Thursday, September 27, 2012

"எமனின் திசை மேற்கு" கதை டிஸ்கசன் | ஜாலி பதிவு

*வொல்வேரின் அண்ணா போட்டோ உதவி "மின்னல் வீரன்" சௌந்தர் அவர்கள் மற்றும் திரு. சபரி (என்ற) முத்துகுமார் .    

____________________________________________________________________________________________________

இந்த பதிவு ஒரு ஜாலிக்காக எழுதப் பட்டது. யாருடைய மனதையும்  புண்படுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல. சீரியசான விவாதங்களுக்கு  இது வொர்த் இல்லை மக்களே. தர டிக்கெட் ரேஞ்சுக்கு எமனின் திசை மேற்கு  கதைய சொல்ல ட்ரை பண்ணினேன்.அடுத்த வாரிசு கதையோட சாயல் இருப்பதால் இதையும் அடுத்த  வாரிசையும் கம்பேர் பண்ணி இருக்கேன்.  நல்லா இருக்கா இல்லையான்னு  நீங்க தான் சொல்லணும். இந்த பதிவு ஒரு அவுட் லைன் மட்டுமே கொடுக்கும், முழு கதைக்கும் அணுக வேண்டிய முகவரி இது . 


____________________________________________________________________________________________________

எப்படி இந்த கதையை சொல்வது என்று யோசித்து கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டு ஆட்டோ அண்ணா வந்தார். அவர் கொஞ்சம் காமிக் கானில் தென்பட்ட “வொல்வேரின் அண்ணா” சாயலில் பெரிய மீசையுடன் கருப்பாக குண்டாக இருப்பார். கையில் ப்ளேடு மட்டும் இல்லை. இனி நீங்கள் எங்களுக்குள் நடந்த உரையாடலைத்தான் கேக்க போகிறீர்கள்.
____________________________________________________________________________________________________

ஆட்டோ அண்ணா: என்ன ஒரே யோசனையா இருக்கிற மாதிரி இருக்கு.

நான்: ஆமா அண்ணா ஒரு குழப்படியான கதை. எப்படி சொல்லுரதுன்னு யோசிச்சு கிட்டு இருக்கேன்.

ஆட்டோ அண்ணா: இது ஒரு பெரிய விஷயமா. எங்கிட்ட சொல்லு.   முதல்ல ஒரு லைன்ல கதைய சொல்லு.

நான்: அண்ணா , இந்தகதயோட ஒரு லைன் சொல்லன்னும்னா “தான் யாருன்னு தெரியாம,தன்னை மாதிரியே நடிக்க போனவனின் கதை”. இது மாதிரி கேள்வி பட்டிருக்கீங்களா ?
  
ஆட்டோ அண்ணா : தமிழ்ல இதே கதையோட எத்தனை சினிமா இருக்குன்னு தெரியுமா? அடுத்த வாரிசுன்னு ரஜினி படம். ஸ்ரீதேவியோட ரோல் தான் இந்த ஹீரோவுக்குன்னு நினைக்கிறேன் . அதையும் இதையும் கம்பேர் பண்ணலாம். நீ மேல சொல்லு.

நான்: ஹீரோ வோட அப்பா அம்மாவை அமெரிக்க ஆதிவாசிகள் கொன்னுடுரானுங்க. நம்ம ஹீரோ அநாதை ஆகிடுராறு.

ஆட்டோ அண்ணா : அமெரிக்கவில ஆதிவாசியான்னு ஜெர்க் ஆனவர், “தம்பி அங்க எல்லாம் கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு இங்கிலீஷ் பேசுறவன் தான் இருப்பான்னு நினச்சேன் என்றவர் பரவாயில்லே விடு , அந்த படத்திலயும் ஒரு திட்டமிட்ட விபத்தில்  ஸ்ரீதேவியோட அப்பா அம்மா இறந்துடுவாங்க.

நான்: அப்புறம் ஹீரோவை ஒரு தச்சர் எடுத்து வளர்க்கிறார்.

ஆட்டோ அண்ணா : இங்க வி கே ராமசாமியும் மனோரமாவும் எடுத்து வளர்க்கிறாங்க.

நான்: அப்புறம் அந்த தட்சரோட சொந்த பையன் தன்னோட பண தேவைக்காக நம்ம  ஹீரோவை ஒரு காணாமல் போன பையனா நடிக்க சொல்லுறாரு. அதாவது நம்ம  ஹீரோவாகவே நடிக்க சொல்றாரு. அந்த தட்சருக்கோ அவர் பையனுக்கோ இந்த ஹீரோ  யாருன்கிறது தெரியாது. நம்ம ஹீரோவும் சின்ன வயசுன்னால, தான் யாருன்னு தன்னை பற்றி மறந்துடுராறு. அதனால நம்ம ஹீரோவும் தன்னை எடுத்து வளர்த்தவங்களுக்காக நடிக்க ஒத்துக்கிடுராறு.

ஆட்டோ அண்ணா : இங்கயும் பணத்துக்காக வி.கே.ராமசாமி ஸ்ரீ தேவியை ஒத்துக்க வைப்பாரு. ஸ்ரீதேவிக்கும் தான் யாருன்னே தெரியாம தன் ரோலிலேயே நடிக்க போகும்.

நான் : அவர் அண்ணன், அவரை ஆதிவாசிகள் இடத்திலிருந்து தூக்கி வந்ததாக ஒருத்தர் கிட்ட சொல்லுறாரு , அவர் யாருன்னா ஹீரோவோட சித்தப்பா. அந்த சித்தப்பா, ஹீரோவோட குடும்பமே இல்லன்னா அவங்களோட பண்ணை மற்றும் சொத்துக்களை தானே அனுபவிக்லாம்னு ஹீரோவை தீர்த்து கட்ட தான் வருகிறாரு.

ஆட்டோ அண்ணா : இங்க  திவான் செந்தாமரை தீர்த்து கட்ட நினைப்பாரு.

நான்: ஹீரோவோட அண்ணன் ஹீரோவ சும்மா கட்டி போட்டுட்டு சித்தப்பாவை கூட்டி கொண்டு போய் காமிக்கிறாரு.ஹீரோவோட சித்தப்பா, மொதல்ல சாட்சியான தட்சரோட பையனை கொன்னுட்டு ஹீரோவ கொல்ல வரும் போது ஹீரோ சின்ன பையனா இருந்தாலும் சுதாரிக்கிட்டு சித்தப்பாவை சுட்டுறார். அந்த சண்டையில ஹீரோவோட இடது கையில் குண்டு  பாய்ந்து விடுது. அங்க இருந்தா கொலை குற்றத்துக்கு தூக்கிலே போட்டுடுவாங்கன்னு பயந்து வேற மாநிலத்துக்கு போறாரு. போகும்போது தன் சித்தப்பா காண்பித்த தன் அப்பா அம்மா போட்டோ இருக்கும் கடிகாரத்தை (அது தன் அப்பா அம்மான்னு தெரியாமலேயே) எடுத்துகிட்டு போறாரு, கை செலவுக்கு ஆகும்ன்னு. அப்போ சித்தப்பாவோட பொண்ணு  இவர பாத்துடுது. கையில் பாய்ந்த  தோட்டாவால் முழங்கை வரை எடுக்க வேண்டிய சூழ்நிலை.

 பிறகு அங்கு அவருக்கு வைத்தியம் பார்த்த ஆளிடம் துப்பாக்கி சுட பழகி கொண்டு 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே ஊருக்கு வருகிறார். ஹீரோ சின்னபையனா இருந்த காரணத்தினால் , தான் தான் அந்த பண்ணைக்கு வாரிசுன்னு தெரியாமல், வாரிசு மாதிரி நடிக்க வருகிறார். அவரிடம் இருக்கும்  அந்த வாட்சை காட்டி வாரிசாகி விடலாம்ன்னு ஐடியா. உடனே பண்ணைக்கு போகாமல் வேலை தேடி வந்த மாதிரி அந்த ஊரில் இருந்து கொண்டு பின்னால் அந்த கடிகாரத்தை அந்த ஊரில் யாருக்காவது தெரியுற மாதிரி வைத்தால், அந்த ஊர்க்காரர் அதை பார்த்து விட்டு நம்ம பண்ணையார் வாரிசு  நீதான்னு சொல்லி கூட்டிக்கிட்டு போகிடுவாங்கன்னு நினைப்பு.

ஆட்டோ அண்ணா : ஆலிவுட்காரன் தெளிவானவன்  இந்த பிட்ட நைசா சொருகிட்டா   அடுத்த வாரிசு கதை இல்லன்னு சொல்லிடலாம்ல   என்று சொல்ல, நான் அவரை "இந்தாளு தெரிந்து சொல்றாரா   தெரியாம சொல்றாரா" ன்னு அவரையே வெறித்து விட்டு சொல்ல ஆரம்பித்தேன்.

நான்: ஊருக்கு வந்தவுடன் முதல் வேலயா அந்த ஊர் இன்ஸ்பெக்ட்டர போய் பார்த்து வேலை கேட்குராறு. அவரும் உனக்கு ஒத்த கையா  இருந்தாலும் நான் உனக்கு வேலை குடுகிறேன்னு சொல்லறாரு. பேங்க் வாட்ச்மன் வேல. ஒத்த கைய வச்சு இவன் என்ன செய்ய முடியும்னு நினைக்கிறாரு இன்ஸ்பெக்டர். ஏன்னா  அவருக்கும் பேங்க்ல கொள்ளை அடிக்குரவங்களுக்கும் ஒரு லிங்க் இருக்கு. இந்த மாதிரி சொத்த ஆள  பேங்க் குக்கு போட்டுட்டு இன்ஸ்பெக்டர் எங்கயாவது போய்டுவாரு. அந்த சமயம் கொள்ளைக்காரர்கள் ஊருக்குள் வந்து பேங்க் கை கொள்ளை அடிச்சுட்டு இன்ஸ்பெக்டருக்கு ஒரு பங்கை வெட்டிடுவாங்க. ஆனா நம்ம ஹீரோ இருக்கிற இடத்தில அதெல்லாம் முடியுமா ? டுமீல் டுமீல்ன்னு சுட்டு பாங்கை கொள்ளையடிக்க வந்த கும்பலை தனியாளா விரட்டிடுராறு. கொள்ளை கூட்ட பாசை தவிர எல்லா கொள்ளயரையும் கொன்னுடுராறு. அந்த சண்டை போடும் போது அப்ப பேங்க் க்கு பணம் டெபொசிட் பண்ண வந்த சித்தப்பா வோட பொண்ண காப்பத்துராறு. அந்த பொண்ணு மேல கண்டதும் காதல். 

ஆட்டோ அண்ணா : இன்னாது தங்கச்சிய காதலிக்குரான்னு ஜெர்க் ஆனார்.  

நான் : அண்ணா, தான் யாருன்னே அந்த பயலுக்கு தெரியாது, அதனால் அது தன் சித்தப்பா மகள் என்றும் தெரியாது என்ற பிறகு சமாதானம் ஆனார். அப்புறம் தப்பிச்சு போன கொள்ளை  கூட்ட பாஸ் ஒரு நாள் நைட்   இன்ஸ்பெக்டரை பார்க்க வந்ததை பார்த்து அவனயும் போட்டு தள்ளிடுராறு. இப்போ அந்த இன்ஸ்பெக்டர்,  கொள்ளை கூட்டம் கூட தன் லின்க்கை ஹீரோ யாருட்டயாவது போட்டு குடுத்துட போறான்னு காண்டாகிடுராறு.   அதனால இன்ஸ்பெக்டர் ஹீரோவா, ஊர விட்டு வெளிய போன்னு சொல்லிடுறாரு. இவரும் தான் காப்பாத்தின பொண்ணுகிட்ட போய் வேலை கேட்டு, தான் பண்ணையோட வாரிசாக முடிவெடுத்து ஊருக்கு  வெளிய இருக்கிற பண்ணையில போய் வேலை செய்யுறாரு. இவரு நினைச்ச மாதிரியே அங்கே வேலை பார்க்கும் டாக்டர் அந்த வாட்சையும் அதில் இருக்கும் போட்டோவையும் பார்த்து விட்டு அவன் தான் அந்த பண்ணையின் வாரிசுன்னு சொல்லுறாரு. இதுக்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரான்னு ஹீரோ ஒரே ஜாலி ஆகிடுராறு. ஒரே பிரச்னை என்னன்னா இவர் வாரிசுன்னு ஆனதால் அந்த பொண்ணு  சித்தப்பா பொண்ணுகிறதால தங்கச்சி ஆகிடுது. இவருக்கு சொல்லவும் முடியல மெல்லவும் முடியல.

இப்படி இருக்கும் போது காண்டான இன்ஸ்பெக்டர் என்ன பண்ணறாருன்னா, இந்த ஹீரோ பயல்  மேல எதாவது கேஸ் இருக்கான்னு பார்க்கும் போது, கொலை குற்றமே இருக்கு. ஆஹான்னு அந்த பொண்ணு கிட்ட போயி இவன் உங்க அண்ணன் கிடையாது உங்க அப்பாவ கொலை பண்ண ட்ரை பண்ணினவன்னு சொல்லி,  உயர் அதிகாரிகள் கிட்ட பெர்மிசன் வாங்கி நம்ம ஹீரோவை என்கவுண்டர்ல போட்டு தள்ளிடுராறு. மனசு கேட்காம அந்த பொண்ணு சாகபோகிற நிலையில் இருக்கிற ஹீரோவ தாங்கி பிடிச்சு கண்ணீர் விடுது.   

ஆட்டோ அண்ணா : என்னப்பா கதை இது. இதவிட அடுத்த வாரிசே நல்லா இருக்கும். "ஆசை நூறு வகை வாழ்வில் நூறு முறை வா" ன்னு ரஜினி பாட்டாவது பாத்திருக்கலாம்.  

நான் : இருங்க அண்ணா இன்னும் முடியல. கடைசியா ஒரு திருப்பம். அந்த இன்ஸ்பெக்டர் வயசாகி சாக கிடைக்கும் போது அந்த பொண்ண கூப்பிட்டு "அந்த பயல் நிஜமாவே உன்னோட பெரியப்பா புள்ள தான். நான் தான் வேணும்னே சொல்லாம  விட்டுட்டேன்னு" சொல்லி  ஓஹோஹோ ன்னு சிரிக்கிறான். 

ஆட்டோ அண்ணா: தம்பி இது வொரு திருப்பமா? தமிழ் சினிமான்னா இத எப்படி எடுத்திருப்பாங்க தெரியுமா ?

நான்: எப்படி?

ஆட்டோஅண்ணா: தம்பி, ஹீரோ ஊருக்கு திரும்பி வந்து கொள்ளை கூட்டத்தை ஒழிக்கிற வரைக்கும் கதைய அப்படியே வச்சிக்கோ. அவர் பண்ண கன் பைட்ட பார்த்துட்டு அவங்க மாமன் பொண்ணு காதலிக்க ஆரம்பிச்சிடுது.    மாமன் மகளோட கண் பைட்டுக்கு முன்னாடி மயங்கி போய் ஹீரோ டூயட் பாடுறாரு.   இன்ஸ்பெக்டரும் அந்த மாமன் பொண்ண டாவடிசுகிட்டு இருப்பாரு. ஹீரோவோட  டுயட்ட   பார்த்தவொடனே மரண காண்டாகிடுராறு.    

காண்டான இன்ஸ்பெக்டர் என்கௌண்டர் பண்ண வரும் போது, ஒரு சேசிங் அப்புறம் ஒரு பைட்டு. கடைசியில நம்ம ஹீரோ இன்ஸ்பெக்டரை என்கௌண்டர் பண்ணிடுறாரு. சாகப் போற நிலைமையில் இன்ஸ்பெக்டர் மனம் திருந்தி "இவன்தான் உண்மையான பண்ணயரோட மகன்னு" சொல்லிட்டு உயிரை விட்டுடுராறு.  உடனே ஊர் மக்கள் பாடுற "பண்ணையாரு பாதம்   ட்டா நாலு போகம் விளையுமடி"ன்னு ஒரு சாங்கோட நிறுத்தி கும்பிட்ட கை ஒன்னு திரையோட கீழ இருந்து மேல வந்து "A Film by Van Hamme" போட்டா நம்ம
ஊருக்கு ஓடும்னு சொல்ல நான் "அண்ணா" என்று சாஷ்டாங்க நமஸ்க்காரம்  செய்தேன்.             

* என்னால் முடிந்த அளவுக்கு அலைன்  பண்ணி இருக்கேன். இதுக்கு மேல என்னால முடியல மக்களே. பதிவு அடிக்கிற நேரத்துக்கு மேல அலைன் பண்ணுறதுக்கு நேரமாகுது. 

Post Comment

16 comments :

 1. பதிவு நகைச்சுவையோடு ஒரு ஜாலி ஆட்டோ பயணமாக இருந்தது.
  இரண்டு கதைகளையும் ஒப்பிட்ட விதம் நன்றாக இருந்தது.
  அதுவும் அந்த ஆட்டோ டிரைவரின் இறுதிக்காட்சி செம கலாய்..
  பதிவின் அலைன்மன்ட் நன்றாக தெளிவாக இருந்தது.
  ரொம்ப மெனகெட்டிருகிரீர்கள்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. //"தான் யாருன்னு தெரியாம, தன்னை மாதிரியே நடிக்க போனவனின் கதை"// - அட இது நல்லா இருக்கே! :)

  அப்ப மரண நகரம் மிசெளரி எந்தப் படத்தோட கதைன்னும் நீங்களே சொல்லிருங்க! :D

  ReplyDelete
 3. @கிருஷ்ணா வ வே : நன்றி கிருஷ்ணா . சௌந்தரின் பதிவில் உங்கள் இளைய வயது புகைப்படம் பார்த்தேன். ரொம்ப சமர்த்து பையனாக இருக்கிறீர்கள்.

  @Msakrates : நன்றி நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்வது பள்ளி காலம் வரை அப்படிதான் ஆசிரியர்களை ஏமாற்றிக்கொண்டு இருந்தேன்.

   Delete
 4. //“தான் யாருன்னு தெரியாம,தன்னை மாதிரியே நடிக்க போனவனின் கதை”// இது நல்லா இருக்கே! :)

  ReplyDelete
 5. @கிருஷ்ணா வ வே : ரொம்ப நல்லவேன்னு நானும் நம்பிட்டேனே :D

  ReplyDelete
 6. @ கார்த்திக் : அசிஸ்டன்ட் டைரெக்டர் கத சொல்லற மாதிரி இருக்கா. அடுத்த வாரிசு கதையா ரொம்ப ஓவர்ன்னு சொல்லி இருந்தீங்க. கொஞ்சமாச்சும் ஒற்றுமை இருக்கா? :D

  ReplyDelete
 7. எதுக்கும் அந்த ஆட்டோ அண்ணாவை ஐஸ் புடிச்சு வச்சிக்கங்க, ராஜ் குமார்! பிற்காலத்தில் அவர் ஒரு பெரிய தெலுங்குப்பட டைரக்டரா வர வாய்பிருக்கு! :-)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி விஜய். நிச்சயமாக ஆட்டோ அண்ணா பெரிய ஆளாக வருவார். :-)

   Delete
 8. //என்னப்பா கதை இது. இதவிட அடுத்த வாரிசே நல்லா இருக்கும். "ஆசை நூறு வகை வாழ்வில் நூறு முறை வா" ன்னு ரஜினி பாட்டாவது பாத்திருக்கலாம்.//வான் ஹாம்மே படித்திருக்க வேண்டும் இந்த பதிவை ... :-)

  பிரபல பதிவர் ப்ளேட் கார்த்திக்கு போட்டியா ஆள் வந்தாச்சு :-) நகைச்சுவை அருமை ராஜ்குமார் அவர்களே.


  ஆட்டோ அண்ணாவின் ஒவ்வொரு கவுன்ட்டர் வசனங்களும் அருமை.

  எந்தப் பக்கம் போனாலும் அணைக்கட்டுரானே என்று வடிவேலு போல் நீங்கள் (நான் என்ற Character) மனதிற்குள் புலம்பியிருக்க வேண்டும் ஆட்டோ அண்ணாவின் குறுக்கு வசனங்களால் :-)

  ReplyDelete
  Replies
  1. //பிரபல பதிவர் ப்ளேட் கார்த்திக்கு போட்டியா ஆள் வந்தாச்சு :-) நகைச்சுவை அருமை ராஜ்குமார் அவர்களே.//

   ஏங்க ஏன்? நல்லா தான போய்க்கிட்டு இருக்கு ? குடும்பத்துல கும்மி அடிச்சுராதிங்க

   Delete
  2. நகைச்சுவை அருமை ராஜ்குமார் அவர்களே.


   //ஆட்டோ அண்ணாவின் ஒவ்வொரு கவுன்ட்டர் வசனங்களும் அருமை.

   எந்தப் பக்கம் போனாலும் அணைக்கட்டுரானே என்று வடிவேலு போல் நீங்கள் (நான் என்ற Character) மனதிற்குள் புலம்பியிருக்க வேண்டும் ஆட்டோ அண்ணாவின் குறுக்கு வசனங்களால் :-)//

   நன்றி நண்பா.

   Delete
 9. ஹி..ஹி.. சூப்பர்.

  பாவம் ஆட்டோ அண்ணாக்கு பிளட் பிளட் காதில ;)

  hollywood.mayuonline.com

  ReplyDelete
  Replies
  1. //பாவம் ஆட்டோ அண்ணாக்கு பிளட் பிளட் காதில ;)//

   எனக்கு தாங்க ப்ளட் வந்தது அவரு சொன்ன கடைசி பாராவ கேட்டு.

   Delete