லைன்னு கண்டு பிடித்து விட்டேன்.

  தேங்க்ஸ் டா.

  ReplyDelete
 24. @COMICSPRIYAN :
  நன்றி நண்பா. எல்லா கதைக்கும் இப்படி கதையை தொடாமல் எழுத முடியுமா என்று தெரிய வில்லை. உதாரணத்துக்கு WWS இலேயே கருப்பு வெள்ளையில் இருக்கும் கவ்பாய் கதைக்கு என்ன எழுதுவது?. முடித்த வரை நுணுக்கமான விஷயங்களை
  என் பார்வையில் பட்ட விஷயங்களை கொடுக்க முயல்கிறேன். நன்றி

  ReplyDelete