மரணத்தின் முத்தம்- Modesty Blaise

மரணத்தின் முத்தம்- Modesty Blaise

ரத்தப் படலம் (மறுபடியும் மொதல்ல இருந்தா ) - ஆகாயத்தில் அட்டகாசம் (ஆகா அட்டகாசம்))சம் (ஆகா அட்டகாசம்)

ரத்தப் படலம் (மறுபடியும் மொதல்ல இருந்தா ) - ஆகாயத்தில் அட்டகாசம் (ஆகா அட்டகாசம்))சம் (ஆகா அட்டகாசம்)

தஞ்சை பயணம் : குடி மகன்களுடன் ஒரு குண்டக்க மண்டக்க...

தஞ்சை பயணம் : குடி மகன்களுடன் ஒரு குண்டக்க மண்டக்க...

ஜில் ஜில் கல்யாணம் - பாகம் 2

ஜில் ஜில் கல்யாணம் - பாகம் 2

All New - Almost New Special - அலசல்

All New - Almost New Special - அலசல்

விஜய் டிவி : என் தேசம் என் மக்கள் ~ சியர்ஸ் ~ தமிழ்க் "குடி" மக்களின் குடி வரலாறு

விஜய் டிவி : என் தேசம் என் மக்கள் ~ சியர்ஸ் ~ தமிழ்க் "குடி" மக்களின் குடி வரலாறு

வில்லனுக்கோர் வேலி - காமெடிப் புல்வெளி

வில்லனுக்கோர் வேலி - காமெடிப் புல்வெளி

விஜய் டிவி : நீயா நானா VS கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்...

விஜய் டிவி : நீயா நானா VS கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்...

Never Before Special : NBS : புலி வால் பிடித்த டைகர்

Never Before Special : NBS : புலி வால் பிடித்த டைகர்

Never Before Special : NBS : ஷெல்டன் - ஒரு போராளியின் கதை

Never Before Special : NBS : ஷெல்டன் - ஒரு போராளியின் கதை

Never Before Special : வாழ்க்கையையே பங்கு சந்தையில் பணயம் வைத்த அமெரிக்க பில்லினியர்

Never Before Special : வாழ்க்கையையே பங்கு சந்தையில் பணயம் வைத்த அமெரிக்க பில்லினியர்

Never Before Special மாலை : காமிக்ஸ் பதிவர்கள் வாசகர்கள்

Never Before Special மாலை : காமிக்ஸ் பதிவர்கள் வாசகர்கள்

கும்கி - இசை அனுபவம்

மைனாவிற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கும் படம், சிவாஜியின் பேரன், பிரபுவின் மகன் விக்ரம் நடிக்கும் படம்,முழுக்க காட்டுக்குள்ளேயே எடுக்கப் பட்ட படம் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பை இந்த படம் கிளப்பி இருக்கிறது.

வெங்கட் பிரபுவின் போங்காட்டம் - கோலிவுட் கிங்

வெங்கட் பிரபு நடத்தும் கோலிவுட் கிங் நிகழ்ச்சியையும் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் அதில் அவர் நடத்தும் போங்காட்டம் ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. ரூல்ஸை முதலிலேயே சொல்லவில்லை. நேரில் சொன்னார்களோ என்னவோ தெரியாது.

அருணாச்சலம் ஆஸ்டெரிக்ஸ் (Asterix and the Cauldron)

அருணாச்சலம் ஆஸ்டெரிக்ஸ் (Asterix and the Cauldron)...

ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல் (Not a Penny More Not aPenny Less - By Jeffrey Archer

ஓட்டை கம்பனியை உருவாக்கி ஏமாற்றி ஒரு மில்லியன் டாலர் தட்டுகிறான் ஹார்வே மெட்கால்ஃப்.அவனால் வஞ்சிக்கப்பட்டவர்கள் அவனிடம் இருந்து அதே வழியில் அவனை ஏமாற்றி ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல் பெற்றார்களா இல்லையா என்பதுதான் இக்கதை.

எமனின் திசை மேற்கு – மனதை உலுக்கிய ஒற்றைக்கை வீரன் - ஓவிய பதிவு

எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் சில புத்தகங்களை படிப்போம். படித்து முடித்து விட்டு நிமிர்ந்தால் அது நம் மனதை உலுக்கி இருக்கும். ச்சே இவ்வளவு நாள் இதை படிக்காமல் விட்டு விட்டோமே என்று தோணும். அப்படி தோண வைத்த புத்தகம் தான் “எமனின் திசை மேற்கு”.

மரண நகரம் மிசெளரி - பல்கோண பார்வை

டைகர் ஒரு MGR டைகர் MGR ஸ்டைலை பின் பற்றுகிறார். 1 ) தாய் குலங்களை மதிக்கிறார். ஒரு பெண் அவரை எதிரியிடம் காட்டி கொடுத்திருந்தாலும் அந்த பெண்ணை தன் படைகள் சீரழிக்காத வண்ணம் காக்கிறார். 2 ) முதியவர்களிடம் மரியாதையாக நடந்து அவர்களை காக்கிறார். 3 ) எதிரிக்கும் அவன் போரிட ஒரு வாய்ப்பு கொடுக்க முயல்கிறார்.

ஆஸ்டரிக்ஸ் அண்ட் ஓப்ளிக்ஸ் - அறிமுக படலம்

"ஆஸ்டரிக்ஸ் அண்ட் ஓப்ளிக்ஸ்" காமிக்ஸ் தமிழில் எந்த காமிக்ஸிலும் இதுவரை வெளிவரவில்லை என்றே நினைக்கிறேன். இருந்தால் பின்னுட்டமிடவும். இந்த ஹீரோக்களை பற்றி நான் முதன் முதலில் ஒரு திரைப்படம் மூலமாகவே அறிந்து கொண்டேன். "இம்சை அரசி கிளியோப்பாட்ரா" என்று ஒரு படம், அந்த படத்தில் இவர்கள் அடித்த கூத்துக்களை பார்த்து இவர்களைப் பற்றி தேடும் போதுதான், இவர்கள் காமிக்ஸில் இருந்து திரைப்படம் போனவர்கள் என்று அறிந்தேன்.

காலம் மாறினால் காமிக்ஸ் ரசனை மாறுமோ ?

காமிக்ஸ் சின்ன பிள்ள சமாசாரம் என்பவர்கள் பலரும் எங்களால் இதை படிக்க முடியாது என்று சொல்வது சூப்பர் ஹீரோ கதைகளைத்தான். நானும் என்ன காரணமாக இருக்கலாம் என்று சிறிது ஆராய்ந்த போது

பு(து)த்தகம் : முடிவில் ஒரு திருப்பம் (A Twist in the Tale )

இந்த கதை Jeffrey Archer எழுதிய "A Twist in the Tale" என்ற சிறு கதை தொகுப்பின் தமிழாக்கமான "முடிவில் ஒரு திருப்பம்" என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்ட முதல் கதை. இந்த கதையின் பெயர் "குற்றமற்ற கொலை".

தங்க கல்லறை – உள்ளது உள்ளபடி

நான் தங்க கல்லறையைப் பற்றி கேள்வி பட்டது, மரண நகரம் மிசெளரி பற்றி பதிவு எழுதிய போது தான் போது தான்.வந்தவுடன் எல்லாராலும் கொண்டாடப்படும் என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்லை விட பதிவர்கள்,வாசகர்கள் என்று அனைவரும் அடித்து துவைத்து காய போட்டிருப்பது தங்க கல்லறையை தான்.

தங்க கல்லறை - விமர்சனம்

தங்க கல்லறை நான் மிக எதிர் பார்த்த ஒரு புத்தகம். டைகர் ரசிகர்களால் சிலாகிக்கப் பட்ட ஒரு புத்தகம்.மொழி பெயர்ப்பு சரியில்லை, எழுத்து பிழைகள் என்று வாசகர்கள் சிலர் குமுறியதற்கு காரணம் டைகர் மேல் வைத்திருக்கும் அபிமானமே ஒரு நல்ல கதை சில குறைகளால் சிதைந்து போக கூடாது என்ற எண்ணமே காரணம்.

Saturday, January 14, 2017

வன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)

என் மன வானில்
பதினாறில் பதினேழு போஸ்ட் வாயிலாக 31 ம் தேதியே புது இதழ்கள் வர போகிறது என்றவுடன் இருப்பு கொள்ளவில்லை. ஏங்க சனிக் கிழமை போய் பொங்கலுக்கு துணி எடுத்துதுட்டு வந்துடுவோம்ன்னு வீட்டு அம்மணி சொன்னதுக்கு தலையாட்டி இருந்தது நினைவுக்கு வந்தது. கொரியர் காரன் எப்போ வந்து தொலைக்க போறானோ ? பேசாம துணி எடுக்கிறத ட்ராப் பண்ணிடலாமான்னு நினைத்தேன், ஆனால் அதனால் இடி, மின்னலாக வரும் பின் விளைவுகளை  எண்ணி பேசாமல் இருந்து விட்டேன். வழக்கமாக கோரியர்காரர் மதியம் மூணு மணிக்கு மேல்தான் கதவை தட்டுவது வழக்கம். சரி ஆனது ஆகட்டும்ன்னு துணி எடுக்கப் போய்விட்டு வந்தாச்சு. வந்து சற்று கண் அயரலாம்ன்னு படுத்தால் நினைத்த மாதிரியே 3 .45 கதவை தட்டினார் கொரியர் அண்ணன் (ஹி ஹி கையில் காமிக்ஸ் வாங்கும்போது அவர் ஒரு தேவதை மாதிரி தெரிவது எனக்கு மட்டுமில்லை என்று நினைக்கிறேன்). பார்சல் பெரிதாக இருக்கவே சரி surprise கிப்ட் டெய்லி காலெண்டர்தான் என்று நினைத்துக் கொண்டு திறந்தேன்.

ட்யுராங்கோ

முதலில் பார்த்தது ட்யுராங்கோவைத்தான். பார்த்ததும் வாவ் என்று வாயை பிளந்து விட்டேன்.  அடடா என்ன ஒரு தரம். அப்படி ஒரு மேக்கிங் முன் பின் அட்டைப் பட கலரிங்கும் சூப்பர். பள பளவென்று இருக்கும்  ஹீரோவின் படமும் எடுப்பாக இருந்தது. முன் பின் அட்டையில் இருந்த கோடுகளும் வளைவுகளும் தொட்டுப் பார்த்தால் உணரும் வண்ணம் இருந்தது அருமை. தரத்தை பார்த்து ரெண்டு மூணு தடவை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தேன். புத்தகத்தின் உள் அட்டை தாள் மற்றும் அதை தொடர்ந்து வரும் சாதாரண வெள்ளை கலர் தாள்கள் இந்த புத்தக மேக்கிங்குக்கு பொருத்தமாக இல்லை. வழு வழு தாளையே அல்லது முடியாத பட்சத்தில் வேறு கலரிலாவது  போட்டிருக்கலாம். என்னடா முன் அட்டையில் கதாநாயகனுக்கு முகத்தையே காணோமே என்று யோசித்துப் பார்த்தால் ஒரிஜினல் ஓவியமே அப்படிதான்.

சரி ட்யுராங்கோ ஆள் எப்படி ? கவ்பாய்  கதைகள் நமக்கு பிடிக்காமல் போகுமா? சரியாக சொன்னால் தலைவன் டைகருக்கும் டெக்ஸ்ஸுக்கும் நடுவே இருக்கிறார். யதார்த்தமாக கதை செல்வது  இவரின் சிறப்பு.நான்கு பாகங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் முதல் பாகத்திலேயே வலது கையில் சுடப் படுகிறார். துப்பாக்கி வீரருக்கு வலது கை  எவ்வளவு முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்க்கு அப்புறமும் எப்படி சாகசம் செய்கிறார் என்பதை எதார்த்தமாக சொல்லப் பட்டிருக்கிறது.          

ப்ளூ கோட்ஸ்

நம் தமிழ் சினிமாவில் கதாநாயன் அவர்கூடவே வரும் காமெடியன் செட்டப் தான் இந்த ப்ளூ கோட்ஸ் கதாநாயகர்கள்.கதா நாயகனுக்காக   அடிவாங்கும்போது  காதலில் அடி வாங்கிறதுல்லாம் சகஜம்டா ன்னும் நாயகன் சொல்ல "உன் காதலுக்கு நான் ஏன்டா அடி வாங்கணும்ன்னு " கொந்தளிக்கும் காமெடியன்தான் ஸ்கூபி. கசாப்பு கடையில் வேலை பார்க்கும் ரூபியும் , பாரில் வேலை பார்க்கும் ஸ்கூபியும் எப்படி பட்டாளத்தில் சேர்க்கிறார்கள் என்பதே கதை. கதை வழக்கம்போல புன்னகைக்க வைத்தது. எடிட்டர் இந்த ப்ளூ கோட்ஸ் பட்டாளத்தை அதிக எண்ணிக்கை கொடுக்காமல் இந்த வருடம் ஓரம் கட்டியதில் வருத்தம் எனக்கு.  


டெக்ஸ் ஆவியின் ஆடுகளம்

டெக்ஸ் ஆவியுடன் நேருக்கு நேர் மோதி ஜெயிக்கும் கதை. ஆவியை சுட முடியாவிட்டாலும் கட்டிப் பிடித்து, கட்டிப்  புரண்டு, வலு கொண்ட முஸ்ட்டியால் கும் கும் என்று நாலு விட்டால் பறந்து போய் விட போகிறது, ஆவியாவது நீராவியாவது  என்றெல்லாம் நினைத்துக் கொண்டு படிக்க ஆரம்பிக்க வேண்டாம். மந்திர  மண்டலம் படித்த பின் நாலு நாள் வேப்பிலை அடித்த பிறகு சரியானதால், கொஞ்சம் காதில் பூ சுற்றலாக இருக்குமோ என்ற நினைப்புடன் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் இது பக்கா டிடெக்டிவ் கதை. 

சரியாக சொன்னால் "திகில் நகரில் டெக்ஸ்" மாதிரியான கதை. அட எழுதும் போதுதான் நினைவுக்கு வருகிறது இது அதே கதைதான். தமிழ் சினிமாவில் ஒரே கதை வேறு டிரீட்மென்ட் என்பார்கள் அதே மாதிரிதான் இது. ஆனால் குறை சொல்லக் கூடாது அவ்வளவு நன்றாக இருந்தது. டெக்ஸ் உண்மையை வரவழைக்க திடீரென ஒரு கட்டுக் கதையை சொல்ல ஆரம்பிக்க, அதை சமாளிக்க முடியாமல் "அவன் பாட்டிற்கு அள்ளி விட்டால் என்ன சொல்லி சமாளிப்பது" என்று கார்சன் திணறும் அந்த சம்பவம் நன்றாக இருந்தது. தனுஷ் விவேக் காமெடி (ஆடிட்டராய் இருப்பார்) நினைவுக்கு வந்தது. சார் வாஷிங்க்டன் வெற்றிவேல் உங்க பிரன்ட் என்று சொன்னவுடன் முழி முழியென்று முழிப்பார் அதே மாதிரி கார்சன் முழிப்பது செம காமெடி

இயந்திரத்தலை மனிதர்கள்

பழைய கதைகள் கொஞ்சம் தயக்கத்துடன் வாசிக்க ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் இந்தக் கதை ரொம்ப ஜவ்வு போடாமல் காதில் பூ சுற்றும் ரகம் என்றாலும் ( இதே மாதிரி ஏலியன் அட்டாக் பற்றி மினிமம் ஒரு  பத்து திரைப் படங்களாவது பார்த்திருப்பதால் ) பெரிதாக தெரியவில்லை. நம் சின்ன வயதில் வந்த கதை என்று நினைவில் இருத்தி பார்த்தால் அந்த கால கட்டத்தில் நாம் இதை படித்தால் நம் கற்பனை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது

மாத காலெண்டர்

மாத காலெண்டர் அருமை. வன்மேற்கின் வேங்கை என்ற டைட்டிலோடு டைகரின் படம் அருமை. நண்பர் சௌந்தரின் பிறந்த மாதத்திலேயே டைகர் படம் வந்திருப்பது ஆச்சர்யம். நீ கலக்கு தம்பி. 

டெக்சின் படத்தை சின்னதாக போடாமல் அரை பக்கத்துக்கே போட்டிருக்கலாம். இளவரசி மாடஸ்டியின் படமும் அருமை க்ளாஸிக் ஆக இருந்தது. லக்கி படம் சொதப்பல் பின்னால் இருக்கும் படத்தை மறைத்துக் கொண்டு பெரிய படம் அதுவும் நன்றாக இல்லை.

இந்தா காமிக்ஸ் காலெண்டர் என்று வீட்டில் காட்ட, ஏற்கனவே கீர்த்தி  சுரேஷ் காலெண்டர் வாங்கி மாட்டி இருக்கீங்க இது வேறயா? ன்னு எகிற. ஹி ஹி நான் இதை ஆபிசுக்கு கொண்டு போய்டுறேன்னு வெள்ளை கொடி காட்டினேன்.  

சென்னை புத்தக கண்காட்சி

சனி காலை மருத்துவமனைக்கு சென்று விட்டு மதியம் மூன்று மணிக்குத்தான் வீட்டுக்கு வந்து படுத்தேன். மாலை ஆறு மணிக்கு எழுந்து  கண்காட்சி போனேன். ஈயோட்டிக் கொண்டிருந்தது கண்காட்சி. நேரே நம் ஸ்டாலுக்கு போனேன். எப்பவும் சாரை சுற்றி  10 பேர் நின்று கொண்டிருப்பார்கள். அன்று கம்மிதான்.

ஸ்டாலின் உள்ளே ஒரு பெண் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். சரி யாரோ ஒரு காமிக்ஸ் வெறியர் சாரை சுற்றி நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டே உள்ளே சென்றேன். சூப்பர் 6 ஆரம்பித்த புதிதில் கொஞ்சம் மட்டுமே அடிக்கப் போகிறோம் வெளியே கிடைக்காது என்று சார் சொல்லி இருந்தார். அப்போதும் அதில் வரும் எல்லா புத்தகங்களும் தேவை இல்லை என்பதால் எப்படியும் கண்காட்சிக்கு வரும் வாங்கி கொள்ளலாம் என்று விட்டு விட்டதால் அதை முதலில் தேடினேன், கிடைக்கவில்லை.

ஸ்டாலில் மாயாவி சிவா வருபவர்களுக்கு  நிறைய உதவிகளை செய்து கொண்டிருந்தார். புனித சாத்தானும், ஈரோடு டெக்ஸ் பூனை விஜய்யும், ஷல்லும் பெர்னாண்டன்சும்  நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். விஜயன் சாரிடம் நான் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்த கேள்விகளை கேட்டேன்.

கேள்வி 1  : ரத்தக் கோட்டை  எப்போது வரும் ?
பதில்        : வரும் சார். இத்தனை புத்தகம் வருது அதற்க்கு மேல்தான் அதை பார்க்க வேண்டும் என்ற மழுப்பலான பதிலே கிடைத்தது.

கேள்வி 2  : ரத்த படலம் எப்போது வரும் ?
பதில்        : இதற்கும் சரியான பதில் இல்லை.
ஆனால் அப்போது நான் நினைத்தது ஈரோட்டில் ரத்தக்  கோட்டையும்  2018 இல் ரத்தப் படலமும் வரலாம் என்று நினைத்தேன். அதே போல   சமீபத்திய பதிவில் நம்மிடம் கேள்வி கேட்டிருக்கிறார். ரத்தப் படலத்தை
மின்னும்மரணம் போல ஒரே புத்தகமாக கொடுக்க வேண்டாம் படிக்க கஷ்ட்டமாக இருக்கிறது என்றேன். அதையும் ஒத்துக் கொண்டார், மின்னும் மரணமும் வாசகர்களின் கோரிக்கைக்காகவே ஒரே புத்தகமாக கொடுக்கப் பட்டது.
 
கேள்வி 3  : ப்ளூ கோட் பட்டாளத்தை ஏன் ஒதுக்குகிறீர்கள்? நிறைய ஸ்லாட் கொடுக்கலாமே ?
பதில்        :  கொடுக்கலாம் சார். படிக்க வாசகர்கள் ரெடியா இல்லையே.  கார்ட்டூன் கதை என்றால் கட்டத்துக்கு கட்டம்  சிரிப்பு இருக்கவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். சேல்ஸ்  இந்த  சீரிஸ் ரொம்ப கம்மி. என்றார்.

இன்னும் 60+ புத்தகங்கள் இருக்கும் இந்த தொடர் இப்படி ஓரங்கட்டப் படுவது தேவையா?

என் மகனுக்கும் மகளுக்கும் லியோனார்டோ தாத்தா ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன்.
     

மறுநாள் ஞாயிற்று கிழமை சாயங்காலம் மற்ற புத்தக ஸ்டால்களில் நேரத்தை செலவிட்டேன். நண்பர் பென்ஹர் ஒரு டெக்ஸ் புக் தருவதாக சொல்லி இருந்தார். போன் பண்ணி கண்காட்சிக்கு வந்து கொடுத்து விட்டு போனார். நன்றி நண்பரே  சரி 8 மணிக்கு மேல் போய் லக்கி சூப்பர் சிக்ஸ் இருக்கா என்று பார்த்தேன். முத்து  பேன் தயாளன் சார் எடுத்துக் கொடுத்தார்.

சரி.வீட்டிற்கு கிளம்பலாம் என்று நினைத்த போது சரவணன் என்ற அன்பர் "சார், நீங்க ராஜ் முத்து குமார் தானே? என்றார். நீங்க எழுதுற ப்லோக் படிப்பேன் என்றார்.மடிப்ப்பாக்கம் வெங்கடேஸ்வரன் அறிமுகப் படுத்தினார் என்றார்.இந்த ஊர் நம்மை இன்னுமா பிளாக் எழுதுறவன்னு நம்பிக் கொண்டிருக்குன்னு" நினைச்சவாறே அறிமுகப் படுத்திக் கொண்டேன். வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு நல்ல காமிக்ஸ் ரசிகரை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி. வியாபாரத்தில் நேரமில்லாமல் இருந்தாலும்  ரிலாக்ஸ்  பண்ண காமிக்ஸ் தான் படிப்பேன் என்றார். சந்தா கட்டி விட்டு புத்தகத்தை வாங்கி வீட்டில் அடுக்கி விட்டு படிக்காமல் இருக்கும் அன்பர்கள் கவனிப்பார்களா?

ஓவிய பார்வை

1 ) ட்யுராங்கோ

 மேக்கிங் சூப்பர். ஆனால் உள் தாள் சொதப்பல். கோட் ஸூட் போட்ட போட்ட கனவான் வாயை திறந்தால் சென்னை தமிழில் பேசுவது மாதிரி இருந்தது  
2) மரண தேவன் பின்னே வர முன்னே வரும் கழுகுகள் 


3) பனியில் இருக்கும் போது சற்று வெள்ளை மற்றும் நீல கலரிலும், வீட்டின் உள்ளே இருக்கும்போது தீயின் சிகப்பு மஞ்சள் நிறத்தில் இருப்பதை பாருங்கள்   4) பனியில் கதிரவன் 5) வன்மேற்கின் தெரு வீதி 


6) பண்ணை வீடு

7) பின்னணியில் உள்ள வண்ண சேர்க்கையை பாருங்கள் 


8) காட்டின்  பின்னணியில் ஒரு ஓவியம்


9) ஒரு பக்கத்தில் எத்தனை டுமீல் டுமீல்

10) தனிமையே என் துணைவன் என்று செல்லும் ட்யுராங்கோ. பின்னணி ஓவியத்தை பாருங்கள்

11) அட்டை பட ஓவியம்


12) கண்களுக்கு அடிக்கடி க்ளோஸ் அப் வருகிறது 13) யார் வர போகிறார்  என்ற எதிர்பார்ப்பும் வந்தவுடன் முகத்தில் தோன்றும் நிம்மதியும் குழப்பத்தையும் பாருங்கள் 15) மஞ்சளும் சிகப்பும் கலந்த நல்ல ஒரு வண்ணக் கலவையில் ஒரு பக்கம் 
16) பறவைப் பார்வையில் இரு நல்ல ஓவியங்கள்17) கார்சனின் முகபாவங்களை பாருங்கள் செம காமெடி


க்ளைமாக்ஸ்
ட்யுராங்கோ : மேக்கிங் சூப்பர் ஹீரோ பிடிச்சிருக்கு. நல்ல அறிமுகம்.
ஆவியின் ஆடுகளம் : டெக்ஸ் டிடெக்டிவாக மாறி ஆடும் ஆட்டம்
நானும் சிப்பாய்த்தான் : ப்ளூகோட்ஸின் ஆரம்பக் கதை அத களம் சூப்பர்
இயந்திர தலை மனிதர்கள் : காதில் பூ சுற்றினாலும் ரசிக்க வைத்தது

Post Comment

Saturday, October 8, 2016

லயன் காமிக்ஸ் சந்தா 2017 - ஒரு அலசல் (Lion Comics Subscription 2017- An Analysis)


என் மனவானில் 

ஒவ்வொரு வருடமும் சந்தா கட்டுவோமா வேணாமா என்கிற கேள்வி நம் எல்லார் முன்னும் நிற்கும். எல்லா வருடமும் ஒவ்வொரு மாதமும் கடைக்கு போய் வாங்குவவதற்கு கஷ்ட்டப் பட்டுக் கொண்டு,  சந்தா கட்டி விடலாம் என்றே முடிவெடுத்திருக்கிறேன். இந்த தடவை சரி கடையில் வாங்குவதற்கும் சந்தாவுக்கும் என்ன வித்தியாசம் மற்றும் புத்தக கண்காட்சியில் வாங்குவதற்கும் சந்தாவுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு Analysis போட்டு விடலாம் என்று நினைத்து போட்ட Analysis தான் இது.

இதில் நான் பண்ணிய Analysis வைத்து மட்டுமே பேசுகிறேன், யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ நான் பேசுவதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் கற்பனையே. 

தமிழ் நாட்டில் இருக்கிறேன், எல்லா புத்தகமும் வாங்குவேன் ஆனால் சந்தா கட்டுவதா, கடையில்வாங்குவதா,  புத்தக கண்காட்சியில் வாங்குவதா என்று தெரியவில்லை என்பவர்களுக்கு இந்த அலசல் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.  

இந்த அலசலில் 5 டேபிள் வருகிறது.Table #1 
 இந்த டேபிளில் ஒவ்வொரு சந்தாவிற்கும் எத்தனை புத்தகங்கள் ? அதில் கலர் புத்தகங்கள் எத்தனை? கருப்பு வெள்ளை எத்தனை? மொத்தம் எத்தனை என்று போட்டிருக்கிறேன். 

Table #2
இந்த டேபிள் 2017 அட்டவணையில் கடைசி பக்கம் வந்த சந்தா கட்டண அட்டவணை தான். 

Table #3
 இந்த டேபிளில் எந்தெந்த கதா நாயகர்கள் / நாயகிகள் எத்தனை புத்தகங்களில் எத்தனை பாகங்களில் வருகிறார்கள் என்று போட்டிருக்கிறேன். ட்யுராங்கோ வருவது ஒரு புத்தகத்தில் தான் ஆனால் 4 பாக கதை ஒரே புத்தகத்தில் வருகிறது. 

இந்த டேபிளை பார்க்கும்போதே தெரியும் இரவுக் கழுகு உயரே பறப்பது. டெக்ஸுக்கு மட்டும் 9 புத்தகங்கள். மற்றவர்களுக்கு அதிக பட்சம் 2 புத்தகங்கள் தான். வழி வழியாக நாம் வாசித்து மகிழ்ந்த சில கதாநாயகர்கள் இதில் இல்லை. முதலாவது கேப்டன் டைகர், இவர் இல்லாததற்கு இன்னும் கதைகள் இல்லாதது ஒரு காரணம். இன்னுமொரு காரணம் ரத்தக் கோட்டை தனி வெளியீடாக வரவிருப்பது. அனைவருக்கும் பிடித்த கேப்டன் பிரின்ஸ்க்கு ஒரு இடம் கூட கொடுக்காதது வருத்தம் அளிக்கிறது. இவரும் சூப்பர் சிக்ஸ்  புத்தகத்தில் வரவிருப்பதால் இங்கே கல்தா கொடுக்கப் பட்டிருக்கிறார்.  ட்யுராங்கோ மற்றும் லேடி S புது வரவுகள். 

Table #4
இந்த டேபிள் ஒவ்வொரு சந்தாவில் இருக்கும் புத்தகங்களை கடையில் வாங்கினால் எவ்வளவு ஆகும்?, புத்தக கண்காட்சியில் 10% தள்ளுபடியில் வாங்கினால் எவ்வளவு ஆகும்? என்று காண்பிக்கும். தனித்தனியாக சந்தா இல்லை என்பதால் அதை இங்கே நுழைக்கவில்லை.

Table #5

ரொம்ப முக்கியமான டேபிள். தமிழகத்துக்குள் இருக்கும் வாசகர்களே அதிகம் என்பதால் சந்தாவுக்கு அந்த  DTDC/ST கூரியர் விலைகளையே எடுத்துக் கொண்டுள்ளேன். நீங்கள் தமிழகத்துக்கு வெளியே இருந்தால் அதற்க்கேற்ப சந்தா விலை காலத்தில் மாற்றிக் கொள்ளவும் 

சந்தா A + B + C + D +E
என்னை ரொம்ப ஆச்சர்யப் படுத்தியது, சந்தா A + B + C + D +E தான். கடையில் வாங்குவதை விட சந்தாவில் 50 ரூ கம்மி. அதனால் எல்லா புத்தகமும் வாங்குவேன் ஆனால் புத்தக கண்காட்சி வரைக்கும் பொறுத்திருக்க முடியாது, மாதாமாதம் கடையில் வாங்கிருவேன் என்பவர்கள் கண்ணை மூடிக் கொண்டு சந்தாவை கட்டுங்க சாமியோவ். 

புத்தக கண்காட்சி வரைக்கும் வெயிட் பண்ணலாம் என்பவர்களுக்கு கிடைக்கும் லாபம் 385 ரூபாய் மட்டுமே. கண்காட்சிக்கு போக வர செலவு, அங்கே சாப்பாடு , ஸ்நாக்ஸ் , காபி , டீ, போனது வந்ததுன்னு வர்ற செலவுகளையும் பாருங்க அப்புறம் ஒரு முடிவுக்கு வாங்க. :-) 

சந்தா A + B + C + D 
சந்தாவுக்கும் கடையில் புத்தகத்தை வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம் வெறும் 50 ரூபாய் மட்டுமே. சந்தா - கடை என்ற காலத்தை பார்க்க. என்னை  பொ றுத்தவரை இதற்க்கு சந்தாவே பெஸ்ட் என்பேன் நான். 

சந்தாவுக்கும் புத்தக கண்காட்சியில் வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம் 420 ரூபாய். கண்காட்சி செலவுகளை மனதில் வைத்து முடிவு செய்யவும்.  

சந்தா A + B + C + E
சந்தாவுக்கும் கடையில் புத்தகத்தை வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம் வெறும் 5 ரூபாய் மட்டுமே. சந்தா - கடை என்ற காலத்தை பார்க்க. என்னைப் பொறுத்தவரை இதற்க்கும் சந்தாவே பெஸ்ட் என்பேன் நான். 

சந்தாவுக்கும் புத்தக கண்காட்சியில் வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம் 386.50 ரூபாய். கண்காட்சி செலவுகளை மனதில் வைத்து முடிவு செய்யவும்.  

சந்தா A + B + C 
சந்தாவுக்கும் கடையில் புத்தகத்தை வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம் வெறும் 85 ரூபாய் மட்டுமே.  என்னைப் பொறுத்தவரை இதற்க்கும் சந்தாவே பெஸ்ட் என்பேன் நான். 

சந்தாவுக்கும் புத்தக கண்காட்சியில் வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம் 401.50 ரூபாய். கண்காட்சி செலவுகளை மனதில் வைத்து முடிவு செய்யவும்.  

சந்தா E 
சற்று என்னை யோசிக்க வாய்த்த சந்தா இது என்பேன். சந்தாவுக்கும் கடையில் புத்தகத்தை வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம் 250 ரூபாய். வெறும் ஆறு புத்தகங்கள் உள்ள ஒரு சந்தாவிற்கு இது சற்று அதிகமே. குறைந்த பிரிண்ட் ரன் மட்டுமே, கடைகளில் கிடைக்காது எங்களிடம் மட்டுமே வாங்கமுடியும் என்ற கட்டாயத்தை எடிட்டர் வைத்திருக்கிறார். கட்டாயம் வாங்க வேண்டும் என்பவர்கள் சந்தா E வருமாறு ஏதாவது ஒரு சந்தா காம்போவை தேர்வு செய்யலாம்.  எப்படின்னாலும் புத்தக கண்காட்சிக்கு இதை கொண்டு வந்துருவாரு பாருங்க என்பவர்கள் கண்காட்சி வரை வெயிட் பண்ணலாம். 

க்ளைமாக்ஸ் 
சரி என்னதான் முடிவா சொல்லவர்றிங்கன்னு கேட்டா, நீங்க எல்லா புத்தகத்தையும்   வாங்குவேன்ன்னு சொல்ற ஆளா இருந்தா சந்தா கட்டுவதுதான் பெஸ்ட். 

எனக்கு ஒரு சில கதாநாயகர்கள் மட்டுமே பிடிக்கும் அல்லது மறு மதிப்பு நாயகர்கள்  மட்டும் பிடிக்கும் அவர்கள் புத்தகம் மட்டுமே வாங்குவேன்  அல்லது நான் வாங்கும் புத்தகங்களின்  எண்னிக்கை கம்மி என்பவர்கள் உங்கள் காத்திருப்பின் வலிமையை பொறுத்து கடையிலோ புத்தக கண்காட்சியிலோ வாங்கி கொள்ளுங்கள். அம்புட்டுதேன். :-)

Post Comment

Saturday, January 9, 2016

மரணத்தின் முத்தம்- Modesty Blaise

என் மன வானில்

நார்மலாக மாடஸ்ட்டி கதைகள் மேல் அவ்வளவு சுவாரஸ்யம் இருப்பதில்லை.  மாடஸ்ட்டி ஒரு வெட்டு வெட்டினாள், அவன் வெட்டுண்ட மரம் போல சாய்ந்தான்.கார்வின் காங்கோவை பிரயோகித்தார் அவன் கதை முடிந்தது என்பது போன்ற வர்ணனைகளும் மாடஸ்ட்டியின் ஜிம்னாஸ்டிக் போஸ்களும் எனக்கு (எனக்கு மட்டுமே - இப்படி சொல்லலன்னா மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன் என் மேல் கேஸ் போட்டு விடுவார்) அவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பதில்லை. இல்லை ஒரு ஆணாதிக்க மனோபாவத்தில் இருக்கிறேனா என்பதும் தெரியவில்லை.

சில கதைகள் நம்மை தூங்க விடாது, என்ன வேலை இருந்தாலும் போஸ்ட்டப் போடுன்னு தொல்லை பண்ணும். அந்த மாதிரி ஒரு கதை தான் இந்த "மரணத்தின் முத்தம்".  மாடஸ்ட்டி கதையில் கார்வினையே சைடு ஆக்டர் மாதிரி பயன் படுத்துவார்கள். ஆனால் இந்த கதை முழு முதல் நாயகன் சுப்ரீம் மாஸ்டர் சராகம்தான். கதை ஆரம்பிப்பதும் அவரிடம் தான் முடிவதும் அவரிடம் தான். 

அந்த க்ளைமாக்ஸ் அடடா ஒரு சீன அல்லது ஜப்பானிய படத்தை பார்த்தது போல் ஒரு விறுவிறுப்பு. StandStill எனப்படும்  மன அசைவிலா நிலை  தான் தியானத்தில் போற்றப்படும் நிலை. அப்படி ஒரு நிலையை அடைந்ததால் தான் சுப்ரீம் மாஸ்டர் ஆகிறார் சராகம்.

ஒரு வேளை மாடஸ்ட்டியை கேட்காமல் வேறு ஒரு சாதாரணமான பெண்ணை கேட்டிருந்தால் அவர் பேத்தியைக் காப்பாற்றி விட்டு, சண்டையிட்டு உயிர் துறந்திருப்பார் என்பது என் அனுமானம்.

மாடஸ்ட்டி தன் மாஸ்ட்டரை புரிந்து கொள்ளும் இடம்.

மாடஸ்ட்டிக்கும் கார்வினுக்கும் என்ன ஒரு பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா டிரஸ்? மாடஸ்ட்டியை கோடஸ்ட்டி ஆக்கின மாதிரி ஆக்கிபுட்டாரா?                 

மாஸ்டர் தன் மாணவியைப் பற்றி பெருமிதம்  கொள்ளுமிடம்

 சீன பட சண்டை காட்சி போல ஒரு ஓவியம்

 மாஸ்ட்டர் சராகமின் கையை கவனியுங்கள், எவ்வளவு தளர்வாக இருக்கிறது. அடிப்பதற்குள்ள எந்த ஏற்பாடும் இல்லை.மாஸ்ட்டர் சராகமின் கையை கவனியுங்கள், எவ்வளவு தளர்வாக இருக்கிறது. அடிப்பதற்குள்ள எந்த ஏற்பாடும் இல்லை. காரணமில்லாமலா கைக்கு க்ளோஸ் அப் போட்டிருப்பார் ஓவியர்    
 தான் அவனை கொல்லவிருக்கும் காரணத்தை விளக்கும் மாஸ்ட்டர்


 கீழுள்ள முதல் படத்திலும் அவர் கை தளர்வாகவே இருக்கிறது.  கீழுள்ள முதல் படத்திலும் அவர் கை தளர்வாகவே இருக்கிறது.  ரெண்டாவது படத்தில் ஒரே அடி, அடி வாங்கியவன் உடல் கீழே விழுமுன் உயிர் பிரிகிறது.

இப்படிப்பட்ட மன ஆற்றல் இருப்பதாலேயே மாடஸ்ட்டி ஒரு இடத்தில மாஸ்ட்டர் முன் நாம் அற்பமானவர்கள் என்பாள்.


க்ளைமாக்ஸ் 

இதுதான் ஒரு கருப்பு வெள்ளை புத்தகத்திற்கு நான் போட்ட முதல் போஸ்ட் என்று நினைக்கிறேன். சுப்ரீம் மாஸ்ட்டர் சராகம் நம் மனதில் என்றும் இருப்பார். 

Post Comment

Saturday, November 14, 2015

4 டேபிள் உணவகங்கள் (Hajeera's Kitchen, Peungudi, Rayar Mess, Mylapore)

4 டேபிள் உணவகங்கள்

அது என்ன 4 டேபிள் உணவகங்கள் என்கிறீர்களா? நாளே நாலு சாப்பாட்டு மேஜை இருக்கும்  அதில் ஒவ்வொன்றிலும் நாலு பேர் சாப்பிடலாம். முன்னர் இந்த மாதிரி உணவங்களை மெஸ் என்று அழைப்பார்கள். இப்போதும் கூட சில இடங்களில் உண்டு. கடந்த வாரம் அந்த மாதிரி ரெண்டு உணவகங்களில் உணவருந்தினேன். அங்கே என் அனுபவமும் அவற்றை பற்றிய ரெவ்யுவும் தான் இந்த பதிவு.

1) ஹாஜீராஸ் கிச்சன் (Hajeera's Kitchen, Perungudi)

எனக்கு ஒரு பார்சல் வரவேண்டி இருந்தது. அதற்காக பெருங்குடி ப்ளூ டார்ட் ஆபிசுக்கு 8.30 PM போனேன். சார் 6.30 க்கு தான் இங்கே வந்தது இன்னமும் பேகை பிரிக்கல. எப்படியும் 10 மணி ஆகிடும் நீங்க போயி சாப்பிட்டு வாங்க என்றார் பணியாளார். சரி எங்க சாபிடலாம்னு நினைக்கும்போது Where Chennai Eats என்ற பேஸ்புக் குருப்பில் ஹாஜீராஸ் கிச்சன் பற்றி போட்டிருந்தது சரி கூகுளை தேடுவோம் என்று பார்த்தால் அவர்கள் போட்டிருந்த படம் தெளிவாக இல்லை. அந்த நம்பருக்கு போன் அடித்தேன் தெளிவாகவும் மரியாதையாகவும் பதில் சொன்னார்கள்.

எங்கே இருக்கு ?

 
 
OMR இல் அப்பலோ ஹாஸ்பிடல் (பழைய லைப் லைன் ஹாஸ்பிடல்) அருகில் பிரியும் M.G.R சாலையில் 300 மீட்டர் தொலைவில் இடது கைபக்கம் முதல் மாடியில்.
 

 
போனவுடன் நாளே நாலு டேபிள் இருந்ததுதான் டக்கென்று கண்ணில் பட்டது.  AC க்கு நேரில் அமர்ந்தால் சீக்கிரம் சாப்பாடு ஆறிவிடும் என்பதால்  (நாங்கல்லாம் அப்பவே அப்பிடி )AC க்கு  எதிரில் இருக்கும்  டேபிளில் அமர்ந்தேன்.

Where Chennai Eats குருப்பில் சொல்லி இருந்தவர் சொன்னபடி ஒரு காம்போ ஆர்டர் பண்ணினேன்( முஸ்லிம்  மட்டன் பிரியாணி + சிக்கென் 65 -3 பீஸ்  + ஸ்வீட் ) விலை 240 ரூ.  சார் ஸ்வீட் இல்லை அதுக்கு பதில் இன்னும் ரெண்டு பீஸ் சிக்கென் 65 குடுத்துரட்டுமா என்றார். தெய்வமே ! அத  குடுமையா என்றவுடன் சிறிது நேரத்தில் சுட சுட பிரியாணி வந்தது.  என்னடா Starter சிக்கென் 65 குடுக்காம இத குடுக்கிறானே ன்னு நினைச்சுக்கிட்டே ஒரு வாய் பிரியாணியை எடுத்து வாயில் போட்டேன். WOW என்று நான் சொல்ல ஆரம்பித்தது கடைசி வாய்  வைக்கும்வரை ஒவ்வொரு வாய்க்கும் அந்த WOW சொல்லவதை என்னால் நிறுத்த முடியவில்லை. 20 வருடங்களுக்கு முன் சென்னை வந்தேன். அன்றிலிருந்து இது வரை இப்படி ஒரு பிரியாணியை சென்னையில் சாப்பிடவில்லை. பாதி பிரியாணி காலி ஆனவுடன் 65 வந்தது சுடச்சுட. சிக்கென் 65 நான் தவிர்ப்பதற்கு காரணம் எண்ணையில் பொரித்து  ரப்பர் மாதிரி இருக்கும். மசாலா உள்ளே இறங்கீருக்காது. ஆனால் அந்த மாதிரி எந்த பிரச்னையும் இல்லை சாப்ட்டாக ஜுசியாகவும் இருந்தது. யப்பா இந்த மாதிரி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு.  

நான் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போதே நிறைய பேர் பார்சல் வாங்கிக் கொண்டு போனார்கள். 7 பேர் வந்து முன்னால் இருந்த ரெண்டு டேபிளை ஒன்றாக்கி போட்டு உட்கார்ந்து சாப்பிட்டார்கள். பெருங்குடி அன்பர்கள் கொடுத்து வைத்தவர்கள் . இவ்வளவு நன்றாக இருந்தும் ரூ 240 தான் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. VFM I strongly Recommend.

என் Suggestions

1) பிரியாணியை பிளாஸ்டிக் பாத்திரத்தில் தராமல் நல்ல காப்பர் பாத்திரத்தில் தரலாம்.
2) கடை மெனுவையும் , கடைக்கு வர வேண்டி நீங்க கொடுத்திருக்கும் மேப்பையும் தெளிவா போடுங்கள் .
3) இன்னும் பெரிய இடத்துக்கு போகலாம், பெருங்குடி நல்ல இடம், சற்றே பெரிய இடமாக இருந்தால் நன்றாக இருக்கும்

 2) ராயர் மெஸ் (Rayar Mess, Mylapore)

 

Zamoto  வில் 4 ஸ்டார் வாங்கிய மெஸ் இது. போன ஞாயிறு மழையுடன் அதி காலையில் மருத்துவரைப் பார்க்க மயிலாப்பூர் சென்றேன். மருத்துவரைப் பார்க்க முடியாமல் சரி ஏதோ ஆஹா ஓஹோன்னு சொல்றாங்களே ன்னு அருண் டேல் தெருவில் இருக்கும்  ராயர் மெஸ் போனேன். சரி மழை பெய்யுது கூட்டம் இருக்காதுன்னு பார்த்தா கூட்டம் கண்ணைக் கட்டுது. அம்புட்டும் ஹிந்தி வாலாக்கள். முதலில் வாயிலில் இருந்த ஒரு பையன் எத்தனை பேர் சார் என்று கேட்டு எழுதிக் கொண்டு ரெண்டாவது பந்தியில் தான் உங்க முறை வரும் சார் என்றான். சரின்னு மழைக்கு ஒதுங்கி நின்றேன்.

 எதிரில் ஒருத்தன் இளம் பொண்டாட்டியை இந்த மெஸ்சுக்கு கூட்டி வந்து விட்டு எப்பொ வேணாம் வேற எங்கயாவது சாப்பிடுவோம்ன்னு சொல்லிருவாலோன்னு   பதறிக்கிட்டு இருந்தான். அவள் கவனத்தை திசை திருப்ப செல்ல விளையாட்டு வெலயாண்டுக்கிட்டு இருந்தான்.  ஆண்டவா இவன் நமக்கு முன்னாடி உக்காரக் கூடாதுன்னு நினச்சேன். ஆனால் அந்த ஜோடி முன்னாலேயே உக்கார வேண்டி இருந்தது. அட ராமா.  மெஸ் உள்ளே போனால் நெருக்கமாக 4 டேபிள் மட்டுமே இருக்கிறது. ஒரு வீட்டின் ஹாலை அப்படியே டைனிங் ஹால் ஆக்கி விட்டார்கள் . பக்கத்திலேயே கிச்சன்  இருக்கிறது.

காலையில் வெண் பொங்கல், இட்லி , வடை மட்டுமே என்றார்கள். எல்லோரும் அமர்ந்தவுடன் இலை போட்டு பொங்கல் வைத்தார்கள். சாம்பார் ஊத்தினார்கள். ரெண்டு வாய் வைத்தேன் பிடிக்கவில்லை. பொங்கலை தனியாகவும் சாம்பார் தனியாகவும் சாப்பிட்டு பார்த்தேன். சாம்பார்  உறைப்பு இல்லாமல் பிளான்டா இருந்தது.  சாம்பார் பொடி இல்லாமல் வைத்தால் எப்படி இருக்குமோ அந்த சுவையே இருந்தது. வடையும் கட்டி சட்னியும் நன்றாக இருந்தது. ஆனால் ஆகா ஓஹோ வெல்லாம்  இதுக்கு ரொம்பவே ஓவர். பச்சை மிளகாயை அரைத்து சட்னி செய்திருந்தார்கள். ஒன்னும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்த மெஸ்சுக்கு நாலு ஸ்டார் ரொம்பவே ஓவர். கடைசியாய் வந்த காபி நன்றாக இருந்தது.

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவுடன் ஓனர் வெளியே வந்து காசு வாங்கி கொள்கிறார். காலையில் 6-9 AM மற்றும் மாலையில் 3-6 PM  மட்டுமே கடை. மாலையில் ஸ்வீட், அடை, மைசூர் போண்டா உண்டு.
3 பொங்கல் +6 வடை + கெட்டி சட்னி +1 இட்லி + 1 இட்லி பொடி சேர்த்து ரூ 107. விலை பரவாயில்லை என்றாலும் டேஸ்ட் இல்லை.

 ஹிந்தி வாலாக்கள்

சாப்பிட்டு விட்டு நொந்து போய்   வெளியே நின்று கொண்டிருந்த போது பக்கத்தில் இந்த இந்திக் காரனிடம் பேச்சு கொடுத்தேன். ரொம்ப நல்லா இருக்கு சார் என்றான். எனக்கு பிடிக்கவில்லை என்றதும் ஏன் என்றான். சாம்பாரை சொன்னேன், உடனே நீங்க ஆந்திராவா என்றான் இல்லப்பா பச்சை தமிழன் என்றதும், இல்ல ஆந்திராக் காரங்க தான் ரொம்ப ஸ்பைசியா  எதிர் பார்ப்பாங்கனான். ஒநாக்குல வசம்ப வச்சு தேக்க ன்னு நெனச்சுகிட்டு நடையை கட்டினேன்.  சென்னையில்  வடநாட்டுக்காரன் இருக்கிற வரை இந்த மெஸ் ஓடும்.  

ஹாஜீராஸ் கிச்சன் :WOW
ராயர் மெஸ்               : No
 

Post Comment

Sunday, November 1, 2015

உள்ளம் கவர் கள்வன் (Krishna : Defender of Dharma & Sundhara Kandam)


என் மன வானில்

பிளிப்கார்ட்டில்  கிராபிக் நாவல் என்று தேடும்போது இந்த கிருஷ்ணன் ஓவியத்தை பார்த்தேன். அப்படியே என்னை கவர்ந்து விட்டான் என் உள்ளம் கவர் கள்வன்.  சற்று சல்லிசாக கிடைக்கவும் வாங்கினேன். அதனுடன் சுந்தர காண்டம் என்ற அனுமனின் கி நா வும் கிடைக்க ரெண்டையும் அமேசானில் வாங்கினேன். 

ரெண்டே நாளில் வந்தவுடன்  கிருஷ்ணன் புத்தகத்தை நாள் முழுதும் புரட்டி பார்த்துக் கொண்டே இருந்தேன் அவ்வளவு அருமை. ஒவ்வொரு ஓவியமும். ஒவ்வொரு ஓவியத்தையும் செதுக்கி  இருக்கார்  மனுஷன் . ரூ 250  அட்டைப் பட ஓவியத்துக்கே சரியா  போச்சு . ஒரு மெஸ்மாரைசிங் ஓவியம் அது. ஒரு ஐந்து அந்த ஓவியத்தை உற்று பார்த்தால் கிருஷ்ணனுடன் நீங்கள் சினேகமாகி விடுவீர்கள். 

சுந்தர காண்டம் கிருஷ்ணன் அளவுக்கு இல்லாவிட்டாலும் நன்றாகவே இருந்தது. முக்கியமாக அட்டைபடம் அனுமனின் விஸ்வரூப தரிசனம் நன்றாக இருந்தது. கிருஷ்ணன் புத்தகம் ஓவிய காதலர்கள் ஒவ்வொருவரும் வாங்கி பாதுகாக்க வேண்டிய புத்தகம். ஓவியர்களும்   வாங்கி பயில வேண்டிய புத்தகம் அது. 

ஓவியப் பார்வை 

உருவாக்கிய மகானுபாவர்கள்  வெறி தெறிக்கும் கண்கள்

 ஆதி சேஷனும் ஆதியும்

 அனுபவித்து தூங்கும் கண்ணன்

விஷமக் குழந்தை 

 

நந்தலாலா 
 
காளிங்க நடனம் 

 கிருஷ்ண ப்ரேமம்

 சிவ தனுசை உடைக்கும் கண்ணன்


 மல்லர்களை துவைக்கும் கண்ணன் (தலை நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிய வில்லை)
 கம்ஸ வதம்


 கிருஷ்ண  உபதேசம்


 பீஷ்மரை ஹதம் பண்ண பாயும் கிருஷ்ணன்

 பிரம்மாஸ்திரத்தை அடக்கும் கண்ணன்

 சாபம் வாங்கும் போது அவரின் நீல நிறம் வெளிறி இருப்பதை பாருங்கள்

 மோகனக் கண்ணன் (என்னா ஓவியம்ப்பா)


 பரப்பிரம்மம்பிரம்மாண்ட அனுமன் 


அனுமன் வாயு புத்திரன் என்பதால் வாயுவாகி இருப்பது போல் அவருடைய உடலை வரைந்து இருப்பதை பாருங்கள். 

 இலங்கை தீ

 சற்று சோர்வாகி ரெஸ்ட் எடுக்கும் அனுமன் ஓவியத்தில் லைட்டிங்கை பாருங்கள்


 வருண தேவன்க்ளைமேக்ஸ் 
கிருஷ்ணன் புத்தகத்தை கண்ணை மூடிக் கொண்டு வாங்குங்க. இந்தியாவிலும் ஓவியத்திறமை இருக்கா என்பவர்கள் முகத்தில்  எறிய வேண்டிய புத்தகம் இது. சுந்தர காண்டத்தை நான் அப்லோடி இருக்கும் ஓவியங்கள்  பிடித்தால் வாங்குங்கள். 

Post Comment